Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

15 வார்டுகளில் ஆடு, மாடு, கழுதை வளர்க்க தடை

Print PDF
தினமணி                   28.02.2013

15 வார்டுகளில் ஆடு, மாடு,  கழுதை வளர்க்க தடை


திருச்சி மாநகராட்சியில் 15 வார்டுகளில் ஆடு, மாடு, கழுதைகளை வளர்க்க முற்றிலும் தடை விதித்து புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் உத்தேச தீர்மானம் வைக்கப்பட்டது.

திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக திரியும் ஆடுகளையும், மாடுகளையும் தடை செய்வது தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் வைக்கப்பட்ட உத்தேச தீர்மானம்:

ஆடு, மாடுகளை வளர்க்க முற்றிலும் தடை செய்யப்படும் வார்டுகள்: 2, 10, 13, 32, 34, 35, 37, 42, 43, 44, 47, 48, 50, 51, 56. மற்ற வார்டுகளில் சில தெருக்களில் ஆடு, மாடுகளை வளர்க்க அனுமதிக்கலாம்.

வார்டு எண் 52-ல் வண்ணாரப்பேட்டை, 4-ல் அழகிரிபுரம் ஆகிய இரு தெருக்களில் மட்டும் கழுதைகள் வளர்க்கலாம். வேறு எங்கும் கழுதை வளர்க்க முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மாடு ஒன்றுக்கு ரூ. 500, ஆடு ஒன்றுக்கு ரூ. 200, கழுதை ஒன்றுக்கு ரூ. 500 என கட்டணம் விதித்து ஒவ்வொரு ஆண்டும் அனுமதி வழங்கலாம்.இந்தத் தீர்மானத்தின்மீது பேசிய மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் வார்டுகளில் மேலும் சில தெருக்களிலும் ஆடு, மாடுகளை வளர்க்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் கோரிக்கையை ஆணையரிடம் நேரில் எழுத்து மூலம் அளிக்கலாம் என்றும், அவற்றின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை திருத்தத்துடன் நிறைவேற்றலாம் என்றும் மாமன்றம் ஒப்புதல் அளித்தது.
Last Updated on Friday, 01 March 2013 09:22
 

பேரூராட்சிகளில் துப்புரவாளர் காலிபணியிடத்திற்கு பதிவு மூப்பு

Print PDF
தினமலர்           28.02.2013

பேரூராட்சிகளில் துப்புரவாளர் காலிபணியிடத்திற்கு பதிவு மூப்பு


சிவகங்கை: "பேரூராட்சிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப, பதிவு மூப்பு விபரம் வெளியிட்டுள்ளதாக,'' வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மாவட்டத்தில், எட்டு பேரூராட்சிகளில் துப்புரவாளர் காலிபணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட உள்ளது. பதிவுதாரர்கள், உரிய சான்றுகளுடன், மார்ச் 1ல் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து, பதிவு மூப்பு விபரத்தை தெரிந்துகொள்ளலாம். முன்னுரிமை அற்றவர்கள்: இளையான்குடி ஆதிதிராவிடர் (பொது)-1, திருப்புத்தூர் மிக பிற்பட்டோர் -1, பகிரங்க போட்டியினர் 2, கண்டனூர் பிற்பட்ட வகுப்பினர் - 1, சிங்கம்புணரி பகிரங்க போட்டியினர் - 1.முன்னுரிமை உள்ளோர்: திருப்புத்தூர் பிற்பட்டோர் -1, மிக பிற்பட்டோர் -1, நெற்குப்பை மிகபிற்பட்டோர் -1, பகிரங்க போட்டியினர்- 1, பள்ளத்தூர் அருந்ததியினர் - 1, திருப்புவனம்- அருந்ததியினர் - 1, புதுவயல் பகிரங்க போட்டியாளர் - 1 என்ற விகிதத்தில் எடுக்கப்பட உள்ளனர், என்றார்.
Last Updated on Friday, 01 March 2013 08:10
 

நகரில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு

Print PDF
தின மணி           27.02.2013

நகரில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 6 மாடுகளை நகராட்சி அதிகாரிகள் பிடித்தனர்.

நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், ரமேஷ் கண்ணா தலைமையிலான துப்புரவுப் பணியாளர்கள் திங்கள்கிழமை நகரின் முக்கிய வீதிகளில் சுற்றித் திரிந்த 6 மாடுகளைப் பிடித்தனர்.

இந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Last Updated on Wednesday, 27 February 2013 10:39
 


Page 282 of 506