Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஏப். 15-க்குள் வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF
தினமணி        09.04.2013

ஏப். 15-க்குள் வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


15 ஆம் தேதிக்குள் நகராட்சிக்கு குடிநீர் கட்டணம், வரி ஆகியவற்றை செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரூர் நகராட்சிக்கு பொதுமக்களிடமிருந்து குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி, நகராட்சி கடைகளுக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி உள்ளிட்டவைகளை வசூலிக்க தீவிர வரி வசூல் இயக்கம் நடத்தப்படுகிறது. நகர்மன்ற ஆணையர் (பொ) கோபாலகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குடிநீர் கட்டண பாக்கி, சொத்து வரி, நகராட்சி கடை வாடகை பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கரூர் காமராஜ் மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகைக்கு இருந்து நீண்டகாலமாக வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வரிபாக்கி குறித்து சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

தண்டோரா ஜப்தி வாகனத்துடன் சென்று வரி வசூலில் என நகராட்சி ஊழியர்கள் வரி வசூலிக்க தீவிரமாக  ஈடுபட்டனர்.

இந்நிலையில், குடிநீர் கட்டணம், தொழில்வரி, கடைவாடகை, புதை சாக்கடை ஆகியவை உள்ளிட்ட நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை வரும் 15 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். செலுத்தாவிடில், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

மேலும், வரி இனங்களை செலுத்தாதற்கு அபராதக் கட்டணமாக ரூ. 100, குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் கட்டணமாக ரூ. 750,  துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை, இணைக்கும் கட்டணமாக ரூ. 750 என நகராட்சி சார்பில் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மாநகராட்சியில் இன்று குறை தீர் கூட்டம்

Print PDF
தினமணி        09.04.2013

மாநகராட்சியில் இன்று குறை தீர் கூட்டம்

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொதுமக்களின் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) நடைபெறுகிறது.

மேயர் எஸ். செüண்டப்பன் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்துக்கு ஆணையர் மா.அசோகன் முன்னிலை வகிக்கிறார்.

காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது பகுதி குறைகளை மனுவாகவோ, நேரிலோ சந்தித்து அளிக்கலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

செங்கம் பேரூராட்சியில் கிராம ஊராட்சிகளை இணைக்க கவுன்சிலர்கள் எதிர்ப்பு

Print PDF
தினமணி        09.04.2013

செங்கம் பேரூராட்சியில் கிராம ஊராட்சிகளை இணைக்க கவுன்சிலர்கள் எதிர்ப்பு


செங்கம் பேரூராட்சியில் 5 கிராம ஊராட்சிகளை இணைக்கும் முடிவுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

செங்கம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் எம்.கணேசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையர் புருசோத்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், மண்மலை, காயம்பட்டு, குயிலம், மேல்புழுதியூர், பக்கிரிபாளையம் ஆகிய ஐந்து கிராம ஊராட்சிகளை பேரூராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், செங்கம் ஒன்றியத்துக்கு அரசு ஒதுக்கியுள்ள இந்திரா நினைவுக் குடியிருப்பு வீடுகள் 291, பசுமை வீடுகள் 185 ஆகியவற்றை, ஒன்றியக் கவுன்சிலர்கள் பரிந்துரை செய்யும் பயனாளிகளுக்கே வழங்க வேண்டும்.

வீடுகளை ஓதுக்கீடு செய்யும்போது அதிகாரிகள் கிராமங்களை நேரில் பார்வையிட்டு பாரபட்சம் இல்லாமல் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பாரபட்சமாக வழங்கியிருந்தால் அவை குறித்து ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க வேண்டும்.

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட வரதந்தாங்கள் ஏரி, சின்னஎல்லப்பன் ஏரி, ஆணைமங்கலம் ஏரி ஆகியவைகளை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை, பொறியாளர்கள் எத்திராஜ், தமிழ்மணி உள்பட கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 


Page 244 of 506