Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நாய்களுக்கான காப்பகம் அமைக்க அரகண்டநல்லூர் பேரூராட்சி தீர்மானம்

Print PDF
தினமணி       08.04.2013

நாய்களுக்கான காப்பகம் அமைக்க அரகண்டநல்லூர் பேரூராட்சி தீர்மானம்


 திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் நாய்களுக்கான காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் ஏ.ஆர்.வாசிம்ராஜா தலைமை வகித்தார். செயல் அலுவலர் செந்தில் முன்னிலை வகித்தார்.

நாய்களுக்கான காப்பகம் அமைக்கவும், தனலஷ்மி நகரில் 52 மீட்டர் அளவுக்கு கூலி வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கவும், புதிய பேரூராட்சி அலுவலக கட்டடத்துக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சூரிய மின் சக்தி தயாரிக்கும் சாதனம் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

 பேரூராட்சி துணைத் தலைவர் ராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
 

கருணை அடிப்படையில் 13 பேர் பணி நியமனம்

Print PDF
தினமணி       07.04.2013

கருணை அடிப்படையில்  13 பேர் பணி நியமனம்


மதுரை மாநகராட்சி கல்விப் பிரிவில் 13 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மாநகராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா  பணி நியமன ஆணைகளை வழங்கினார்.  ஆணையர் ஆர். நந்தகோபால், கல்வி அலுவலர் மதிஅழகுராஜ்,  கல்விக்குழு தலைவர் சுகந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநகராட்சி கல்விப் பிரிவு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் அடிப்படையில் 2 இளநிலை உதவியாளர்கள், 8 அலுவலக உதவியாளர், 3 காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

கோடப்பமந்து கால்வாயில் குப்பை கொட்டினால் அபராதம்

Print PDF
தினமணி       07.04.2013

கோடப்பமந்து கால்வாயில் குப்பை கொட்டினால் அபராதம்


உதகையில் கோடப்பமந்து கால்வாயில் குப்பையை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கோடப்பமந்து காவ்வாயில் பொதுப்பணித்துறை சார்பில் தூர்வாரும் பணி நடைபெறுகிறது.

இத்தகைய சூழலில், பல இடங்களில் மிகுந்த அளவிலான குப்பைகள், குறிப்பாக வீட்டு உபயோகப் பொருள்களான பால் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள், கிழிந்த துணிகள், காய்கறிகள், பிளாஸ்டிக் குப்பை ஆகியவை கால்வாயில் வீசப்படுகின்றன.

கால்வாயின் வழியாக செல்லும் நீர், உதகை ஏரியில் குப்பைகளோடு கலப்பதால், உதகை ஏரியும் மாசடைகிறது. நகரின் சுகாதாரத்தை காக்கும் வகையில் கோடப்பமந்து கால்வாயில் குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மீறி குப்பையை கொட்டுபவர்களுக்கு ரூ.2,000 வரை அபராதமும் விதிக்கப்படும். அத்துடன் கோடப்பமந்து கால்வாயில் கொட்டும் நபர்களே குப்பைகளை கால்வாயில் இறங்கி சுத்தம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உதகையின் அழகை பராமரிக்க பொதுமக்கள் உதவ வேண்டும். இக்கால்வாயில் குப்பைகள் கொட்டும் நபர்கள் குறித்து தெரியவந்தால், 94430-77789, 98949-61554 98659-98899 ஆகிய அலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Page 247 of 506