Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பூந்தமல்லியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 3 வீடு- 6 கடைகளுக்கு "சீல்" நகராட்சி கமிஷனர் நடவடிக்கை

Print PDF

மாலை மலர்              13.12.2010

பூந்தமல்லியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 3 வீடு- 6 கடைகளுக்கு "சீல்" நகராட்சி கமிஷனர் நடவடிக்கை

பூந்தமல்லியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 3 வீடு- 6 கடைகளுக்கு “சீல்” 
 
 நகராட்சி கமிஷனர் நடவடிக்கை

பூந்தமல்லி, டிச.13-பூந்தமல்லியில் உள்ள பல கட்டிடங்கள் நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளன.இதையடுத்து நகராட்சி கமிஷனர் சுமா கடந்த 3-ந்தேதி நகராட்சி அனுமதியின்றி கட்டிய கட்டிட உரிமையாளர்கள் உரிய அனுமதி பெற வேண்டும். இல்லாவிட்டால் அக்கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் சில கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.

அதன்பிறகும் யாரும் நகராட்சியிடம் உரிமை பெறுவதற்காக விண்ணப்பம் கூட வாங்கவில்லை.இந்நிலையில் கமிஷனர் சுமா, நகரமைப்பு ஆய்வாளர் தினகர் தலைமையில் அதிகாரிகள் இன்று பூந்தமல்லி பாரிவாக்கத்தை சேர்ந்த திலகவதி அனுமதியின்றி கட்டிய 3 வீடுகள், 3 கடைகளுக்கு "சீல்" வைத்தனர்.

இதேபோல் எம்.ஜி. ரோட்டில் உள்ள ராஜேஸ்வரிக்கு சொந்தமான 3 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதுபற்றி கமிஷனர் சுமா கூறும்போது, நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட அனைத்து வீடு- கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்றார்.

 

வரி செலுத்த தவறினால் ஜப்தி நடவடிக்கை: கமிஷனர் எச்சரிக்கை

Print PDF

தினமலர்              13.12.2010

வரி செலுத்த தவறினால் ஜப்தி நடவடிக்கை: கமிஷனர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் லோகநாதன் வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் பலகோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் நகராட்சி வருமானத்தை வைத்து ஈடு செய்யப்படும். 2010-11ம் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி கடந்த ஏப்ரல் 30ம் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி அக்டோபர் 31ம் தேதிக்குள்ளும் நகராட்சிக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், கடை வாடகைகள் சம்மந்தப்பட்டவை அந்தந்த மாதத்தின் 10ம் தேதிக்குள் நகராட்சிக்கு தவறாமல் செலுத்தப்படவேண்டும்.

ஆனால், பலர் வரி செலுத்தமாமல் உள்ளனர். எனவே நகராட்சிக்கு 2010-11ம் ஆண்டுக்கு செலுத்தப்பட்ட வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, காலிமனை வரி, கடை வாடகை, குடிநீர் கட்டணம் மற்றும் உரிம கட்டணங்கள் ஆகியவற்றை நகராட்சியின் கம்ப்யூட்டர் வரி வசூல் மையங்களில் அனைத்து நாட்களிலும் செலுத்தலாம். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.குத்தகை தொகைகள் செலுத்துவதற்காக காலக்கெடு கடந்த மாதம் 30ம் தேதிக்குள் முடிவுற்றதால் ஆண்டு குத்தகை தொகைகளை வரும் 15ம் தேதிக்குள் தவறாமல் செலுத்தி குத்தகை உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும்.நிலுவை தொகைகள் செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குத்தகை செலுத்தாத இனங்களில் குத்தகை உரிமம் ரத்து செய்து துறை மூலமாக வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

 

நகராட்சி இணை இயக்குனர் விழுப்புரம் நகரில் ஆய்வு

Print PDF

தினமலர்            10.12.2010

நகராட்சி இணை இயக்குனர் விழுப்புரம் நகரில் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரத் தில் இணைப்பு சாலைக்கு கைய கப்படுத்த உள்ள பகுதியைநகராட்சி இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் சண்முகபுரம் காலனியில் உள்ளமருதூர் மேட்டுத்தெரு-தங்கர ஜ் அவுட் ,கிழக்கு பாண்டிரோடு-திருப்பானாழ் வார்தெருமற்றும் பெரியகாலனியில்உள்ள ஜி.ஆர்.பி., தெரு- அருந்ததியர் தெரு ஆகிய இணைப்பு சாலைகள்பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ளது.தனியார் வசம் உள்ளஇந்த சாலையை அரசுகையகப்படுத்திட நகராட்சிசார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அர க்கு பரிந்துரை செய்யப்பட்டது.இதற்காக நேற்று விழுப்புரம் வந்த நகராட்சிகளின்இணை இயக்குனர் (நிர்வாகம்) பிரசன்னவெங்கடேசன் இந்த இணைப்புசாலைப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி கமிஷனர்சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 


Page 303 of 506