Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நகராட்சிக்கு வரி செலுத்தாத 12 கடைகளுக்கு "சீல்' வைப்பு

Print PDF
தினமலர்       16.12.2010

நகராட்சிக்கு வரி செலுத்தாத 12 கடைகளுக்கு "சீல்' வைப்பு

வால்பாறை :  வால்பாறையில் வரி செலுத்தாமல் "டிமிக்கி' கொடுத்த 12 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

வால்பாறை நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு சொந்தமான 358 கடைகள் உள்ளன.  வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடைவாடகை உள்ளிட்ட வரிகள் செலுத்த கடந்த 12ம் தேதிக்குள் செலுத்த நகராட்சி நிர்வாகம் கெடு விதித்தது. இதனையடுத்து வால்பாறை டவுன் பகுதியில் உள்ள பெரும்பாலான  மக்கள் தங்கள் செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தியுள்ளனர்.

வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் பெரும்பலாõன கடைகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய  வரிகளை செலுத்தாமல் "டிமிக்கி' கொடுத்து வந்தனர். இதனையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளர்  மணிகண்டன் தலைமையில் அதிகாõரிகள் மார்க்கெட் பகுதியில் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வரி செலுத்துவதற்கான கெடு முடிவடைந்த நிலையிலும் பெரும்பாலானவர்கள் கடை வாடகை செலுத்தாமல் உள்ளனர். தற்போது 60 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டது. வரி செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. இதே போல் வீடு மற்றும் கடைகளில் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின்  குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றனர்.
 

பூங்கா இடத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை: கமிஷனர் அறிவிப்பு

Print PDF

தினமலர்      16.12.2010

பூங்கா இடத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை: கமிஷனர் அறிவிப்பு

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு நகரில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி கமிஷனர் சுப்புராஜ் தெரிவித்தார். செங்கல்பட்டு நகராட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நகராட்சி தலைவர் ஜெயா தலைமை தாங்கினார். கூட்டத்தில், நகரில் உள்ள பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பூங்காவிற்கென ஒதுக்கப்பட்ட இடத்தை, வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பூங்காவிற்காக தான் பயன்படுத்த வேண்டும். மற்ற நகர்களில் தப்பு நடந்திருந்தால் அப்போதைய கமிஷனர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எனவே, கோப்புகளை மறு ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே கட்டியது சட்டப்படி தப்பாக இருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, கமிஷனர் பதில் அளித்தார்.

 

மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு

Print PDF
தினகரன்        16.12.2010

மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு

கோவை, டிச. 16: தமிழக அரசின் நகராட்சி நிர்வாகங்களின் கூடுதல் இயக்குனர் சந்திரசேகரன் நேற்று கோவை வந்தார். மாநகராட்சி பிரதனா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், உயர் அதிகாரிகளுடன் வரி வசூல் தொ டர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உடனுக்குடன் நிலுவையின்றி வசூலிக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில், மாநகராட்சி துணை கமிஷனர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 


Page 299 of 506