Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வார்டு பணிகளை மாநகராட்சிகமிஷனர் திடீர் ஆய்வு

Print PDF

தினமலர்     23.08.2012

வார்டு பணிகளை மாநகராட்சிகமிஷனர் திடீர் ஆய்வு

மதுரை:மதுரை மாநகராட்சியில் வார்டுகளில் நடக்கும் பணிகளை, பிற அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் நேற்று காலை கமிஷனர் நந்தகோபால், தனி நபராக சென்று ஆய்வு செய்தார்.மாநகராட்சியில் 24, 25, 26 வார்டுகளுக்கு உட்பட்ட பரசுராம்பட்டி, கண்ணனேந்தல் பகுதிகளுக்கு கமிஷனர் சென்றார். அங்கு துப்புரவு பணிகளை ஆய்வு செய்தார். மூன்று வார்டுகளிலும் துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவு நோட்டுக்களை பார்வையிட்டார். சிலர் பணிக்கு வராமலும், சிலர் விடுப்பு எடுத்து விட்டு, அதற்கான கடிதம் வைத்துள்ளதும் தெரிந்தது.அப்பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை அகற்றி வேறிடத்தில் போடாமல் வெள்ளக்கல்லுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார். செல்லூர் நாய்கள் கருத்தடை அலுவலகம் சென்றார். கருத்தடை பணியை செப்., முதல் தேதியில் இருந்து துவங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

மாநகரின் வளர்ச்சியில் தன்னார்வ நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்

Print PDF

தினகரன்              21.08.2012

மாநகரின் வளர்ச்சியில் தன்னார்வ நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்

கோவை, : மாநகரின் வளர்ச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் இருக்கவேண்டும் என ‘சிஐடி‘ வெளியீட்டு விழாவில் மேயர் செ.ம.வேலுசாமி கூறினார்.

கோவை ‘ராக்‘ அமைப்பு சார்பில் ‘சிஐடி‘ (கோவை இன்பர்மேசன் டைரக்டரி) என்னும் புத்தகம் வெளியீட்டு விழா அவினாசி ரோடு சேம்பர் வளாகத்தில் நேற்று நடந்தது.

ராக் தலைவர் சி.ஆர். சுவாமிநாதன் வரவேற்றார். துணை தலைவர் ரவிசெல்வன் சிஐடி பற்றி விளக்க உரையாற்றினார். மகாதேவன் கோவை நகரின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் பற்றி விளக்க உரையாற்றினார். சிஐடி முதல் புத்தகத்தை மேயர் செ.ம.வேலுசாமி வெளியிட, மாநகராட்சி கமிஷனர் பொ ன்னுசாமி பெற்றுக்கொண் டார். மேயர் செ.ம.வேலுசாமி பேசியதாவது:

கோவை மாநகரின் வளர்ச்சிக்கு ஜே.என். என்.யு.ஆர்.எம் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, ரயில்வே மேம்பாலம், நடைபாதை மேம்பாலம், குளம் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தியது உள்ளிட்ட 16 பணிகளை திறம்பட செய்த காரணத்தால் தமிழகத்தில் 10 மாநகராட்சியில் கோவை மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வுசெய்யப்பட்டுள்ளது. மாநகரின் வளர்ச் சியில் ராக் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு சிறந்ததாக உள்ளது. இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து அளிக்கவேண்டும். மாநக ரில், பாதாள சாக்கடை திட் டம் முழு வீச்சில் நிறைவேற்றப்பட்டு வருவதால் நகரில் பல இடங்களில் தார்ச்சாலை மோசமாக உள்ளது. இப்பணி நிறைவுபெற்றவுடன் தார்ச்சாலை முழுமையாக செப்பனிடப்படும். பாதாள சாக்கடை பணி நிறைவுபெற்றால் மாநகரில் கொசுத்தொல்லை இருக்காது.இவ்வாறு மேயர் பேசினார்.

கமிஷனர் பொன்னுசாமி பேசுகையில், ‘‘ராக், சிறுதுளி, சேம்பர் உள்ளிட்ட  அமைப்புகள் தங்களது வரைவு திட்ட அறிக்கைகளை மாநகராட்சி மேயர் அல்லது கமிஷனரிடம் எப்போது வேண்டுமானாலும் அளிக்கலாம்.அதிலுள்ள நல்ல விஷயங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு திட்ட அமலாக்கத்தின்போது செயல்படுத்தப்படும்.மாநகரில் ஆக்கிரமிப்பில் உள்ள ரிசர்வ் சைட்டுகள் பற்றி தகவல் தெரிவித்தால், அது உடனடியாக மீட்கப்படும். அந்த இடத்தில் பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட கட்டமைப்பு உருவாக்கித்தரப்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே கைவிட வேண்டும். உற்பத்தி, மொத்த விற்பனை ஆகியவற்றை தடுக்க தொழில்முனைவோர் முன்வரவேண்டும்,’’ என்றார்.முடிவில், செயலாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

Last Updated on Tuesday, 21 August 2012 10:08
 

குடிநீர் இணைப்பில் மோட்டார் பொருத்தினால் நடவடிக்கை

Print PDF

தினமலர்                       21.08.2012

குடிநீர் இணைப்பில் மோட்டார் பொருத்தினால் நடவடிக்கை

தேவாரம்:வீட்டு குடிநீர் இணைப்பில்,மோட்டார் பொருத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் பருவ மழை பொய்த்ததால், குடிநீர் ஆதாரங்களான முல்லை பெரியாறு, கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால், பம்பிங் கிணறுகள் வறண்டுள்ளன. மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, உள்ளூரில் பம்பிங் செய்யப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. ஊராட்சிகளில் தொடர்ந்து குடிநீர் சப்ளை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வீட்டு இணைப்பு பெற்றவர்கள்,மோட்டார் பொருத்தி நீர் எடுப்பதால், மேட்டுப் பகுதிகளில் சீரான சப்ளை இல்லை. இதனால் சில ஊராட்சிகளில் பிரச்னை ஏற்படுகிறது. மோட்டார் பொருத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மோட்டார்களை பறிமுதல் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு கிராமங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

 


Page 288 of 506