Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அம்பத்தூரில் இறைச்சிக் கடைகள் அகற்றம்

Print PDF

தினமணி           29.01.2014 

அம்பத்தூரில் இறைச்சிக் கடைகள் அகற்றம்

அம்பத்தூரில் தெரு ஓரங்களில் அனுமதியின்றி இயங்கி வந்த இறைச்சி கடைகளை செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மண்டலம்-7 (அம்பத்தூர்) செங்குன்றம் சாலை, புதூர் மார்க்கெட், கொரட்டூர் வடக்கு நிழற்சாலை முதலிய பகுதிகளில் தெருவோரங்களில் பல்வேறு கறிக் கடைகள் இயங்கி வந்தன. அனுமதி மற்றும் உரிமம் இன்றி இயங்கி வந்த அந்தக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜன.28) அகற்றினர்.

மேலும் முத்திரையின்றி விற்பனைக்கு வைக்கப்பட்ட 120 கிலோ எடையுள்ள இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும் சாலையோரம் இறைச்சி கடைகள் நடத்துவதற்காக 21 இடங்களில் போடப்பட்டிருந்த தாற்காலிக பந்தல்களையும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

பொதுநலச் சங்கங்களுடன் மாநகராட்சி கருத்துக்கேட்பு

Print PDF

தினமணி           29.01.2014 

பொதுநலச் சங்கங்களுடன் மாநகராட்சி கருத்துக்கேட்பு

பொதுநல சங்கங்களுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் சனிக்கிழமை (பிப்.1) நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான கருத்து கேட்புக் கூட்டம் ஜன. 25-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் இது ஒத்தி வைக்கப்பட்டது. இந்தக் கூட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறும்.

இதில், 1-வது மண்டலம் முதல் 8-வது மண்டலம் வரை உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கருத்துக் கேட்பு கூட்டம் கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ. விளையாட்டரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும்.

9 முதல் 15-வது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், இணை மற்றும் துணை ஆணையர்கள், அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் மண்டல அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். இதில் பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு குறைகளை தெரி

விக்கலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

பழைய மாநகராட்சி கட்டிடம் இடிக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமலர்           29.01.2014 

பழைய மாநகராட்சி கட்டிடம் இடிக்கும் பணி துவக்கம்
    
சேலம்: சேலத்தில், புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்படுவதால், பழமையான கட்டிடங்கள் இடிக்கும் பணி, நேற்று துவங்கியது. சேலம் நகராட்சி, 1866ல், துவங்கப்பட்டு, 1979, ஏப்ரல், 1ல், சிறப்பு நிலை நகராட்சியாகவும், 1994, ஜூன், 1ல், மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இங்குள்ள சுகாதாரப்பிரிவு கட்டிடம், 147 ஆண்டுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அதன் பின், 1958 மற்றும் 1963ல், அடுத்தடுத்து, ஒரு கட்டிடம் எழுப்பப்பட்டது. நகராட்சி நூற்றாண்டு விழாவின் போது, 1966ல், ராஜாஜி பெயரில் மன்ற கூட்ட அரங்கம் கட்டப்பட்டது. 2003ல், மேயர் அலுவலகம் கட்டப்பட்டது.

எனவே, நிர்வாக வசதிக்கு கட்டிடங்கள் போதுமானதாக இல்லை. ஆதலால், பழமை வாய்ந்த மாநகராட்சி கட்டிடங்களை இடித்து, நவீன வசதிகளுடன், இரு அடுக்குகள் கொண்ட, ஒருங்கிணைந்த கட்டிடம் கட்ட, 7.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. அதற்காக, மாநகராட்சி அலுவலகம், தற்காலிகமாக தொங்கும் பூங்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டுமானப்பணியை மேற்கொள்ளும், ஆர்.ஆர். துளசி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம், பழைய மாநகராட்சி கட்டிடங்களை இடிக்கும் பணியை, நேற்று துவங்கியுள்ளது. மூன்று மாதங்களில், கட்டிடங்களை இடித்து, தரைமட்டமாக்கிய பின், பூமிபூஜை போட்டு, புதிய கட்டுமான பணிகள் துவங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


Page 26 of 506