Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

"வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை'

Print PDF

தினமணி          27.01.2014 

"வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை'

பெங்களூரு மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்த மாநகராட்சியின் வார்டு அளவிலான வளர்ச்சிக் குழுத் தலைவர் பசவராஜ் தெரிவித்தார்.

பெங்களூருவில் சனிக்கிழமை பேட்டராயனபுரா, பீன்யா தாசரஹள்ளிப் பகுதிகளில் ஒப்பந்ததாரர்களுக்கு ஒற்றை சாளரமுறையில் வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை வழங்கிய பின்னர், அவர் பேசியது:

கடந்த காலங்களில் ஒப்பந்தப்புள்ளி கோருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை.

இதைக் கருத்தில் கொண்டு, ஒற்றை சாளரமுறையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பெங்களூருவில் வளர்ச்சிப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். மக்கள் தொகை அதிகரித்து வரும் பெங்களூருவில் வளர்ச்சிப் பணிகள் தாமதமாவதால், பொதுமக்கள் பாதிப்புள்ளாகின்றனர்.

மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு கர்நாடக அரசு ரூ. 300 கோடி விடுவித்துள்ளது. இதையடுத்து, 198 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

முன்னதாக, மாநகராட்சிக்குள்பட்ட பேட்டராயனபுரா அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்த தகவல் பலகையை எம்.எல்.ஏ. விஸ்வநாத், பசவராஜ் இணைந்து தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் துணைமேயர் இந்திரா, தோட்டக்கலை நிலைக்குழுத் தலைவர் முனிராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரங்கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

வீடு வீடாக வாக்காளர் அட்டை விநியோகம்: செல்போன் எண், கையொப்பம் வாங்க உத்தரவு

Print PDF

தினமணி          27.01.2014 

வீடு வீடாக வாக்காளர் அட்டை விநியோகம்: செல்போன் எண், கையொப்பம் வாங்க உத்தரவு

வாக்காளர் அடையாள அட்டையை வீடு வீடாக வழங்கி, வாக்காளர்களின் செல்போன் எண் மற்றும் கையொப்பம் வாங்க சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. பட்டியலில் புதிதாக சேர்ந்தவர்கள் மற்றும் திருத்தம் மேற்கொண்டவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், தேசிய வாக்காளர் தினமான சனிக்கிழமை வாக்காளர் அட்டை விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, பட்டியலில் புதிதாக சேர்ந்த இளம் வாக்காளர்களுக்கு அந்தந்த வாக்குச் சாவடிகளில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. திருத்தம் மேற்கொண்டவர்களும் வாக்குச் சாவடிகளில் அட்டைகளை பெற்றனர்.

சென்னை முழுவதும் மாநகராட்சி தேர்தல் பணியாளர்கள் வீடுவீடாக சென்று புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்குவர். அவ்வாறு அட்டைகளை வழங்கும்போது, வாக்காளர்களிடம் அட்டை பெற்றதற்கான கையொப்பம் மற்றும் செல்போன் எண் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: வாக்காளர் அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வீடு வீடாக அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும். இந்த பணியை மாநகராட்சி தேர்தல் பணியாளர்கள் மேற்கொள்வார்கள். அடையாள அட்டைகள் தவறாமல் வாக்காளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அடையாள அட்டைகளை வழங்கும் போது அட்டை பெற்றதற்கான கையொப்பம் மற்றும் செல்போன் எண் பெற பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் அனைவருக்கும் அட்டைகள் முழுமையாக விநியோகம் செய்யப்படுவது உறுதி செய்யப்படும்.

அட்டைகள் அவசரமாக தேவைப்பட்டால், மாநகராட்சி அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

அதேவேளையில், கடந்த முறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கத் தவறியவர்கள், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரையில் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்றனர்.

விழிப்புணர்வு மாரத்தான்: தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான், சென்னை மெரீனா கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான விக்ரம் கபூர் வெண் புறாவை பறக்கவிட்டு தொடங்கி வைத்தார்.

 

ஆழ்குழாய் கிணற்று பள்ளம் மூடல் தேவகோட்டை நகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன்             25.01.2014

ஆழ்குழாய் கிணற்று பள்ளம் மூடல் தேவகோட்டை நகராட்சி நடவடிக்கை

தேவகோட்டை. : தேவகோட்டை ராம்நகரில் உள்ள அழகப்பா பூங்காவின் மேற்கு தெருவில் நகராட்சி குடிநீர் சப்ளைக்கான போர்வெல் கிணறு உள்ளது.

இதனை பழுது பார்த்து சென்றவர்கள் அந்த குழியை மூடாமல் சென்று விட்டனர். ஆபத்தை அறியா குழந்தைகள் அந்த குழியில் தவறி விழ நேரிடும் என்பதால் அதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்த செய்தி 22ம் தேதியன்று தினகரனில் வெளியானது. அதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆழ்குழாய் பகுதியில் இருந்த பள்ளத்தை முற்றிலுமாக மூடி சரி செய்ததால் பேராபத்து தடுக்கப்பட்டது.

 


Page 27 of 506