Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நகர்ப்புறங்களில் கழிப்பறை கட்டவும்சிறுகடன் வழங்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி             23.01.2014 

நகர்ப்புறங்களில் கழிப்பறை கட்டவும்சிறுகடன் வழங்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர்

நகர்ப்புற மக்களும் எளிதில் கழிப்பறை கட்டுவதற்காக சிறுகடன்கள் வழங்கப்பட வேண்டும் என்றார் திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி.

  திருச்சியில் புதன்கிழமை கிராமாலயா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் சுகாதாரத் திட்ட சிறுகடன் உதவி குறித்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது:

  கழிப்பறை பயன்படுத்துவதில் இன்னமும் கிராமப்புற மக்கள் விழிப்புணர்வு அடையவில்லை. கூடுதலாக இதற்காக பணியாற்ற வேண்டியுள்ளது.

  நகர்ப்புறத்திலும் கழிப்பறை பயன்பாடு பெரும் சவாலாகவே இருக்கிறது. எனவே, நகர்ப்புற ஏழை மக்களும் எளிதில் கழிப்பறை பயன்படுத்தும் வகையில், சிறுகடன் உதவிகளை அறிமுகப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் தண்டபாணி.

  கருத்தரங்குக்கு வாட்டர் டாட் ஆர்க் அமைப்பின் தெற்கு ஆசிய முதுநிலை மேலாளர் ரேச்சல் புரம்பாஹ் தலைமை வகித்தார். கிராமாலயா நிறுவனர் எஸ். தாமோதரன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.

  முழு சுகாதார இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அரசுத் துறை அலுவலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என 75 பேர் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்.

 கருத்தரங்கு வியாழக்கிழமை பிற்பகலில் நிறைவடைகிறது. வெள்ளிக்கிழமை கிராமப்பகுதிகளில் கடன் பெற்று கழிப்பறை கட்டியவர்களை நேரில் சென்று சந்திக்கின்றனர்.

 

அனுமதி பெறாத கழிவு நீர் வாகனங்களுக்கு மாநகராட்சி கடும் எச்சரிக்கை மீறினால் ஏலம் விடப்படும்

Print PDF

தினகரன்             23.01.2014 

அனுமதி பெறாத கழிவு நீர் வாகனங்களுக்கு மாநகராட்சி கடும் எச்சரிக்கை மீறினால் ஏலம் விடப்படும்

திருச்சி, : அனுமதி இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு ரூ.5000அப ராதம் விதிப்பதோடு, தொடர்ந்து 3 முறை இயங் கும் வாகனங்களை பறி முதல் செய்து ஏலம் விடப் படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில், கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையாளர்களுடன் அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட் டம் நேற்று நடந்தது. இதுகுறித்து ஆணையர் தண்ட பாணி கூறியதாவது:

திருச்சி மாநகராட்சியில் 35 சதவீதம் பகுதியில் மட் டுமே புதை வடிகால் திட் டம் செயல்படுத்தப்பட்டுள் ளது. 65 சதவீதம் பகுதிக ளில் நச்சு தொட்டிகள் மூலம் கழிவுநீர் சேகரிக்கப் பட்டு மாநகராட்சி மற் றும் தனியார் வாகனங்கள் மூலம் கழிவுநீர் அகற்றப் பட்டு வருகிறது.

தனியார் கழிவுநீர் வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீர் முறையாக மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு பண்ணையில் விடா மல் மாநகரம் மற்றும் மாநகரத்துக்கு வெளியில் உள்ள பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் விடுவதால் நிலத்தடிநீர் மாசுபடுதலும், சுற் றுச்சூழல் பாதிப்பையும் ஏற் படுத்தி வருகிறது. இவ்வகை தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் இயக்கம் முறைப்படுத்தப்படவுள் ளது.

மாநகராட்சி உரிமம் பெற்ற தனியார் கழிவுநீர் வாகனங்களை மட்டுமே மாநகர எல்லைக்குள் மாநகராட்சியின் நிபந்தனைகளுக்குட்பட்டு இயங்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகளை விதிக்கவும், இவ் வகை வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 உரிம கட்டணம் வசூலிக்கவும், ஒவ்வொரு நடைக்கும் பஞ்சப்பூர் கழிவுநீர் பண் ணையில் விடுவதற்கு ரூ.30வசூலித்துக் கொள்ள வும், அனுமதி இல்லாமல் இயங்கும் வாகனங் களுக்கு முதல்முறை ரூ.5,000 அப ராதம் விதிக்கவும் தொட ர்ந்து 3 முறை அனுமதி இல் லாமல் இயங்கும் வாகனங் களை பறிமுதல் செய்து ஏலம் விடுவதற்கும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்தில், நகர்நல அலுவலர் மாரியப்பன், ஸ்கோப் இயக்குனர் சுப்புராமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.செப்டிக் டேங்க்கில் மனிதர்கள் இறங்க தடை நச்சுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் எக்காரணத்தை முன்னிட்டும் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தும் வாகன உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும். இவ்வாறு ஆணையர் தண்டபாணி தெரிவித்தார்.

 

கீழ்குந்தா பேரூராட்சியில் வரியினங்களை 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டுகோள்

Print PDF

தினகரன்             23.01.2014 

கீழ்குந்தா பேரூராட்சியில் வரியினங்களை 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டுகோள்

மஞ்சூர், : கீழ்குந்தா பேரூராட்சியில் குடிநீர், மற்றும் சொத்து வரிகளை வரும் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிறுப்பதாவது:

கீழ்குந்தா பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கடைகளுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், மற்றும் உரிம கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை இதுவரை செலுத்தாதவர்கள் வரும் 31ம் தேதிக்குள் கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தி பேரூராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இது குறித்த ஏற்கனவே பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 31.01.2014ம் தேதிக்கு பின்னர் வரி மற்றும் கட்டணங்கள் பாக்கியுள்ள நபர்கள் மீது 1920-ம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்ட பிரிவின் கீழ் மேல் நடவடிக்கை மற்றும் குடிநீர் இணைப்பு துண்டித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே குறிப்பிட்ட கால கெடுவிற்குள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி நடவடிக்கையை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Page 30 of 506