Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

இன்று மகாவீர் ஜெயந்தி: இறைச்சி கடைகளை மூட உத்தரவு

Print PDF
தினமணி        24.04.2013

இன்று மகாவீர் ஜெயந்தி: இறைச்சி கடைகளை மூட உத்தரவு


மாகவீர் ஜெயந்தி தினத்தையொட்டி(ஏப்.24) அனைத்து வகையான இறைச்சிக் கடைகளையும் மூடுமாறு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:  புதன்கிழமை(ஏப்.24) மகாவீர் ஜெயந்தி கினத்தையொட்டி, இன்றைய தினம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆடு, மாடு, பன்றி, கோழிக்களை வதைசெய்யவும், அதன் இறைச்சியை விற்பனை செய்யவும் அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து வகையான இறைச்சிக்கடைகளையும் மூடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சி செயல்படுத்திவரும் ஆடுவதைக் கூடம் இத்தினத்தில் செயல்படாது. உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்வோர் மீது மாநகராட்சி மூலமாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
 

12 இடங்களில் புதிய நூலகங்கள் திறக்க நடவடிக்கை

Print PDF
தினமணி        24.04.2013

12 இடங்களில் புதிய நூலகங்கள் திறக்க நடவடிக்கை


ஈரோடு மாநகராட்சியில் 12 இடங்களில் புதிய நூலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, துணைமேயர் கே.சி.பழனிசாமி பேசினார்.

ஈரோடு மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக புத்தக தினவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் பேசியது:

வாசிப்பு பழக்கம் இப்போது குறைந்து வருகிறது. இப் பழக்கத்தை சிறுவயதிலேயே ஏற்படுத்த வேண்டும். எனது சொந்த ஊரான சூரியம்பாளையம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நூலகம் இயங்கி வருகிறது. சிறுவயதில் இருந்தே சரித்திர நாவல்களை முழுமையாகப் படித்திருக்கிறேன். பொதுவாழ்வுக்கு வர இதுபோன்ற நூல்கள்தான் அடித்தளமாக இருந்தன.

மாநகராட்சிப் பகுதியில் 10 நூலகங்கள் திறக்க உதவ வேண்டும் என்று மாவட்ட நூலக அலுவலர் கோரிக்கை விடுத்தார். 12 இடங்களில் நூலகங்களைத் திறக்க மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் நூலகங்கள் பற்றி தகவல் தெரிவித்தால் பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. இராமலிங்கம் கவனத்துக்கு கொண்டு சென்று, சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக, உலக புத்தக தினவிழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு புத்தகக் கண்காட்சியை துணைமேயர் கே.சி.பழனிசாமி தொடங்கி வைத்தார். மாவட்ட நூலக அலுவலர் (பொ) இரா.கோகிலவாணி, மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் முனைவர் ப.கமலக்கண்ணன், சிகரம் சிற்றிதழ் ஆசிரியர் சந்திரா மனோகரன், ஈரோடு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பழனிசாமி, 36-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.வெங்கடாசலம், முத்தம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட மைய நூலகர் சு.சுவாமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்!

Print PDF
தினமணி        21.04.2013

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்!


ஜெகதளா பேரூராட்சியில் 5 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் 40 மைக்ரான் எடைக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் தடையை மீறி விற்பனை செய்யும் பிளாஸ்டிக் பொருள்களை கைப்பற்ற மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்கின் உத்தரவின்பேரில், அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது கோடை சீசன் நேரமாக உள்ளதால் 40 மைக்ரான் எடைக்கு குறைவாக உள்ள அனைத்து வகையான பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கவர்கள், கப்புகள் மற்றும் பிளாஸ்டிக்கால் மூடப்பட்ட பேப்பர் பிளேட்டுகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆட்சியரின் நேர்முக உதவியர் (சிறுசேமிப்பு) அபுதா ஹனீப் தலைமையில் ஜெகதளா பேரூராட்சிக்கு உள்பட்ட அருவங்காடு பஜார், ஜெகதளா சாலை ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திடீர் சோதனையில் 7 கடைகளில் இருந்து 5 கிலோ 200 கிராம் பிளாஸ்டிக் கவர்கள், பேப்பர் பிளேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அபராதமும் விதிக்கப்பட்டன.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஜே.சரவணன் மற்றும் அலுவலர்கள் பாலகிருஷ்ணன், பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர். தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
 


Page 232 of 506