Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மழைநீர் சேகரிக்க தவறினால் குடிநீர் "கட்'தமிழக அரசு அதிரடி

Print PDF

தினமலர்                    21.07.2011

மழைநீர் சேகரிக்க தவறினால் குடிநீர் "கட்'தமிழக அரசு அதிரடி

பெ.நா.பாளையம் : "கட்டட உரிமையாளர்கள் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த தவறினால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்' என, அனைத்து பேரூராட்சிகளுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழக அரசு அறிக்கையில் கூறியுள்ளதாவது: பேரூராட்சிகளின் பராமரிப்பில் உள்ள குளங்கள், கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தி, நீர் ஆதாரங்களை தூர் வாரி, நிலத்தடி நீர் சேமிப்பு ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை ஏற்படுத்த, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். பேரூராட்சி கட்டடங்களில், மழைநீர் சேகரிப்புகளை புனரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். உபயோகமற்ற ஆழ்குழாய் கிணறுகள், பொது திறந்த வெளிக்கிணறுகளில் தனியார் பங்களிப்புடன், மழைநீர் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.கட்டட அனுமதி கோரும் வரைபடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளனவா என்பதை உறுதி செய்த பின், செயல் அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தியதை உறுதி செய்த பின், வரி விதிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாத, கட்டட உரிமையாளரின் செலவில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதை மேற்கொள்ளாதபோது, பேரூராட்சிகள் வாயிலாக மழைநீர் சேகரிப்புகள் ஏற்படுத்தி, செலவை, சொத்து வரி வசூலிப்பதை போல, உரிமையாளர்களிடம் வசூலிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பை வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் ஏற்படுத்த தவறும் பட்சத்தில், கட்டடத்திற்கு வழங்கப்படும் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும்.பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு ள்ளதை, உறுதி செய்து, உரிய சான்றிதழ் பெற்று, அனுப்புமாறு அனைத்து மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மோட்டார்கள் பறிமுதல்

Print PDF

தினமணி              01.07.2011

குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மோட்டார்கள் பறிமுதல்

கோவில்பட்டி, ஜூன் 30: கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 5 மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சில பகுதிகளில் மின் மோட்டார் பயன்படுத்தி, குடிநீர் உறிஞ்சப்படுவதாக நகராட்சி ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்புலட்சுமி, உதவி பொறியாளர் சண்முகநாதன் மற்றும் ஊழியர்கள் 32-வது வார்டுக்கு உள்பட்ட பாரதி நகர் வடக்குத் தெரு மற்றும் 11-வது வார்டுக்கு உள்பட்ட பங்களாத் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகத்தின் போது திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 5 மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தனர்.

இதுபோன்ற ஆய்வு அனைத்து வார்டுகளிலும் தொடர்ந்து நடைபெறும் என்றும், மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சி எடுத்தால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு, கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரித்தார்.

 

மாநகராட்சிக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் பைசல் செய்தது

Print PDF

தினமலர்                   28.06.2011

மாநகராட்சிக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் பைசல் செய்தது

மதுரை : மதுரை நெல்பேட்டையில் ஆடுவதை கூடம் செயல்படுவதை தடுக்க தவறியதாக கூறி தாக்கலான அவமதிப்பு வழக்கை, மாநகராட்சி கமிஷனர் தாக்கல் செய்த வாக்குமூலத்தை ஏற்று, ஐகோர்ட் கிளை பைசல் செய்தது. மதுரையை சேர்ந்த அப்துல்காதர் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு: நெல்பேட்டை காயிதே மில்லத் தெருவில் ஆடு வதை கூடம் செயல்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதை மூடக் கோரி ஐகோர்ட் கிளையில் ரிட் மனுக்கள் தாக்கலாகின. இதை விசாரித்த ஐகோர்ட், கடந்த அக்., 18ல் நெல்பேட்டை ஆடு வதை கூடத்தை மூட உத்தரவிட்டது. மாநகராட்சி அதை மூடியது. சிறிது நாட்களில் அங்கு மீண்டும் ஆடுகள் வதை செய்யப்பட்டன. அதை தடுக்க மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி தவறினர். அவர்கள் மீது அவமதிப்பு பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. வழக்கு நீதிபதிகள் கே.சுகுணா, .ஆறுமுகச்சாமி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் பதில் மனுவை கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், மாநகராட்சி வக்கீல் எம்.ரவிசங்கர் தாக்கல் செய்தனர். மனுவில், ""நெல்பேட்டை ஆடு வதை கூடத்தை மூட ஐகோர்ட் காலக்கெடு நிர்ணயிக்கவில்லை. அந்த வதை கூடத்தை போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள் ஜூன் 24ல் மூடிவிட்டனர். அனுப்பானடியில் புதிய ஆடு வதை கூடம் திறக்கப்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவை மீறவில்லை,'' என குறிப்பிடப்பட்டது. அதை ஏற்று மாநகராட்சி கமிஷனர் உட்பட மூவர் மீதான அவமதிப்பு வழக்கை பைசல் செய்த நீதிபதிகள், ஆடு வதை கூடத்தை மூடுவது குறித்த கோர்ட் உத்தரவை மாநகராட்சி கமிஷனர் செயல்படுத்தியுள்ளார். கோர்ட் உத்தரவு மீறப்படவில்லை, என்றனர்.

Last Updated on Tuesday, 28 June 2011 10:12
 


Page 295 of 506