Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

திருப்போரூர் பேரூராட்சிக்கு ரூ.9 லட்சம் வருவாய்

Print PDF
தினமலர்                     27.03.2013

திருப்போரூர் பேரூராட்சிக்கு ரூ.9 லட்சம் வருவாய்


திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சியில், கழிப்பறை, வாகன நுழைவு கட்டணம் போன்றவைகள் ஏலம் விடப்பட்டதன் மூலம், 9.36 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.திருப்போரூர் பேரூராட்சியில், கட்டண கழிப்பிடம், பேருந்து நுழைவு கட்டணம் உள்ளிட்ட வரி இனங்களுக்கான பொது ஏலம், பேரூராட்சி செயல் அலுவலர் ரவி முன்னிலையில் நடந்தது.இதன் மூலம், பேருந்து நுழைவு கட்டணமாக, 2.07 லட்சம் ரூபாயும், பேருந்து நிலையம் மற்றும் திருக்குளம் அருகில் உள்ள பொது கழிப்பிடங்கள் ஏலத்தின் மூலம், 2.76 லட்சம் ரூபாயும், மார்க்கெட் கடைகளின் உரிமம், 93,500 ரூபாயும் பேரூராட்சிக்கு வருவாய் கிடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதே போல், சாலையோரங்களில் உள்ள கடைகள் உரிமத்திற்கு, 68,500 ரூபாயும், சாலையோரம் நிறுத்தப்படும் லாரி உரிமத்திற்கு, 1.93 லட்சம் ரூபாயும், வாகன நிறுத்த உரிமத்திற்கு, 77,500 ரூபாயும் என, மொத்தம் 9.36 லட்சம் ரூபாய், பேரூராட்சிக்கு வருவாய் கிடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

பரமக்குடியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

Print PDF
தினத்தந்தி         27.03.2013

பரமக்குடியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு


பரமக்குடி நகராட்சியில் பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் தொட்டி, கழிப்பறை உள்பட பல்வேறு திட்ட பணி கள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இதனை கலெக்டர் நந்தகுமார் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பின் னர் அவர் வாரச்சந்தை, உழ வர் சந்தை, சிறுவர் பூங்கா, ஒருங்கிணைந்த குடிசை மேம் பாட்டு திட்டத்தின் கீழ் கட் டப்படும் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அவர் அதிகாரிக ளுடன் ஆலோசனை நடத்தி னார். இதில் நகரசபை தலை வர் கீர்த்திகா முனியசாமி, ஆணையாளர் அட்சயா உள் பட பலர் கலந்து கொண்டனர்.
 

குழி தோண்டி குழாய் இணைப்புகளில் தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை

Print PDF
தினமணி      27.03.2013

குழி தோண்டி குழாய் இணைப்புகளில் தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை


பெங்களூரில் குழி தோண்டி குடிநீர்க் குழாய் இணைப்புகளில் நீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரில் பல்வேறு பகுதிகளில், சாலை ஓரங்களில் குழி தோண்டி சட்ட விரோதமாக குடிநீர் எடுத்து வருவதாக வாரியத்துக்குப் புகார்கள் வந்துள்ளன.

குடிநீர் பயன்பாட்டை அளவிடும் மீட்டர், வீட்டினுள் பொருத்தப்பட்டிருக்கும். வெளியில் சாலையில் குழி தோண்டி, கூடுதல் நீர் பிடிப்பதால், அந்த நீர் கணக்கில் வராது.

இவ்வாறு செய்வது குடிநீர் வடிகால் வாரியச் சட்டப்படி குற்றம். மேலும், தோண்டப்படும் குழிகளில் உள்ள குழாய்களை முறையாக மூடுவதில்லை.

இதனால், குழியில் தேங்கியுள்ள நீர் மீண்டும் குடிநீர் குழாயினுள் செல்ல வாய்ப்புள்ளது. இதன்மூலம், குடிநீர் மாசடையும் நிலை ஏற்படும்.

கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், பல்வேறு மாசடைந்த குடிநீரால் பரவும் நோய்கள் வருவதுக்கும் வாய்ப்புள்ளது.

இதைத் தவிர்க்கும் வகையில், வாரிய அதிகாரிகள் மாநகரத்தின் அனைத்து இடங்களிலும் விரைவில் சோதனை நடத்த உள்ளனர். சட்டவிரோதமாக குழிகள் தோண்டி நீர் எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வந்த 224 குடிநீர்க் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

குடிநீர் வரி செலுத்தாதவர்களிடம் இருந்து ரூ.3.28 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. பணம் செலுத்தாத 62 வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 


Page 268 of 506