Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வரி செலுத்தாதோரின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்

Print PDF
தினமணி              10.03.2013

வரி செலுத்தாதோரின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்


அரக்கோணம் நகரில் வரி பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். தவறினால் அவர்களது வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையர் செந்தில்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரக்கோணம் நகரில் வரி இனங்களால் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

எனவே, உரிய காலக்கெடுவுக்குள் வரி வசூல் செய்ய குழு வசூல் பணி மூலம் தீவிரப்படுத்தப்படவுள்ளது.

அதிக நிலுவைத் தொகை வைத்துள்ள வரி விதிப்புதாரர்களை நேரில் அணுகுதல், அறிவிப்புகள் செய்தல், ஜப்தி நோட்டீஸ் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

மேலும், அதிகமாக வரி பாக்கி வைத்துள்ளோரின் குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையையும் எடுத்து வருகிறோம்.

நகரில் சாலைகள், விளக்குகள், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை முழு அளவில் செயல்படுத்திட நிதிஆதாரம் அவசியமாகிறது.

எனவே, வரி மற்றும் வரியில்லா இன நிலுவைகளை அனைவரும் உடனடியாகச் செலுத்தி நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என செந்தில்முருகன் கூறியுள்ளார்.
 

தடையில்லா சான்று பெறாமல் கட்டப்படும் அரசு அலுவலகம்: செஞ்சி பேரூராட்சித் தலைவர் புகார்

Print PDF
தினமணி                 09.03.2013

தடையில்லா சான்று பெறாமல் கட்டப்படும் அரசு அலுவலகம்: செஞ்சி பேரூராட்சித் தலைவர் புகார்


பேரூராட்சியின் தடையில்லா சான்று பெறாமல் செஞ்சி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்படுவதாக பேரூராட்சி மன்றத் தலைவர் செஞ்சி மஸ்தான் புகார் தெரிவித்துள்ளார்.

செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலக கட்டடம் பழுதடைந்ததால், அதன் அருகில் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்து அதன்படி ரூ.45 லட்சத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

செஞ்சி பேரூராட்சிக்கு உள்பட்ட இந்த இடத்தில் தடையில்லா சான்று பெறாமல் கட்டடம் கட்டப்பட்டு வருவதாக பேரூராட்சி மன்றத் தலைவர் செஞ்சி மஸ்தான் கூறினார். கட்டடப் பணிகளை வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறியது:

பொதுமக்களுக்கு இடையூறான இடத்தில் கட்டடம் கட்டப்படுவதாகவும், தரமான முறையில் கட்டப்படவில்லை எனப் பொதுமக்கள் கூறியதன் அடிப்படையில் கட்டடப் பணியைப் பார்வையிடச் சென்றேன்.

வேலையின் விபரம் குறித்த குறிப்பை பொதுப்பணித்துறை பொறியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது விபரங்களைத் தர மறுத்துவிட்டார். பணி நடைபெறும் இடத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, ஒப்பந்ததாதரோ இல்லை.

 வேலை விபரம் குறித்து விளம்பர பலகை இல்லை. வேலை செய்யும் நபர்களிடம் விசாரித்த போது எங்களுக்கு விபரம் ஏதும் தெரியாது எனக் கூறிவிட்டனர்.

இந்த இடத்தில் காமராஜர், கக்கன் போன்றவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளனர். மேலும் இந்த இடம் அரசு விழாக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடமாகும். எனவே இந்த இடத்தில் கட்டடம் கட்டினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்.

இது குறித்து பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்ப உள்ளதாகத் தெரிவித்தார்.
Last Updated on Saturday, 09 March 2013 11:25
 

அனுமதியின்றி வைத்திருந்த பேனர்கள் அதிரடி அகற்றம்

Print PDF
தினகரன்         09.03.2013

அனுமதியின்றி வைத்திருந்த பேனர்கள் அதிரடி அகற்றம்

கோபி, : கோபி நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

கோபி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வந்தன. குறிப்பாக பஸ் நிலைய பகுதியில் அனுமதியின்றி  வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பஸ் நிலையத்தினுள் இருந்து வரும் பேருந்துகள், ஈரோடு - சத்தி ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு சரியாகத் தெரிவதில்லை என்ற புகார் எழுந்தது.

அதைத்தொடர்ந்து  பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற நகராட்சி ஆணையாளர் ஜான்சன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த 20க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்களை அகற்றினர்.
 


Page 277 of 506