Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

புது பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டண கழிப்பறைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

Print PDF

தினகரன்                30.01.2014

புது பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டண கழிப்பறைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

தேனி,  : புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டண கழிப்பறைகள், வாகன காப்பகங்களை அமைக்க தேனி நகராட்சி நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தேனி பை-பாஸ் ரோட்டில் கடந்த 30ம் தேதி முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. ரூ.15.50 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பஸ் ஸ்டாண்டில் 67 கடைகள், 2 ஓட்டல்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், கட்டணக் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதிலிருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக அரசிடமிருந்து பெற்றுள்ள கடனை திருப்பி செலுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் தற்போது, காலியிடங்கள் அதிக அளவில் உள்ளன. எனவே, தனியார் சிலர் இங்குள்ள காலியிடத்தில் வாகன காப்பகங்கள், கட்டண கழிப்பறைகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் நகராட்சி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, இது குறித்து நகராட்சி நிர்வாகம் ஆலோசனை செய்தது.  இதன்படி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் கட்டணக் கழிப்பறை மற்றும் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடங்களை அமைக்க நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்தது.

நிபந்தனைகள்: தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920ன் படி, பஸ் ஸ்டாண்ட் அருகில் சுமார் 100 மீட்டருக்குள் தனியார் யாரும் கட்டணக் கழிப்பறைகளையோ, இரு சக்கர வாகனங்களை நிறுத்துமிடங்களையோ அமைக்கக் கூடாது என தேனி-அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 மீறி யாரேனும் கட்டணக் கழிப்பறை மற்றும் 2 சக்கர வாகனங்களை நிறத்துமிடங்களை நடத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது.

 

அரகண்டநல்லூரில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினத்தந்தி          29.01.2014 

அரகண்டநல்லூரில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூராட்சி கூட்டம்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் ஆர்.வாசிம்ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் ராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப் பட்டது. தொடர்ந்து அரகண்ட நல்லூரில் தினசரி ஏற்படும் போக்குவரத்து பிரச்சினைக்கு காரணமாக இருப்பது குறித்தும் விவாதிக் கப்பட் டது.

மதுக்கடையை அகற்ற தீர்மானம்

அப்போது கமிட்டியின் எதிரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங் களை ஓரமாக அமைத்திட மின்வாரியத்துக்கும், போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ள புளியமரங்களை வெட்டி அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத் துறைக்கும் கடிதம் அனுப்புவது எனவும், அதேபோல் கமிட்டியின் எதிர்புறம் டாஸ்மாக் மது பானக் கடைகள் உள்ள தால் விளை பொருட்களை விற்கும் விவசாயிகள் சிலர் அந்த பணத்தில் குடிக்க செல்வ தால் அவர்கள் வைத் திருக்கும் பணத்தை இழந்து விடுகின்ற னர். இந்த நிலையை போக்க டாஸ்மாக் கடையை உடன் அங்கிருந்து அகற்ற வேண் டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ரத்னா, ரியாசுதீன், கோபால், சாந்தீஸ் வரி, ஜோன்ஸ், சேகர், ரேவதி, தெய்வக்கன்னு உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

 

தேனி பழைய பஸ் நிலையத்தை மாற்று பயன்பாட்டுக்கு விட தீர்மானம்

Print PDF

தினமணி           29.01.2014 

தேனி பழைய பஸ் நிலையத்தை மாற்று பயன்பாட்டுக்கு விட தீர்மானம்

தேனி நகராட்சி பழைய பஸ் நிலையத்தை மினி பஸ் மற்றும் ஆம்னி பஸ் நிறுத்தமாக பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  தேனி அல்லிநகரம் நகர் மன்றக் கூட்டம் தலைவர் எஸ். முருகேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காசிமாயன், ஆணையர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  தேனியில் கடந்த 2013, டிச.30-ஆம் தேதி கர்னல் பென்னிகுயிக் நினைவு நகராட்சி புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்துக்கு வட்டார போக்குவரத்துத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏ பிரிவு அங்கீகாரம் வழங்கியுள்ளன.

தேனியில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த காமராஜர் நினைவு பழைய பஸ் நிலையத்துக்கு வழங்கப்பட்டிருந்த பி பிரிவு அங்கீகாரம் வரும் மார்ச் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் பழைய பஸ் நிலையத்துக்கு வழங்கியுள்ள அங்கீகாரத்தை மார்ச் 28-ம் தேதியுடன் ரத்து செய்து நகராட்சி நிர்வாகத்துக்கு வட்டார போக்குவரத்துத் துறை மற்றும்  மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளன.

 இந்த நிலையில், பழைய பஸ் நிலையத்தை மினி பஸ் மற்றும் ஆம்னி பஸ் நிலையமாக பயன்படுத்த வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு அனுப்புவதாக நகர்மன்றத் தலைவர் கூறினார்.

 கடந்த 2010-ஆம் ஆண்டு அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேனி புதிய பஸ் நிலைய அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டை, புதிய பஸ் நிலையத்தில் வைக்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். புதிய பஸ் நிலையத்தில் கல்வெட்டு அமைக்கும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டதாகவும், அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.

 


Page 25 of 506