Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வரி வசூல் குறைவால் மாநகராட்சி வருவாய் பணியாளர்களுக்கு "மெமோ'

Print PDF
தினமலர்       28.03.2013

வரி வசூல் குறைவால் மாநகராட்சி வருவாய் பணியாளர்களுக்கு "மெமோ'


சேலம்: சேலம் மாநகராட்சியில், நிர்ணயிக்கப்பட்ட வரி வசூல் இலக்கை எட்டாத, பில் கலெக்டர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட வருவாய் பிரிவு பணியாளர்களுக்கு, மாநகராட்சி கமிஷனர் அசோகன், "மெமோ' வழங்கியுள்ளார்.

சேலம் மாநகராட்சியில், வரிவிதிப்புகளின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 79 ஆயிரத்து, 209. கடந்த ஃபிப்ரவரி மாதம் வரை, 17 கோடியே, 79 லட்சத்து, 44 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. 2012-13க்கு எதிர்பார்க்கப்படும் வரி வசூல், 26 கோடியே, 65 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய்.

கடந்த ஃபிப்ரவரி மாதம் வரை தொழில் வரி மூலம், மூன்று கோடியே, 96 லட்சத்து, 24 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணம் மூலம், இதுவரை, 14 கோடியே, 98 லட்சத்து, 94 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012-13ம் ஆண்டை விட, 2013-14ம் ஆண்டு கூடுதலாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சியில், வணிக வளாகம் கட்டுதல் உள்ளிட்ட புதிய திட்டங்களை செயல்படுத்தவும், கான்ட்ராக்டர்களுக்கு முறையாக பில் தொகை வழங்கும் நோக்கத்திலும், நிலுவை வரியை, 100 சதவீதம் வசூலிக்க, மாநகராட்சி கமிஷனர் அசோகன், வருவாய் பிரிவு ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், மாநகராட்சி மைய அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடத்தி, ஆண்டு இறுதிக்கணக்கு (மார்ச்) மாதத்துக்குள், அனைத்து வார்டுகளிலும், நிலுவையில்லாமல், 100 சதவீதம் வரி வசூல் பணியை முடிக்க உத்தரவிட்டார்.

சமீபத்தில், மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பெரும்பாலான வார்டுகளில், 50ல் இருந்து, 60 சதவீதம் வரை மட்டுமே வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில வார்டுகளில் மட்டும், 70 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மாநகராட்சி கமிஷனர் அசோகன், கடும் அதிருப்தி அடைந்தார். மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும், 80 சதவீதத்துக்கும் குறைவாக வரி வசூல் செய்த வார்டுகளில் பணியாற்றிய, 40க்கும் மேற்பட்ட பில்கலெக்டர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், மாநகராட்சி உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட வருவாய் பிரிவை சேர்ந்தவர்களுக்கு, "மெமோ' வழங்கியுள்ளார்.
 

பெரம்பலூரில் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஆய்வு

Print PDF
தினத்தந்தி        28.03.2013

பெரம்பலூரில் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத் தில் நடைபெற்று வரும் அனைத்து துறை திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை செயலா ளர் பணீந்திர ரெட்டி ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலு வலரும், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை செயலர் பணீந்திர ரெட்டி பல் வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், மக்கள் நல பணிகள் குறித்து கலெக்டர் தரேஸ் அகமது முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவில் டயாலிஸிஸ் பிரிவு, சிசு தீவிர சிகிச்சை பிரிவு, முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத் தில் சிகிச்சை பெறும் நோயாளி களுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவை அவர் பார்வையிட் டார். அரசு மருத்துவமனையில் தரைப்பகுதிகள் அனைத்தை யும் அடிக்கடி சுத்தம் செய்ய அறிவுறுத்தினார்.

கோட்டாட்சியர் அலுவ லகத்தில் மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் மூலம் கணினி மூலம் சான்றிதழ்களை பெறுவதற்கான செயல்பாடு களை அவர் ஆய்வு செய்தார். பெரம்பலூர் நகராட்சிக்குட் பட்ட ரோவர் நூற்றாண்டு வளைவு–எளம்பலூர் சாலை இணைப்பு பணியை பார்வை யிட்டார்.

விரைந்து முடிக்க அறிவுரை

பெரம்பலூர் நகராட்சியில் குடிநீர் வினியோகப் ணிக்காக உப்பு ஓடையில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடிநீர் கிணறையும், எளம்பலூர் ஊராட்சியில் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில் கட்டப் பட்ட வீடுகளையும் அவர் ஆய்வு செய்தார். பெரம்பலூர் நகராட்சி துப்புரவு பணிகளுக் காக வாங்கப்பட்ட நவீன குப்பை சேகரிப்பு வாகனங் களையும், ரூ.31 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக நெடுவாசல் பகுதி யில் அமைக்கப்பட்டுள்ள சுத் திகரிப்பு நிலையத்தை பார்வை யிட்ட பணீந்திர ரெட்டி இந் நிலையத்தை பசுமை வளாக மாக உருவாக்குமாறும், நகராட்சி பகுதி வீடுகளில் கழிவு நீர் அமைப்பினை, பாதாள சாக்கடையுடன் இணைக்கும் பணிகளை துரிதப்படுத்தி விரைவாக முடிக்குமாறும் அறிவுறுத்தி னார்.

வாலிகண்டபுரத்தில் அனை வருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி மாணவ– மாணவிகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையத்தை பார்வையிட்டு, தொண்டப் பாடி, அனுக்கூர் குடிகாடு, பிரம்மதேசம், செங்குணம், பேரளி ஆகிய பகுதிகளில் மக்காச்சோளம், பருத்தி விவ சாயிகளிடம் பயிர் விளைச்சல் பாதிப்பு குறித்து கேட்டறிந் தார்.

பின்னர் கலெக்டர் அலு வலகத்தில் அனைத்து துறை திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர் களுடன் ஆய்வு நடத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி சுப்ரமணி யன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரஸ்வதி கணேசன், கோட் டாட்சியர் ரேவதி, நகராட்சி தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

மேட்டூர் நகராட்சி அலுவலக பழைய கட்டடத்தில் நீதிமன்றங்கள் இயங்கும்

Print PDF
தினகரன்      28.03.2013

மேட்டூர் நகராட்சி அலுவலக பழைய கட்டடத்தில் நீதிமன்றங்கள் இயங்கும்


மேட்டூர்: மேட்டூரில் ஸி3.82 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்ட உள்ளது. அதனால் மேட்டூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் இயங்கி வரும் கட்டடங்கள் அகற்றப்பட்டு அங்கு புதிய நீதிமன்ற வளாகம் அமைய உள்ளது.

எனவே, மேட்டூர் நகராட்சி அலுவலக பழைய கட்டடத்தில் மேட்டூர் சார்பு நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, தற்போது பழைய கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

ஏப்ரல் 2வது வாரத்தில் மேட்டூர் சார்பு நீதிமன்றமும் உரிமையியல் நீதிமன்றமும் இந்த கட்டத்தில் இயங்க உள்ளது. மேட்டூர் சார்பு நீதிமன்ற நீதிபதி மணி இத்தகவலை தெரிவித்தார். அப்போது, மேட்டூர் அணை வழக்கறிஞர் சங்க தலைவர் அண்ணாமலை, மேட்டூர் வழக்கறிஞர் சங்க தலைவர் சித்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
 


Page 264 of 506