Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வீட்டு வாடகை படி உயரும் நகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF
தினமலர்        18.04.2013

வீட்டு வாடகை படி உயரும் நகராட்சி கமிஷனர் தகவல்


திண்டுக்கல்:அரசு பணியாளர்களின் வீட்டு வாடகை படி அதிகரிப்பதோடு, பல்வேறு சலுகைகளை கூடுதலாக பெறுவதற்கான வாய்ப்பு, மாநகராட்சி அந்தஸ்த்தினால் ஏற்படுமென திண்டுக்கல் நகராட்சி கூட்டத்தில் கமிஷனர் குமார் தெரிவித்தார்.அவர் பேசியதாவது: மாநகராட்சிக்கான தகுதிகள் குறித்து அதற்குரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அனைத்து அம்சங்களும் குறைவில்லாமல் இருப்பதாக அறிக்கை அளித்தபின்புதான் அரசு, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நகராட்சி, மாநகராட்சியாக மாறினால் அதற்கேற்ப வீட்டு வரி அதிகரிக்கப்படும் என்ற அச்சம் இயல்பாகவே மக்களுக்கு ஏற்படும்.

ஆனால், அப்படி வரி உயர்த்தப்படும் என்று எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொரு வரி உயர்வும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, பொருளாதார வளர்ச்சிக்கேற்ப 5 லிருந்து 10 சதவீதத்திற்குள் மட்டுமே அதிகரிக்கப்படும். இறுதியாக 2008ல் வரி உயர்த்தப்பட்டிருப்பதால், அடுத்து 2018ல் தான் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும். நகராட்சியைவிட மாநகராட்சிக்கு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிக அளவில் தரப்படும். குறிப்பாக நகராட்சிக்கு ரூ.5 கோடி என்றால், மாநகராட்சிக்கு அது, ரூ.50 கோடியாக அளிக்கப்படும். உலக பாங்க்கிலிருந்து 200 கோடி வரை கடன்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அரசு பணியாளர்களுக்கு வீட்டு வாடகை படி அதிகரிக்கப்படும். மாநகராட்சி அந்தஸ்த்திற்கான அனைத்து சலுகைகளையும் கூடுதலாக பெறமுடியும்.இவ்வாறு கமிஷனர் குமார், பேசினார்.
 

குடிநீர் கட்டண நிலுவை ரூ. 25 லட்சம் வசூல்: 7 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

Print PDF
தினமணி        18.04.2013

குடிநீர் கட்டண நிலுவை ரூ. 25 லட்சம் வசூல்:  7 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

கரூர் நகராட்சியில் குடிநீர் கட்டண பாக்கி ரூ. 25 லட்சம் வசூலிக்கப்பட்டு, அதிக நிலுவை வைத்துள்ள 7 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

கரூர் நகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ள வீடுகள், அரசு துறை, கல்வி நிறுவனங்கள் ஆகியவை சுமார் ரூ. 4.14 கோடி குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளன.

இதை விரைந்து செலுத்த வேண்டும், இல்லாவிடில் குடிநீர் இணைப்பு ஏப். 15 முதல் துண்டிக்கப்படும் எனவும் நகராட்சி அண்மையில் எச்சரித்தது. இதையடுத்து குடிநீர் பாக்கியை பலர் செலுத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 2 லட்சம் வசூலாகிறது என நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி கூறியது:

குடிநீர் கட்டண நிலுவை ரூ. 25 லட்சம் வசூலாகி உள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி, பணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அதிக அளவில் நிலுவை வைத்துள்ள 7 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாக்கியை செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கும் பணி தொடரும் என்றார்.
 

விதிமீறல் கட்டடத்துக்கு "சீல்'

Print PDF
தினமணி             18.04.2013

விதிமீறல் கட்டடத்துக்கு "சீல்'


மதுரை விநாயகர் நகரில் சாருமதி என்பவர் தரைத்தளத்துடன் கூடிய 2 மாடி, சுமார் 5 ஆயிரம் சதுர அடியில் கட்டியுள்ளார்.

இதற்கு, மாநகராட்சியில் 2 ஆயிரம் சதுர அடிக்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விதிமீறல் தொடர்பாக விளக்கம் கேட்டு உள்ளூர் திட்டக் குழுமத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிமையாளரிடமிருந்து பதில் வராத நிலையில், புதன்கிழமை உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் சங்கரமூர்த்தி, உதவி இயக்குநர் மரியதாசன், மேற்பார்வையாளர் ரவி, முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் ஆகியோர் அக்கட்டடத்துக்கு "சீல்' வைத்தனர்.
 


Page 236 of 506