Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மதுரை, நெல்லை மாநகராட்சியில்384 பேருக்கு கருணை வேலை

Print PDF
தினமலர்        03.04.2013

மதுரை, நெல்லை மாநகராட்சியில்384 பேருக்கு கருணை வேலை


சென்னை:மதுரை மாநகராட்சியில், 348 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.மதுரை மாநகராட்சியில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் இறந்த, 347 பணியாளர்களின் வாரிசுகள், நெல்லை மாநகராட்சியில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்த, 37 பேரின் வாரிசுகள் என, மொத்தம், 384 வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை, கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.இளநிலை உதவியாளர், தேர்ச்சி திறன் பணியாளர், தேர்ச்சி திறனற்ற பணியாளர், துப்புரவு பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் என, பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
 

பேரூராட்சி கூட்டம்

Print PDF
தினமலர்          03.04.2013

பேரூராட்சி கூட்டம்


வடமதுரை:வடமதுரை பேரூராட்சி கூட்டம் தலைவர் பாப்பாத்தி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் விஜயநாத், துணைத்தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.

தம்பித்துரை எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பேரூராட்சி 3 வது வார்டு அம்பலகாரன்பட்டியிலும், 12 வது வார்டு முனியாண்டி கோயில் அருகிலும் ஆழ்குழாய்கள் அமைத்து, குடிநீர் தொட்டிகள் நிறுவ 4 லட்ச ரூபாய்க்கு பணி செய்யவும், விலங்குகள் பிறப்பு கட்டுபடுத்துதல் மற்றும் வெறிநாய் கடி தடுப்பு திட்டத்தின் கீழ் 3 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வடமதுரையில் நாய்கள் கொட்டில் கட்டவும் ஒப்புதல் தரப்பட்டது.
 

ரூ.9 லட்சம் செலவில் பூங்கா சீரமைப்பு

Print PDF
தினமலர்                   03.04.2013

ரூ.9 லட்சம் செலவில் பூங்கா சீரமைப்பு


திருத்தணி:நகராட்சி அலுவலகம் அருகில், பழுதடைந்து உள்ள பூங்கா, ஓரிரு மாதத்தில், 9 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படவுள்ளது.திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு முருகன் சிலை, முக்கிய தேசத் தலைவர்கள் சிலைகள், விலங்குகள் சிலை, நீர் ஊற்று, குழந்தைகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்கு மேடை உட்பட, பல்வேறு பொழுது போக்கு உபகரணங்கள் உள்ளது.
 
நகராட்சி நிர்வாகம், பூங்காவை உரிய முறையில் பராமரிக்காததால், தற்போது நீர் ஊற்று, ஊஞ்சல்கள், தேசத் தலைவர்கள் சிலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளது.

பூங்காவை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, பூங்காவை சீரமைக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நிதி ஒதுக்கீடு செய்தது.இதுகுறித்து நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியம் கூறுகையில், "பழுதடைந்துள்ள பூங்காவை, நகர்புற ஊரமைப்பு திட்டத்தின் (2012-13)கீழ், விளையாட்டு பொருட்கள் மற்றும் பூங்கா சீரமைக்க, 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். விரைவில் பூங்கா சீரமைக்கப்படும்'' என்றார்.
 


Page 254 of 506