Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சியில் "அம்மா' திட்டம் அமைச்சர் நாளை துவக்குகிறார்

Print PDF
தினமணி               05.04.2013

மாநகராட்சியில் "அம்மா' திட்டம் அமைச்சர் நாளை துவக்குகிறார்

மதுரை மாநகராட்சியில் அம்மா திட்டம் தொடக்க விழா ஏப்ரல் 6 ஆம் தேதி 85 ஆவது வார்டில் நடைபெறவுள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ தொடக்கி வைக்கிறார். மேயர் விவி ராசன் செல்லப்பா தலைமை வகிக்கிறார்.

இத்திட்டம் ஏப்ரல் 8 ஆம் தேதி 4, 35, 50, 80 ஆகிய வார்டுகளிலும், ஏப்ரல் 9 ஆம் தேதி 5, 36, 51, 79 ஆகிய வார்டுகளிலும், ஏப்ரல் 10 ஆம் தேதி 6, 46, 52, 81  ஆகிய வார்டுகளிலும், ஏப்ரல் 11 ஆம் தேதி 7, 27, 53, 82 ஆகிய வார்டுகளிலும், ஏப்ரல் 12 ஆம் தேதி 8, 45, 73, 84 ஆகிய வார்டுகளிலும், ஏப்ரல் 13 ஆம் தேதி 9, 44, 74, 83 ஆகிய வார்டுகளிலும் நடைபெறுகிறது.

முகாம் நாள்களில் மேற்கண்ட வார்டுகளில் குப்பை அகற்றுதல், திறவை சாக்கடை, மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல், குடிநீர் அடிகுழாய் பழுது நீக்குதல், குடிநீர் கசிவை தடுத்தல், பாதாள சாக்கடை அடைப்பை நீக்குதல், குடிநீர் தொட்டி பராமரித்தல், தெருவிளக்குப் பராமரிப்பு, கொசு ஒழிப்பு  போன்ற பணிகள் நடைபெறும் என ஆணையர் ஆர்.நந்தகோபால் தெரிவித்துள்ளார்.
 

தாம்பரம் நகராட்சி குளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

Print PDF

தினமணி               05.04.2013

தாம்பரம் நகராட்சி குளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

 

19,26,27 வார்டு மக்கள் 15ம் தேதிக்குள் குடிநீர் இணைப்புகள் அமைக்க வேண்டும்

Print PDF

தினமலர்                  05.04.2013

19,26,27 வார்டு மக்கள் 15ம் தேதிக்குள் குடிநீர் இணைப்புகள் அமைக்க வேண்டும்

திருநெல்வேலி:மேலப்பாளையம் மண்டலம் 19,26,27 ஆகிய மூன்று வார்டு பொதுமக்கள் வரும் 15ம் தேதிக்குள் புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என மேலப்பாளையம் மண்டலம் உதவி கமிஷனர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 19,26,27 வார்டுகளுக்கான புதிய குடிநீர் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பொதுமக்கள் தங்களது குடிநீர் குழாய் இணைப்புகளை பழைய திட்டத்தில் இருந்து மாற்றி புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் ப்ளோ கண்ட்ரோல் வால்வு அமைப்புடன் அமைக்க வேண்டும். பெரும்பாலான வீட்டு இணைப்புதாரர்கள் உரிய கட்டணம் செலுத்தி பழைய திட்டத்தில் இருந்து புதிய திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புகளை மாற்றி அமைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

எனவே புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து குடிநீர் குழாய் இணைப்புதாரர்களும் வரும் 15ம் தேதிக்குள் உரிய கட்டணம் செலுத்தி குடிநீர் குழாய் இணைப்புகளை அமைத்துக்கொள்ள வேண்டும். தவறினால் குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பினை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு உதவி கமிஷனர் ஜோதிலிங்கம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 


Page 251 of 506