Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மேட்டூர் நகராட்சியில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF
தினகரன்       04.04.2013

மேட்டூர் நகராட்சியில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


மேட்டூர்: மேட்டூர் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தவேண்டிய குடிநீர் இணைப்பு கட்டண நிலுவை அதிகமாக உள்ளது. இதனால், குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளை கடந்த 3 நாட்களாக நகராட்சி ஊழியர்கள் துண்டித்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்கூடங்கள் ஆகியவைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று குடிநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர்.

மேட்டூர் நகராட்சியில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில், ரூ.45 லட்சத்திற்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பற்றாக்குறையை சரிகட்ட நகராட்சி நிர்வாகம் கெடுபிடி வரிவசூலில் ஈடுபட்டுள்ளது.
 

சித்திரை பொருட்காட்சி ஆலோசனை கூட்டம்

Print PDF
தினகரன்       04.04.2013

சித்திரை பொருட்காட்சி ஆலோசனை கூட்டம்


மதுரை: மதுரை சித் திரை திருவிழாவில் அரசு சித்திரை பொருட்காட்சியை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் அன்சுல்மிஸ் ரா தலைமை வகித்து பேசியதாவது: அரசு சித்திரை பொருட்காட்சியில் தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அனைத்து துறையினரும் அரங்குகளை அமைக்க வேண்டும்.

காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மருத்துவ குழு வினர் தயார் நிலையில் இரு க்க வேண்டும். குடிநீர் உட் பட அடிப்படை வசதி களை செய்து கொடுக்க வேண்டும். தடையின்றி மின்சாரம் வழங்க வேண் டும். மாலை 3 முதல் இரவு 10 மணி வரை பஸ்கள் பொருட்காட்சி வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். வருவாய் அலுவலர் ரவீந்திரன், துணை கமிஷனர் திருநாவுக்கரசு, ஆர்டிஓ ஆறுமுகம், கலெக்டரின் நேர்முக உதவியளர் சாந்தி, அறநிலையத்துறை ஆணையர் ஜெயராமன் கலந்து கொண்டனர்.
 

"ஆக்கிரமிப்பு நிலம்: தகவல் தெரிவிக்கலாம்'

Print PDF
தினமணி       04.04.2013

"ஆக்கிரமிப்பு நிலம்: தகவல் தெரிவிக்கலாம்'


திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சி. சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வரின் உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளை மீட்பதற்கும், அவற்றை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து திரும்பப் பெற்று அரசிடம் ஒப்படைக்கவும் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், இந்து சமய அறநிலையத் துறை, வக்பு வாரியம் உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான நிலங்கள் ஏதேனும் தங்களது பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால் பொதுமக்கள் அது குறித்து ஆட்சியரிடம் நேரிலோ, கடிதம் மூலமாகவோ தங்களிடமுள்ள உரிய விவரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தெரியப்படுத்தலாம். இது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
 


Page 252 of 506