Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வாடகை பாக்கி:காய்கறி கடைகளுக்கு சீல்

Print PDF
தின மணி               21.02.2013

வாடகை பாக்கி:காய்கறி கடைகளுக்கு சீல்

வாடகை பாக்கி நிலுவையிலுள்ள கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

கூடலூர் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் வாடகை பாக்கி நிலுவையிலுள்ள 6 காய்கறிக் கடைகளுக்கு நகராட்சி பொறியாளர் சுப்பிரமணி, தலைமை எழுத்தர் ஈ.நஞ்சுண்டன் ஆகியோர் தலைமையிலான நகராட்சி பணியாளர்கள் சீல் வைத்தனர்.

Last Updated on Thursday, 21 February 2013 12:00
 

அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

Print PDF
தின மணி                   19.02.2013

அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்திற்குள்பட்ட கோவிந்தநாட்டுசேரி ஊராட்சியில் அனுமதியின்றி 5 வீடுகளில் உபயோகித்து வந்த குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் அண்மையில் துண்டித்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உத்தரவின் பேரில் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுரளி,விஜயலெட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட  அதிகாரிகள் குழுவினர் கோவிந்தநாட்டுசேரி ஊராட்சிக்குள்பட்ட  பட்டுகுடி, கூடலூர்,புத்தூர், குடிகாடு, நாயக்கர்பேட்டை உள்ளிட்ட கிராமங்களிலுள்ள வீட்டு குடிநீர் இணைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனுமதியன்றி செயல்பட்டு வந்த 5 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. ú

மலும் 102 வீடுகளின் குடிநீர் இணைப்புகளுக்கான நிலுவை தொகையினை இணைப்பிற்குரியவர்கள் தாங்களாகவே முன்வந்து செலுத்தினர்.

ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் ஜெனோவாபரமசிவம், துணைத் தலைவர் கணேசன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்  ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Last Updated on Thursday, 21 February 2013 11:48
 

வாடகை நிலுவை: வணிக வளாககடைகள் மீது நடவடிக்கை

Print PDF

தினமணி       17.02.2013

வாடகை நிலுவை: வணிக வளாககடைகள் மீது நடவடிக்கை

சாத்தான்குளம் பேரூராட்சியில் வரி செலுத்தப்படாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்கவும், வாடகை நிலுவையுள்ள வணிக வளாகக் கடைகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் செயல் அலுவலர் முருகேசன் தெரிவித்தார்.

சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மன்றத் தலைவர் ஆ.செ.ஜோசப் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரா.வீரக்குமார், செயல் அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உதவியாளர் பால்ராஜ் தீர்மானங்களை வாசித்தார். பின்னர் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, செயல் அலுவலர் முருகேசன் கூறியதாவது, சாத்தான்குளம் பேரூராட்சியில் கிணற்று குடிநீர் இணைப்புகளில், 491 இணைப்புகளுக்கு வரி செலுத்தப்படாமல் உள்ளது. அதனை துண்டிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகக் கடையில் வாடகை நிலுவை ரூ.10 லட்சம் வரை உள்ளது. நிலுவை வைத்துள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வாரச்சந்தையில் அடிப்படை வசதி இல்லையென தினமணியில் செய்தி வந்துள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் சீரமைக்க உத்தரவிட்டுள்ளார் என்றார். கூட்டத்தில், மன்ற உறுப்பினர்கள் ஸ்டேன்லி, சதாசிவன், சரவணன், அழகுசுந்தரம், இந்திராபால்பாண்டி, ஜெ.ஜாக்குலின், இந்திராமாரிமுத்து, முகம்மது இஸ்மாயில், ஈஸ்வரன், ஜோசப் அலெக்ஸ், சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 18 February 2013 08:32
 


Page 284 of 506