Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

முறைகேடாக தண்ணீர் விற்பனை மாவட்டம் முழுவதும் ஆழ்குழாய் கிணறு ரெய்டு தீவிரம்

Print PDF
தினகரன்       08.04.2013

முறைகேடாக தண்ணீர் விற்பனை மாவட்டம் முழுவதும் ஆழ்குழாய் கிணறு ரெய்டு தீவிரம்


கோவை:  கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் கடும் வறட்சி நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள் வறண்டுவிட்டன. சமீபத்திய ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வறட்சியின் கோரப்பிடியில் கோவை மாவட்டம் சிக்கி தவிக்கிறது. கால்நடைகளுக்கு தீவனம் அறுவடை செய்யக்கூட வழியில்லாத அளவுக்கு புற்கள் காய்ந்துகிடக்கின்றன. குளங்கள் வறண்டுவிட்டதால் நிலத் தடி நீர்மட்டம் குறைந்து, பெரும்பா லான ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் கிடைப்பதில்லை. இதை பயன்படுத்திக்கொண்டு ஒருசிலர் தங்களது ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்கின்றனர்.

மினி லாரி தண்ணீர் 500 ரூபாய், பெரிய லாரி தண்ணீர் 1,500 ரூபாய் என தங்கள் இஷ்டத்துக்கு விற்பனை செய்கின்றனர். மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெற்று ஆழ்குழாய் கிணறு அமைக்காமல், சட்ட விரோதமாக இச்செயலில் ஈடுபடுகின்றனர். இதுபற்றி மாவட்ட கலெக்டர் கருணாகரனுக்கு கடந்த இரு வாரங்களாக அடுத்தடுத்து புகார் மனுக்கள் வந்துகொண்டே இருந்தன. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், மாவ ட்டம் முழுவதும் வட்டார வ ளர்ச்சி அலுவ லர் தலைமை யில் வருவாய்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளை கண்டறிந்து சீல் வைத்து வருகின்றனர். முறைகேடாக தண்ணீர் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை தெற்கு வட்டம் சீரபாளையம், குறிச்சி பகுதியில் மட்டும் கடந்த 2ம்தேதி ஒரே நாளில் 5 ஆழ்குழாய் கிணறுகளுக்கு சீல் வைத்துள்ளனர். மின்இணைப்புகளை துண்டித்துள்ளனர்.

இதுதொடர்பாக ரத்தினசாமி, பாலகிருஷ்ணன், குப்புசாமி, ராமசாமி, வேலுசாமி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கோடையை பயன்படுத்திக்கொண்டு, வணிக ரீதியில் இயங்கும் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளையும் தயவுதாட்சண்யமின்றி இழுத்து மூடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
 

அரசு மருத்துவமனையில் மாநகராட்சி குடிநீர் கேன்டீனில் நோயாளிகளுக்கு விற்பனை எம்எல்ஏ, டீன் ஆய்வு

Print PDF
தினகரன்       08.04.2013

அரசு மருத்துவமனையில் மாநகராட்சி குடிநீர் கேன்டீனில் நோயாளிகளுக்கு விற்பனை எம்எல்ஏ, டீன் ஆய்வு


மதுரை: மாநகராட்சி குடிநீரை மதுரை அரசு மருத்துவமனை கேன்டீன் மூலம் நோயாளிகளுக்கு விற்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் எம்எல்ஏ, டீன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

மதுரை அரசு மருத்துவமனைக்குள் கண்வங்கி அருகே தனியார் கேன்டீன் உள்ளது. இங்கு, மாநகராட்சி குடிநீர் நோயாளிகளுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக எம்எல்ஏ அண்ணாதுரைக்கு கடிதம் மூலம் புகார் வந்தது. இதன்பேரில் நேற்று காலை டீன் மோகன், நிலைய மருத்துவ அதிகாரி பிரகதீஸ்வரன், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் நரசிம்மன், ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கேன்டீனுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முறைகேடுகளை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தனர்.

அண்ணாதுரை எம்எல்ஏ, கூறுகையில், மருத்துவமனைக்குள் உள்ள குடிநீர் குழாயுடன் இணைப்பு வைத்து 24 மணிநேரமும் குடிநீர் எடுக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் இருக்க பெயரளவில் மாநகராட்சியிடம் தனி குடிநீர் இணைப்பு பெற்று வைத்து ஏமாற்றியுள்ளனர். அரசு மருத்துவமனைக்குள் தனியாருக்கு குடிநீர் இணைப்பை மாநகராட்சி வழங்கியது ஆச்சர்யமாக உள்ளது. பல ஆயிரம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டுள்ளது. எனவே எடுக்கப்பட்ட குடிநீரில் நோயாளிகளுக்கு விற்கப்பட்டது, எந்த விற்பனை க்காக கேன்டீன் அனுமதி பெறப்பட்டது, பிற பொருட்கள் விற்கப்படுகிறதாதா என்பது உள்ளிட்ட பல்வேறு விசாரணைகளுக்கு உத்தரவிடுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றார்.
 

மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு ‘கட்

Print PDF
தினகரன்                   08.04.2013

மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு ‘கட்


திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சியில் வீடுகள், வணிக நிறுவனங்களில் குடிநீர் இணைப்பு குழாய்க ளில் மின் மோட்டார் பொ ருத்தி தண்ணீர் எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி எச்சரித்துள் ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சிராஜூதீன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருமங்கலம் நகராட்சி பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுக்க ஏற்கனவே தடையுள்ளது. நகர் பகுதியில் சீரான முறை யில் குடிநீர் வழங்குவதை தடுக்கும் வகையில் குடிநீர் இணைப்பில் மின் மோட் டார் பொருத்தியிருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

ஒரு சில பகுதிகளில் குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக மோட்டார் பொருத்தியவர் கள் அவற்றை அகற்றி விடவேண்டும். தவறும் பட்சத் தில் பறிமுதல் செய்யப்படுவதுடன் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அவர்களு க்கு அபராதம் விதிக்கப் படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 


Page 246 of 506