Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வில்லிவாக்கம் மயான தகனமேடை செயல்படாது

Print PDF

தினமணி                 18.04.2013

வில்லிவாக்கம் மயான தகனமேடை செயல்படாது

வில்லிவாக்கத்தில் உள்ள மயான தகனமேடை ஏப்ரல் 21-ம் தேதி வரை செயல்படாது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநகராட்சி 8-வது (அண்ணா நகர்) மண்டலத்தில் உள்ள வில்லிவாக்கம் மயானத்தின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஏப். 18) முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை எரிவாயு மேடை இயக்கப்படமாட்டாது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 19 April 2013 07:12
 

பொது இடங்களில் இறைச்சி கழிவு கொட்டினால் நடவடிக்கை

Print PDF
தினகரன்         17.04.2013

பொது இடங்களில் இறைச்சி கழிவு கொட்டினால் நடவடிக்கை


கோவை: பொது இடங்களில் இறைச்சி கழிவு கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வா கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாநகராட்சி கமிஷனர் லதா வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 100 வார்டுகளில், மாநகராட்சி அனுமதி பெறாமல் கோழி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி கடைகள் இயங்கிவருகின்றன. இவைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் பொதுஇடங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

அனுமதி இல்லாமல் மற்றும் மாநகராட்சி உரிமம் பெறாமல் செயல்படும் இறைச்சி கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
 

பாலவாக்கத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட 2 மாடி கட்டிடத்துக்கு சீல் மாநகராட்சி நடவடிக்கை

Print PDF
தினகரன்                17.04.2013

பாலவாக்கத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட 2 மாடி கட்டிடத்துக்கு சீல் மாநகராட்சி நடவடிக்கை


துரைப்பாக்கம்: பாலவாக்கத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த 2 மாடி கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டபின் முதன்முதலாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிழக்கு கடற்கரை சாலையில் அரசின் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சிக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

மாநகராட்சி 185வது வார்டுக்குட்பட்ட பாலவாக்கம் கடற்கரை சாலையில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வந்த 2 மாடி கட்டிடம் உள்பட 6 கட்டிடங்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள்  நேற்று காலை அங்கு வந்தனர். பாலவாக்கம் கடற்கரை பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த மோகன் என்பவரின் 2 மாடி கட்டிடத்துக்கு சீல் வைத்தனர்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘கொட்டிவாக்கம் முதல் மாமல்லபுரம் வரை அனுமதி பெறாமல் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி கட்டப்படும் மற்றும் கட்டப்பட்டுள்ள கட்டிடம் பற்றி விவரம் சேகரித்து நடவடிக்கை எடுத்தால் மாநகராட்சிக்கு வருமானம் அதிகரிக்கும். எனவே, இதை அரசு ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
 


Page 237 of 506