Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

Print PDF
தினகரன்     27.03.2013

குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை


திருப்பூர்:  திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவை வைத்திருந்ததால் குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் நேற்று துண்டித்தனர்.

திருப்பூர் மாநகராட்சியில் வரியினங்கள் வசூல் செய்யும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், குடிநீர் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி வசூலில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

 வரி செலுத்தாமல் பல ஆண்டுகளாக நிலுவை வைத்திருப்போரின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேவிஆர் நகர் மெயின் ரோடு பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் நேற்று துண்டிக்கப்பட்டன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வரி செலுத்தாத 10க்கும் மேற்பட்டோரின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. குடிநீர் இணைப்புகள் துண்டிக்கும் இன்றும் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

செந்தாரப்பட்டி பேரூராட்சியில் கிணற்றை தூர்வார ஆட்சியர் உத்தரவு

Print PDF
தினகரன்     27.03.2013

செந்தாரப்பட்டி பேரூராட்சியில் கிணற்றை தூர்வார ஆட்சியர் உத்தரவு


தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி பேரூராட்சியின் 6வது வார்டு அதிமுக துணைத்தலைவர் துரை நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தார். அதில், செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதன் பேரில், மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் நேற்று செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலம் சென்று செயல்அலுவலர் வசந்தாவிடம் விசாரணை நடத்தினார். பின் 15வது வார்டு பகுதியில் உள்ள ஊர் பொதுக்கிணற்றை பார்வையிட்ட ஆட்சியர், குடிநீர் ஆதாரத்திற்காக உடனடி யாக கிணற்றை தூர்வார உத்தரவிட்டார்.   இதைத்தொடர்ந்து தம்மம்பட்டிக்கு ஆட்சியர் சென்றார். அங்கு தம்மம்பட்டி பேரூராட்சி உடையார்பாளையத்தில் இருந்து கிழக்கு காந்திநகர் வரை 2 கி.மீ தூர சாலை, அறிஞர் அண்ணா மண்டபத்திலிருந்து நெய்வேலிகாரர் தோட்டம் வரையிலான 3 கி.மீ தூர சாலை பணிகள் துவக்கப்பட்டு 4 மாதமாகியும் முடிவடையாமல் உள்ளது. இச்சாலைப்பணிகளை விரைந்து முடிக்க தம்ம்பட்டி செயல்அலுவலர் கவுதமனிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
 

வைகை ஆற்றில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரைகள் அகற்றம்

Print PDF
தினகரன்                   27.03.2013

வைகை ஆற்றில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரைகள் அகற்றம்


மதுரை: வைகை ஆற்றில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகளை 2 ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.  

மதுரை வைகை ஆற்றில் ஓடும் கழிவுநீரால் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் முளைத்து அதில் கொசு உற்பத்தியானது. ஆற்று கரையோரம் உள்ள பொதுமக்கள் கொசுதொல்லையால் அவதிப்பட்டனர். ஆகாயத் தாமரையை அழிப்பது பொதுப்பணித்துறை வேலையா, மாநகராட்சி வேலையா என்ற கேள்வி எழுந்தது. இதனால் பொதுமக்களே ஆகாயதாமரை செடிகளை அழிக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு எம்எல்ஏ அண்ணாத்துரை தலைமை ஏற்றார். ஒரு வார காலத்தில் ஆகாயத்தாமரை அழிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு கெடு விதித்தார்.

பொதுமக்கள் போராட்டம் காரணமாக ஆகாயத்தாமரை செடிகள் குறித்து மேயர் ராஜன் செல்லப்பா, மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் ஆகியோர் பார்வையிட்டு உடனே ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து ஓபுளாப் படித்துறை முதல் குருவிக்காரன் சாலை வரையில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை 2 ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி துவங்கியது. இதில் 20 மாநகராட்சி பணியாளர்களும் ஈடுபட்டனர். வைகை ஆற் றில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை முழுமை யாக அகற்றும் பணி துவங்கி நடந்து வருகிறது. இப்பணிகளை மேயர், கமிஷனர் பார்வையிட்டனர்.

பின்னர் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஓபுளா படித்துறை கல்பாலத்தில் பழுதாகியுள்ள சாலையின் மீது புதிய சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தனர். திருவிழாவிற்கு முன்பாக தார் சாலை அமைக்கும்படி உத்தரவிட்டனர். உதவி ஆணையாளர் சின்னம்மாள், நகர்நல அலு வலர் யசோதா, செயற்பொறியாளர் ராஜேந்திரன், மற்றும் கவுன்சிலர்கள் விஜயராகவன், நூர்முகமது, பொறியாளர் கனி உடனிருந்தனர்.
 


Page 269 of 506