Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

11 ஊராட்சிகள், வல்லம் பேரூராட்சி இணைக்க முடிவு

Print PDF
தினமணி        13.04.2013

11 ஊராட்சிகள், வல்லம் பேரூராட்சி இணைக்க முடிவு


தஞ்சை நகராட்சியில் 11 ஊராட்சிகளையும், வல்லம் பேரூராட்சியையும் இணைத்து மாநகராட்சியாகத் தரம் உயர்த்துவது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தஞ்சை நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என ஏப். 10-ம் தேதி சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, இந்த மாநகராட்சியில் இணைக்கப்படும் பகுதிகள் தொடர்பாக முடிவு செய்ய தஞ்சை நகர்மன்றத்தில் வெள்ளிக்கிழமை அவசரக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் பேசியது:

தஞ்சை நகராட்சியின் பரப்பளவு 36.33 சதுர கிலோ மீட்டர்.

இந்த நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2,22,619 பேர் உள்ளனர். நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ. 36.98 கோடியாக உள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை, பல்கலைக்கழகங்கள், அரசு மருத்துவக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகள், விமானப்படை தளம் போன்றவற்றால் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருப்புகள், விவசாயம் சார்ந்த தொழில்கள், தொழிற்சாலைகள் ஆகியவை அதிகரித்து வருகின்றன. எனவே, தஞ்சை நகராட்சியில் வல்லம் பேரூராட்சி, மாரியம்மன்கோவில், கத்திரிநத்தம், புதுப்பட்டினம், விளார், நாஞ்சிக்கோட்டை, இனாத்துக்கான்பட்டி, பிள்ளையார்பட்டி, நீலகிரி, ராமநாதபுரம், மேலவெளி, பள்ளியேறி ஆகிய 11 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகத் தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை அரசின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்படும்.

இதன்மூலம், மாநகராட்சியின் பரப்பளவு 128.02 சதுர கிலோ மீட்டராகவும், மக்கள்தொகை 3,51,655 எனவும், ஆண்டு வருமானம் ரூ. 43.19 கோடியாகவும் அதிகரிக்கும் என்றார் சாவித்திரி கோபால்.

இதையடுத்து, இந்தத் தீர்மானமும், தஞ்சை மாவட்டத்துக்குப் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 

பிளாஸ்டிக் பையில் உணவு வழங்க தடை கலெக்டர் உத்தரவு

Print PDF
தினகரன்        12.04.2013

பிளாஸ்டிக் பையில் உணவு வழங்க தடை கலெக்டர் உத்தரவு


திருச்சி: சமயபுரம் கோயிலில் தேர்திருவிழாவில்  பிளாஸ்டிக் பைகளில் உணவு வழங்க தடை விதித்து கலெக்டர் ஜெயஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தேர்திருவிழாவையொட்டி  உணவு விடுதி நடத்துவோர், அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011ன் படி முறையான அனுமதி பெற்று தரமான உணவு வழங்க வேண்டும். உணவு தயார் செய்ய பாதுகாப்பான குடி நீர், உணவு தயாரிக்கும் இடம் மற்றும் விநியோகம் செய்யும் இடம் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நிறமூக்கிகள், வாசனை பொருட்கள் சரியான அள வில் பயன்படுத்த வேண்டும்.

உணவை விநியோகிக்கும் முன்பு அதனை மாதிரி எடுத்து வைப்பது அவசியம். உணவு தட்டு மற்றும் பேப்பர் கப்புகளை சுற்றுப் புற சீர்கேடு இன்றி, பாதுகாப்பாக அப்புறப்படுத்த குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும்.

அன்னதானம் செய்வோர் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கக்கூடாது. உணவு தயாரிப்போர் மற்றும் பரிமாறுவோர் தன் சுத்தம் பேணுவது அவசியம். தாங்கள் வழங்கும் உணவினால் ஏற்படும் உபாதைகளுக்கு அவர்களே பொறுப்பு. மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் படும்.ராட்டினத்துக்கு அனுமதி தேவை

திருவிழாக்களில் ராட்டினம் அமைப்பதற்கு முன்பு அனுமதி பெறவேண்டும். ராட்டினம் உறுதியாகவும், சரியாகவும் இருக்கிறதா என்பதை பொதுப்பணித்துறை சான்று பெற வேண்டும். ராட்டினம் மின்சாரத்தால் இயக்கப்பட்டால் பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய சான்று தேவை எனவும் கலெக்டர் குறிப்பிட்டுள்ளார்.
 

எழுமலை பேரூராட்சியில் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடினால் கடும் நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை

Print PDF
தினகரன்        12.04.2013

எழுமலை பேரூராட்சியில் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடினால் கடும் நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை


உசிலம்பட்டி: எழுமலை பேரூராட்சியில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் கண்ணன் எச்சரித்துள்ளார்.

உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமும், மேக்கிழான்கிணறு மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பருவமழை பொய்த்ததால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. கோடைகாலம் காலம் துவங்கியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் சுழற்சி அடிப்படையில் வார்டு வாரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து பேரூ ராட்சி செயல் அலுவலர் கண்ணன் கூறியதாவது:

பேரூராட்சி பகுதியில் சிலர் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுவதாகவும், இதனால் கடைகோடி மேட்டு பகுதிக்கு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை என்றும் புகார் வந்துள்ளது. மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டால் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும். மேலும் சம்மந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 


Page 240 of 506