Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF
தினகரன்                    08.03.2013

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவை வைத்திருந்ததால் 2 குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் நேற்று துண்டித்தனர்.

திருப்பூர் மாநகராட்சியில் வரியினங்கள் வசூல் செய்யும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், குடிநீர் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி வசூலில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

வரி செலுத்தாமல் பல ஆண்டுகளாக நிலுவை வைத்திருப்போரின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 42வது வார்டில் கருப்பாத்தாள் என்பவர் பெயரில் உள்ள பனியன் நிறுவனம் கடந்த 2007-08 முதல் குடிநீர் கட்டண நிலுவை தொகையாக ரூ.11 ஆயிரத்து 222 செலுத்தாததால், அங்குள்ள குடிநீர் இணைப்பை மாநகராட்சி பணியாளர்கள் துண்டித்தனர். அதே பகுதியில் கந்தசாமி என்பவர் தன் வீட்டு குடிநீர் இணைப்புகான குடிநீர் கட்டணத்தை கடந்த 1990ம் ஆண்டில் இருந்து செலுத்தாமல் ரூ.12 ஆயிரத்து 846 நிலுவையாக வைத்துள்ளார்.

இத்தொகை செலுத்தப்படாததால் அவர் வீட்டு குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மாநகராட்சி குடிநீர் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் பணியாளர்கள் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று (8ம் தேதி) 32வது வார்டு பாளையக்காடு பகுதியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக மாநகாரட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.
 

மாநகராட்சிக்கு ஆன்லைனில் வரி செலுத்த விரைவில் திட்டம் அமல் கமிஷனர் தீவிர ஆலோசனை

Print PDF
தினகரன்             07.03.2013

மாநகராட்சிக்கு ஆன்லைனில் வரி செலுத்த விரைவில் திட்டம் அமல் கமிஷனர் தீவிர ஆலோசனை


திருச்சி, : திருச்சியில் மாநகராட்சி வரி செலுத்த விரைவில் ஆன்லைன் வசதி அமல்படுத்தப்பட உள்ளது.

திருச்சி மாநகராட்சி பரப்பளவு 167.2 சதுர கிலோ மீட்டர். வார்டு எண்ணிக்கை 65.  வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங் கள், தொழிற்சாலைகள் உள் ளிட்ட கட்டிடங்கள் 90,000. மக்கள்தொகை 9.5 லட்சம். இதில் மக்களுக்கான அடிப்படை வசதிகள், வளர்ச்சி திட்டங்களுக்காக மாநகராட்சி நிர்வாகம் பல் வேறு வரிகளை வசூலிக்கிறது. நடப்பு ஆண்டில் 1,82,526 பேரிடம் சொத்துவரியாக ரூ.33.6 கோடி, தொழில் வரியாக 16,994 பேரிடம் ரூ.6.13 கோடி, குடிநீருக்காக 90,655 பேரி டம் ரூ.10.5 கோடி, பாதாள சாக்கடை இணைப்புக்காக 35,110 பேரிடம் ரூ.1.18 கோடி, மாநகராட்சி கட்டிடங்கள், கடைகளின் வாட கை போன்ற இனங்கள் மூலம் 2,218 பேரிடம் ரூ.6.8 கோடி என ரூ.57.26 கோடி க்கு வரி வசூலில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக பொன்மலை, அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய 4 கோட்ட அலுவலகங்களிலும் வரி வசூல் மையம் மூலமும், நடமாடும் வாக னம் உதவியுடனும் வரி வசூல் நடக்கிறது.

பகலில் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத் தில் வரி செலு த்த முடி யாமல் அபராதம் போன்ற நடவடிக்கைகள் பாய்கின் றன. எனவே நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைனில் அனை த்து வரி செலுத்தும் திட்டத்தை அமல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக கோட்ட உதவி கமிஷனர்கள், உதவி வரு வாய் அலுவலர்கள், வங்கி அதிகாரிகளுடன் மாநகராட்சி கமிஷனர் தண்ட பாணி கடந்த 2 நாட் களாக ஆலோசனை நடத்தி வரு கிறார். இந்த திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகி றது. இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணியி டம் கேட்டதற்கு,  மாமன்றம், நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி கிடைத்தவுடன் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் திட்டம் அம லுக்கு வரும் என்றார்.

செல்போன் இணைய தளம் வாயிலாக நெட் பாங் கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் வரிகளை செலுத்தலாம்.
 

மணப்பாறையில் தரைக்கடைகள் இடிப்பு

Print PDF
தினமணி         05.03.2013

மணப்பாறையில் தரைக்கடைகள் இடிப்பு


திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் நடத்தப்பட்டு வந்த தரைக்கடைகளை அதிகாரிகள் திங்கள்கிழமை இடித்தனர்.

மணப்பாறை வரதராஜப் பெருமாள் கோவிலின் ஒரு பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 25 தரைக்கடைகள் இருந்தன. இந்த கடைகளை நடத்தி வருபவர்களிடமிருந்து தினசரி கட்டணமாக குறைந்த தொகை வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால், நகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருமானம் பாதிக்கப்பட்டதாம்.

இதையடுத்து, நகராட்சி கூட்டத்தில் தற்போதுள்ள தரைக்கடைகளை இடித்து தரைமட்டமாக்கி, கட்டடங்களை கட்டி வாடகைக்கு விடுவது என முடிவு செய்யப்பட்டு, கடைகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தரைக்கடை வியாபாரிகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து, ஒரு மாதக் காலத்துக்கு தடை உத்தரவு பெற்றனர்.

தடை உத்தரவுக்கான காலம் முடிந்ததைத் தொடர்ந்து, நகராட்சி, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை தரைக்கடைகளை இடிக்க முயற்சி மேற்கொண்ட போது வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தரைக்கடைகளை வியாபாரிகள் திங்கள்கிழமை காலை வரை காலி செய்யாததால் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு 25 கடைகளையும் இடித்து தரைமட்டமாக்கினர்.

மணப்பாறை வட்டாட்சியர் குளத்தூர் பாண்டியன், டி.எஸ்.பி. மீனா, நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கடைகள் இடிக்கும் பணியை கண்காணித்தனர்.
 


Page 279 of 506