Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகரில் குடிநீர் புகார் தெரிவிக்க தனி பிரிவு தொடக்கம்

Print PDF
தினகரன்        03.04.2013

மாநகரில் குடிநீர் புகார் தெரிவிக்க தனி பிரிவு தொடக்கம்


திருச்சி: மாநகரில் குடிநீர் பற்றிய புகார் தெரி விக்க தனி பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இது தினமும் காலை 8 முதல் இரவு 8 வரை செயல்படும்.

திருச்சி மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு தடையில்லாத குடிநீர் விநியோகிக்க குறை தீர்க்கும் பிரிவு துவங்க மாவட்ட நிர்வா கம் திட்டமிட்டது. இதன் படி திருச்சி கலெக்டர் அலுவலக வளாகம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் குடிநீர் குறைதீர்க் கும் அவசர சேவைப் பிரிவு அமைக்கப்பட்டுள் ளது. இப்பிரிவு காலை 8 முதல் இரவு 8 வரை இயங் கும். கட்டணம் இல்லா தொலைபேசியில் (0431 2411040) குடிநீர் தொடர் பான புகார்களை தெரிவிக்கலாம்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் குடிநீர் குறைதீர்க்கும் அவசர சேவைப்பிரிவும் அமைக்கப்பட்டுள் ளது. பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல் படும் குடிநீர் குறைதீர்க் கும் அவசர சேவைப்பிரிவிலும் புகார்களைத் தெரிவிக்கலாம். புகார்கள் பெறப்பட்டவுடன் நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகிக்கப்படுவது டன், நடவடிக்கை விவரம் புகார்தாரருக்கு தெரிவிக்கப்படும். இந்த தகவலை கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

கட்டணமில்லாத தொலைபேசி வசதி இன்று முதல் அமலாகும் என கலெக்டர் அலுவலக தரப் பில் தெரிவித்தனர்.
 

மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை உசிலை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Print PDF
தினகரன்        03.04.2013

மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை உசிலை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை


உசிலம்பட்டி: மின்மோட்டார் பொருத்தி குடி நீர் எடுத்தால் கடும் நடவடி க்கை எடுக்கப்படும் என்று உசிலம்பட்டி நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

உசிலம்பட்டி நகராட்சியில் தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.   இந்நிலையில் சிலர் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுக்கின்றனர்.

இதனால் மற்றவர்களு க்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நேற்று உசிலம்பட்டி நகராட்சி 15, 16வது வார்டுகளில் நக ரா ட்சி ஆனையா ளர் பாப்பம் மாள், பொறியா ளர் குரு சாமி, நகராட்சி மேற்பார்வையாளர் அறிவழகன், குடிநீர் இணைப்பு பொருத்துனர் கதிரேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீடுகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. 12 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நகராட்சி ஆணையாளர் பாப்பம்மாள் கூறுகையில், தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோ கம் செய்யப்படுகிறது. பருவ மழை பொய்த்ததும், அணையில் நீர்மட்டம் குறைந்ததும் தான் இதற்கு காரணம்.

பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டு கொள்கி றோம். மோட்டார் பொரு த்தி குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
 

"கட்டடங்களுக்கு முறையான அனுமதி அவசியம்'

Print PDF
தினமணி       03.04.2013

"கட்டடங்களுக்கு முறையான அனுமதி அவசியம்'


தூத்துக்குடியில் கட்டுமானங்களுக்கு முறையான அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடியில் பல்வேறு கட்டுமானங்கள் உள்ளூர் திட்டக்குழும அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நகர் ஊரமைப்புச் சட்டம் 1971, பிரிவு 56 மற்றும் 57-ன் படி பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனுமதியற்ற அபிவிருத்திகளைக் கட்டுப்படுத்துவதும், அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுத்து நிறுத்துவதும் உள்ளூர் திட்டக்குழுமத்தின் நோக்கம்.

எனவே, நகர் ஊரமைப்பு ஆணையரால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒப்புதல் பெறுவதற்கான சரிபார்ப்பு படிவத்தில் அனைத்து விவரங்களுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு இயங்கி வரும் உள்ளூர் திட்டக்குழுமம் விரைந்து நடவடிக்கை எடுத்து விதிகளுக்கு உள்பட்டு திட்ட அனுமதி வழங்க தயாராக உள்ளது.

பல கட்டட உரிமையாளர்கள் திட்ட அனுமதி பெறுவதைக் கருத்தில் கொள்ளாமல், தன்னிச்சையாக அனுமதியின்றி கட்டடம் கட்டி வருகிறார்கள்.

இவ்வாறு அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் கட்டடங்களால் வாகன நிறுத்தும் இடம் பாதிப்பு, காற்றோட்டம், வெளிச்சம் போன்ற பாதிப்புகள், தீ விபத்து காலங்களில் ஏற்படும் உயிர்ச்சேதம் மற்றும் உடைமை சேதம் போன்ற பாதிப்புகள், அபிவிருத்தி கட்டணம் மற்றும் அடிப்படை வசதி கட்டணம் போன்ற அரசுக்கு வருவாய் இழப்பு பாதிப்புகள், கலப்பு அபிவிருத்திகளால் அமைதியான வாழ்க்கை முறை பாதிப்பு, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அனுமதி பெறாத கட்டடங்கள் மீது பூட்டி சீல் இடுதல், இடித்தல், இடித்ததற்கான தொகையை வசூலித்தல், கட்டுமான பொருள்கள், கருவிகள், கட்டுமான இயந்திரங்கள், உபகரணங்கள், சார பொருள்கள், வாகனங்கள் மற்றும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் இதர பொருள்கள், அனுமதியற்ற கட்டுமான இடத்தில் உள்ள பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தல், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை ஏலத்தில் விட்டு வரும் தொகையை அரசு கணக்கில் சேர்த்துக் கொள்ளுதல், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறான பொது பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் கட்ட உத்தேசித்து வரும், கட்டப்பட்டு வரும் அனைத்து வகையான கட்டுமானத்துக்கும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நகர் ஊரமைப்புத் துறையின்கீழ் செயல்படும் உள்ளுர் திட்டக்குழுமத்திற்கு விண்ணப்பித்து திட்ட அனுமதி பெற்றுக் கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களின் மீது எடுக்கப்பட இருக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Page 255 of 506