Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் நிலைய கடைகள் ஏலம்: யாரும் ஏலம் கேட்க முன்வராததால் மறுஏலம்

Print PDF
தினமணி        11.04.2013

ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் நிலைய கடைகள் ஏலம்:  யாரும் ஏலம் கேட்க முன்வராததால் மறுஏலம்


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் நிலையக் கடைகளை வாடகைக்கு விடும் பொருட்டு நடத்தப்பட்ட ஏலத்தில் தொகை அதிகமாக கேட்கப்பட்டதால், யாரும் ஏலம் கேட்க முன்வரவில்லை.

ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் மொத்தம் 26 கடைகள் உள்ளன. இந்த கடைகளை மாத வாடகைக்கு விட கடந்த 2010 ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. அப்போது, போட்டி போட்டுக் கொண்டு ஏலத்தில் கலந்துகொண்டனர். எனவே, மாத வாடகை ரூ. 7,500 இருந்து ரூ. 24 ஆயிரம் வரை ஏலம் போனது.

ஆனால், ஏலத்தில் கடையை எடுத்தவர்கள் ஒரு சில மாதங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. அதன்பின்னர், நடத்த முடியாமல் நகராட்சி நிர்வாகத்திடமே கடைகளை ஒப்படைத்தனர். 26 கடைகளில் தற்போது 7 மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

அதேபோல், உணவு விடுதி மற்றும் கட்டணக் கழிப்பறை போன்றவற்றையும் ஏலம் எடுத்தவர்கள், அவற்றை நடத்த முடியாமல் நகராட்சியிடமே ஒப்படைத்தனர்.

இந்நிலையில், புதன்கிழமை பஸ் நிலையத்தில் உள்ள 19 கடைகள் மற்றும் உணவு விடுதி, கட்டணக் கழிப்பறை ஆகியவற்றை மாத வாடகைக்கு விட ஏலம் விடப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்பேரில், நகராட்சி அலுவலகத்தில் ஏலம் துவங்கியது.

ஆனால், நகராட்சி நிர்வாகம் நிர்ணயித்த மாத வாடகை அதிகமாக இருந்ததால், ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. இதனால் மறுஏலம் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

இது குறித்து, நகராட்சி ஆணையர் எம். ஜோதிக்குமார் கூறுகையில், இந்த ஏலத்தில் 90-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கடந்த முறை ஏலம் போன தொகை மற்றும் 12.5 சதவீத சேவை வரி சேர்த்து, ஒவ்வொரு கடைக்கும் ஏலத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. இதனால் மறுஏலம் நடத்தப்படும் என்றார்.
Last Updated on Monday, 15 April 2013 06:21
 

குடிநீர் வரவில்லையா? 13ம் தேதி புகார் செய்யலாம்

Print PDF
தினகரன்                 11.04.2013

குடிநீர் வரவில்லையா? 13ம் தேதி புகார் செய்யலாம்


சென்னை:    குடிநீர், கழிவுநீர் பிரச்னை, வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பான மனுக்களை 13ம் தேதி நேரில் கொடுத்து தீர்வு காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சந்திரமோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மாதந்தோறும் 2வது சனிக்கிழமை நடைபெறும் திறந்தவெளி கூட்டம், வரும் 13ம்தேதி காலை 10 மணி முதல் முதல் பிற்பகல் 1 மணி வரை, அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதி அலுவலகங்களில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தபட்ட பிரச்னைகள் மற்றும் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் குறித்த சந்தேகங்களை மனுக்கள் வாயிலாக விண்ணப்பித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பகுதி அலுவலக கூட்டமும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும். கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 33 மனுக்கள் பெறப்பட்டு, 31 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சந்திரமோகன் கூறியுள்ளார்.
 

நில ஆவணங்களை இணைய வழியில் பராமரிக்க நடவடிக்கை

Print PDF
தினகரன்        11.04.2013

நில ஆவணங்களை இணைய வழியில் பராமரிக்க நடவடிக்கை


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் நில ஆவணங்களை இணைய வழியில் பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இணைய வழியில் நில ஆவணங்களை பராமரிப்பதற்குரிய மென் பொருளை முன்னோடித்திட்டமாக செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை செயல்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வட்டம் முன்னோடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஊத்தங்க ரை வட்டம் முன்னோடி வட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வட்டத்திலுள்ள கணினியில் பராமரிக்கப்படும் நில ஆவணத் தகவல் தொகுப்பினை, நடுவண் மூலக் கணினிக்கு பதிவேற்றம் செய்யும் முன்னர், தற்போதைய நிலையை பிரதிபலிக்கும் வண்ணம் மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே ஊத்தங்கரை வட்டத்தை சேர்ந்த நில உடமைதாரர்கள் தமது நில ஆவணங்களில் மாற்றம் செய்யவோ, பிழைகளை நீக்கம் செய்யவோ விரும்புவோர், தமது விண்ணப்பங்களை நில உரிமைப்பத்திரங்களின் நகல்களுடன் வரும் மே மாதம் 19ம் தேதி யோ அல்லது அதற்கு முன்னரோ சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., அல்லது ஊத்தங் கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 


Page 242 of 506