Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிநீர்த் தட்டுப்பாடு: முறைகேடாக தண்ணீர் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை: பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமணி                10.08.2012

குடிநீர்த் தட்டுப்பாடு: முறைகேடாக தண்ணீர் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை: பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

களியக்காவிளை, ஆக. 9: களியக்காவிளை பேரூராட்சியில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து, பொது குடிநீர்க் குழாயிலிருந்து, முறைகேடாக தண்ணீர் பிடிப்பவர்களிடமிருந்துரூ. 500 அபராதம் விதிக்க பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

களியக்காவிளை பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவர் டி.ஆர். ஆஷாடயானா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் ஜி. சுதீர்குமார் முன்னிலை வகித்தார்.

வார்டு உறுப்பினர்கள் சுனிதா, ஜி. அருள்ராஜ், விஜயகுமாரி, பத்மினி, சி. தேவராஜ், சதீஷ்சந்திரபிரசாத், வின்சென்ட், எம். ரிபாய், ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நடந்த விவாதம் பின்வருமாறு:

வின்சென்ட்: பொது குடிநீர்க் குழாயிலிருந்து முறைகேடாக தண்ணீர் பிடிக்க பயன்படுத்தும் ஹோஸ் பைப்புகளை பறிமுதல் செய்வதுடன் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ரூ. 500 அபராதம் வசூலிக்க வேண்டும் என்றார்.

இக்கருத்துக்கு பெரும்பாலான உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இப்பேரூராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க தனித் திட்டம் ஏற்படுத்தி, குழித்துறை தாமிரவருணி ஆற்றில் கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய அரசை கேட்டுகொள்வது, உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு கேரளத்தைப் போல மாத ஊதியம் வழங்க கேட்பது, இப் பேரூராட்சிக்குள்பட்ட திருத்துவபுரம் தனியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், பணியாளர்கள் தொழில் மற்றும் இதர வரிகளை குழித்துறை நகராட்சிக்கு செலுத்துவதால் களியக்காவிளை பேரூராட்சிக்கு ஏற்பட்டுவரும் நிதி இழப்பை சரி செய்துதர மாவட்ட கல்வித்துறையை கேட்பது மற்றும் பல்வேறு வார்டுகளில் சாலைகள் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள்: மேயர் ஆய்வு

Print PDF

தினமணி                10.08.2012

வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள்: மேயர் ஆய்வு

மதுரை, ஆக. 9: மதுரை மாநகராட்சியில் வார்டு 1 முதல் 49 வார்டுகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆணையர் ஆர்.நந்தகோபால் முன்னிலையில் மேயர் விவி ராஜன்செல்லப்பா வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.இக்கூட்டத்தில் மேற்கண்ட வார்டுகளில் குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு அமைத்தல், குப்பைகள் அகற்றுதல், விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டு பகுதிகளில் அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மாமன்ற      உறுப்பினர்களிடம்   வார்டில்   மேற்கொள்ளப்பட்டு   வரும் பணிகள்,  மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவரம் கேட்கப்பட்டது.

Last Updated on Friday, 10 August 2012 11:49
 

உரிமம் பெறாத 39 ஆயிரம் கடைகள் "நோட்டீஸ்' அனுப்ப மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர்    09.08.2012

உரிமம் பெறாத 39 ஆயிரம் கடைகள் "நோட்டீஸ்' அனுப்ப மாநகராட்சி முடிவு

சென்னை:வணிக உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும், 39 ஆயிரம் கடைகளுக்கு "நோட்டீஸ்' அனுப்ப மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில், வணிக வரி செலுத்தும் கடைகள், நிறுவனங்கள் இரண்டு லட்சத்திற்கும் மேல் உள்ளன. இவை மாநகராட்சியிடம் முறையான உரிமம் பெறுவது அவசியம். ஆனால், 29 ஆயிரம் பேர் மட்டுமே வணிக உரிமத்தைப் பெற்றுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக அதிகாரிகள், வணிக உரிமம் பற்றி மண்டல வாரியாக ஆய்வு நடத்தினர். இதில், 39,290 கடைகள் உரிமம் பெறாமல் இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்த கடைகளுக்கு, "நோட்டீஸ்' அனுப்புவது எனவும், அலட்சியம் காட்டினால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது எனவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஓரிரு நாளில், "நோட்டீஸ்' அனுப்பும் பணி நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


Page 290 of 506