Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கடை உரிமம் ரத்து: மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமலர்                 27.07.2012

கடை உரிமம் ரத்து: மாநகராட்சி எச்சரிக்கை

அனுப்பர்பாளையம் : திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்து விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் ஓட்டல், பேக்கரி, டீக்கடை என 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடை நடத்த ஒப்பந்தம் எடுத்தவர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை மீறி, பயணிகள் நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர். இது, பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.

அக்கடைக்காரர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றியது; தற்போது மீண்டும் ஆக்கிரமித்து உள்ளனர். மூன்று நாட்களில் பொருட்களை அகற்றாவிட்டால், கடையின் குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு, வைப்பு தொகை பறிமுதல் செய்யப்படும்; மறு ஏலமும் விடப்படும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

குப்பைத் தொட்டியில் மனித உறுப்புகள் மருத்துவமனைகளுக்கு குன்னூர் நகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினமணி               25.07.2012

குப்பைத் தொட்டியில் மனித உறுப்புகள் மருத்துவமனைகளுக்கு குன்னூர் நகராட்சி நோட்டீஸ்

குன்னூர், ஜூலை 24: குப்பைத் தொட்டியில் மனித உறுப்புகள் கிடந்த சம்பவத்தின் எதிரொலியாக குன்னூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.குன்னூர் பெட்போர்டு பகுதியில உள்ள மருத்துவமனையில் இருந்து கொட்டப்பட்ட குப்பையில் மனித உறுப்புகள் இருந்தன.இதைத் தொடர்ந்து, குன்னூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு நகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.அதில், 'அறுவைச் சிகிச்சையின்போது அகற்றப்படும் மனித உறுப்புகள் முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.இல்லையெனில், சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் எம்.மால்முருகன் கூறியது:

குப்பையில் இதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்டு, வீசப்பட்டுள்ளன. இந்தக் கழிவுகள் ஆழமாக புதைக்கப்பட்டு, அகற்றப்பட்டன.இதைத் தொடர்ந்தே மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. மனித உறுப்புகளை அப்புறப்படுவதில் அலட்சியம் காட்டும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

 

நகர்ப்புற வளர்ச்சி கண்காணிப்பு குழு

Print PDF

தினமலர்                               25.07.2012

நகர்ப்புற வளர்ச்சி கண்காணிப்பு குழு

விருதுநகர்:""தமிழகத்தில் மாவட்ட வாரியாக நகர்ப்புற மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க , முதல்வர் ஜெ., உத்தரவிட,'' மாணிக்கம் தாகூர் எம்.பி., கேட்டுக்கொண்டுள்ளார்.அவர் கூறியதாவது: ஒவ்வொரு மாநிலத்திலும், ஜூன் இறுதிக்குள் மாவட்ட வாரியாக ஜவகர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் புணரமைப்பு திட்ட கண்காணிப்பு குழு அமைக்க, மத்திய நகர்ப்புற அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுவரை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படவில்லை. இதனால், நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாநில அரசு பரிந்துரை செய்யும் திட்ட பணிகளுக்கு, நிதி ஒதிக்கீடு செய்ய இயலாத நிலையுள்ளது. நகர்ப்புறத்தின் வளர்ச்சி பாதிப்படையாத வகையில், மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க, தமிழக முதல்வர் ஜெ., உத்தரவிட வேண்டும்,'' என்றார்.

 


Page 293 of 506