Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பஸ் நிலையத்தில் நகர்மன்றத் தலைவர் திடீர் ஆய்வு

Print PDF

தினமணி            24.01.2014   

பஸ் நிலையத்தில் நகர்மன்றத் தலைவர் திடீர் ஆய்வு

திண்டுக்கல் பஸ் நிலையத்தில், நகர்மன்றத் தலைவர் வி. மருதராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

 பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், நடைமேடை உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

 பஸ் நிலைய வளாகத்தில் உடைந்து காணப்படும் கழிப்பறைகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல், நடைபாதையை ஆக்கிரமித்து, பொதுமக்களுக்கு இடையூறாக கடை அமைப்பவர்களைக் கண்காணிக்க குறுகிய இடைவெளியில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.   பஸ் நிலையம் முழுவதையும் புதுப்பிக்கும் வகையில் திட்ட மதிப்பீடு தயார் செய்தவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார். நகர்மன்றத் தலைவர் ஆய்வுக்கு வருவதாகக் கூறிய அதிகாரிகள், நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது சில வியாபாரிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

ஊஞ்சலூரில் சாலைப் பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி            24.01.2014 

ஊஞ்சலூரில் சாலைப் பணிகள் ஆய்வு

கொடுமுடி ஒன்றியம், ஊஞ்சலூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலைப் பணிகளை, ஈரோடு பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சு.கலைவாணன் ஆய்வு மேற்கொண்டார்.

 ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தம்முதல், பேரூராட்சி அலுவலகம் வரை கான்கிரீட் சாலையாக மாற்ற ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

 இப்பணியை பேரூராட்சிகள் உதவி இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஊஞ்சலூர் பேரூராட்சித் தலைவர் ராஜலட்சுமி சாமிநாதன், செயல் அலுவலர் என்.நாகராஜன் உடனிருந்தனர்.

 

பெங்களூரு மாநகராட்சியின் கடன்களை அடைக்க நடவடிக்கை

Print PDF

தினமணி            24.01.2014 

பெங்களூரு மாநகராட்சியின் கடன்களை அடைக்க நடவடிக்கை

பெங்களூரு மாநகராட்சியின் கடன்களை அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூருவில் நடைபெறும் கர்நாடக சட்ட மேலவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை நியமன உறுப்பினர் தாரா அனுராதாவின் கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசியது:

பெங்களூரு மாநகராட்சி கடந்த ஆண்டுகளில் ரூ. 3,420 கோடி கடன் பெற்றுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகை அளிக்கப்படாததால், பெங்களூருவில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளன.

எனவே, பெங்களூரு மாநகராட்சியின் கடன்களை அடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். கடந்த பட்ஜெட்டில் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு ரூ. 1,576 கோடி ஒதுக்கப்பட்டது.

இதில் ரூ. 900 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரூ. 696 கோடியும் விடுவிக்கப்படும். மேலும், கூடுதால ரூ. 300 கோடி வழங்கப்படும். மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 110 கிராமங்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ. 250 கோடி ஒதுக்கப்படும்.

பெங்களூருவின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மேற்கொள்ள அரசு உதவும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், பெங்களூரு மாநகராட்சி ரூ. 169 கோடி கடன் பெற்றுள்ளது. ஆனால், அதற்கான வட்டியை செலுத்தவில்லை. முந்தைய பாஜக ஆட்சியில் மாநாட்சியில் உள்ள சாலைகள் சீராக அமைக்கவில்லை. இதனால், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன என்றார் சித்தராமையா.

 


Page 29 of 506