Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தஞ்சை நகராட்சியில் 5 பேர் பணி நியமனம்

Print PDF
தினமணி        06.04.2013

தஞ்சை நகராட்சியில் 5 பேர் பணி நியமனம்


தஞ்சை நகராட்சியில் 5 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இதில், கே. விமலுக்கு வருவாய் உதவியாளர் பணியிடமும், ஆர். கனிஷ்கா, ஆர். தரண்யா, சி.எஸ். சசிரேகா ஆகியோருக்கு இளநிலை உதவியாளர் பணியிடமும், பொது சுகாதாரப் பிரிவு ஓட்டுநர் பி. சந்திரனுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டன. இந்த ஆணைகளை நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் வழங்கினார். நகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன், நகர் மன்ற உறுப்பினர் சரவணன், பொறியாளர் சீனிவாசன், நகர் நல அலுவலர் சிவனேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் சாவித்திரி தெரிவித்தது:

நகராட்சிகளில் நிர்வாக செலவினம் 49 சதத்துக்கும் அதிகமாக இருந்து வந்ததால், காலிப் பணியிடங்களை நிறைவு செய்ய இயலாமல் இருந்து வந்தது. இதனால், வளர்ச்சி பணிகள், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டது. இந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு நகராட்சிகளின் நிர்வாகச் செலவின உச்ச வரம்பை 64 சதமாக தமிழக முதல்வர் உயர்த்தி அறிவித்தார். இதன்படி, இந்தக் காலிப் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டது என்றார்.
 

ஓமலூர் பேரூராட்சிக் கூட்டம்

Print PDF
தினமணி        06.04.2013

ஓமலூர் பேரூராட்சிக் கூட்டம்


சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சியின் சிறப்பு அவசரக் கூட்டம் அதன் தலைவர் (பொறுப்பு) ஏ.பிரகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மல்லூர் அருகேயுள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் அமைய வேண்டிய தனியார் சுங்கச் சாவடியை விதிமுறை மீறி, ஓமலூர் அருகேயுள்ள கோட்டகவுண்டம்பட்டியில் அமைந்துள்ளது.

எனவே, பேரூராட்சி பகுதியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது என்ற விதிமுறைப்படி, ஓமலூர் அருகே அமைந்துள்ள தனியார் சுங்கச் சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

அன்னவாசல் பகுதியில் சூரிய மின்சக்தி வீடுகள் கலெக்டர் ஆய்வு

Print PDF
தினத்தந்தி        05.04.2013

அன்னவாசல் பகுதியில் சூரிய மின்சக்தி வீடுகள் கலெக்டர் ஆய்வு


அன்னவாசல் பகுதியில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் மனோகரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அன்னவாசல் பகுதியில்...

அன்னவாசல் ஊராட்சி ஒன்றித்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை மாவட்ட கலெக்டர் மனோகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவேங்கை வாசல் ஊராட்சி, குருக்களை யாப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் பி.எஸ். கே.ரோடு முதல் குருக்களை யாப்பட்டி வரை சாலை மேம்பாடு செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

சூரிய மின்சக்தி வீடுகள்

முக்கணாமலைப்பட்டி ஊராட்சியில் முதல் அமைச்சர் ஜெயலிதாவின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட் டத்தின் கீழ் 5 பயனாளிகளின் வீடுகளை பார்வையிட்டார். வீரப்பட்டி ஊராட்சி, கலாடிப்பட்டி சத்திரத்தில் இந்திராகாந்தி நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பயனாளியின் வீட்டினையும், கலாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் ரூ.2.30 மதிப்பில் கட்டப்பட்ட சமையல் கூடத்தையும், பள்ளி மாணவர்களுக்கு வழங் கப்படும் மதிய உணவையும், இருப்பு விவரங்களையும், மாண வர்களின் வருகைப் பதி வேட்டினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதிய ரேசன் கடை ஆய்வு

இதையடுத்து பெருஞ்சுனை கிராமத்தில் விராலிமலை எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள ரேசன் கடை கட்டிடத்தை பார்வையிட்டார். பின்னர் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புள்ளியியல் கட்டிடத்தையும் ஆய்வு செய்தார்.

தான்றீஸ்வரம் பகுதியில் ஆய்வு

பின்னர் தான்றீஸ்வரம் பகுதி யில் விராலிமலை எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடையையும், மாநில நிதிக்குழு ரூ. 8 லட்சம் மதிப்பில் தான்றீஸ்வரம் முதல் கடம்பராயன்பட்டி வரை போடப்பட்டுள்ள தார் சாலையையும், தான்றீஸ் வரத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆண்கள் சுகாதார வளாகத்தையும் பார் வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைதொடர்ந்து இலுப்பூர் வட்டம், அன்னவாசல் பகுதி யில் அம்மா திட்டம் சார்பில் பொதுமக்கள் வழங்கிய மனுக் களின் விவரங்களைக் கேட் டறிந்து அவர்களது கோரிக் கைகளை பரிசீலித்து உடனடி தீர்வுகாண வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தர விட் டார்.

அம்மா திட்டமனுக்களுக்கு தீர்வு

பின்னர் அம்மா திட்டத்தில் பொதுமக்கள் அளித்திருந்த மனுக்கள் மீது உடனடி தீர்வுகாணப்பட்டு மாற்றுத்திறனாளி உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவு ஒரு நபருக்கும், முதி யோர் உதவித்தொகை பெறு வதற்கான உத்தரவு 3 நபர் களுக்கும், விதவை உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவு ஒருவருக்கும், பட்டாமாறுதல் உத்தரவு 3 நபர்களுக்கும், குடும்ப அட்டை திருத்த உத்தரவு 4 நபர்களுக்கும் வழங்கினார்.

இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயநாதன், துரைராஜ், அன்னவாசல் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ஹமீது முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 


Page 249 of 506