Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கிச்சடியில் புழுக்கள் அறிக்கை சமர்ப்பிக்க மாநகராட்சி உத்தரவு

Print PDF

தினகரன்               10.12.2010

கிச்சடியில் புழுக்கள் அறிக்கை சமர்ப்பிக்க மாநகராட்சி உத்தரவு

மும்பை, டிச. 10: கிச்சடியில் புழுக்கள் இருந்தது பற்றி விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தேவ்னாரில் உள்ள மாநகராட்சி உருது பள்ளியில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட கிச்சடியில் புழுக்கள் இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநகராட்சியின் கல்வி குழு தலைவர் ருக்மிணி பள்ளிக்கு ஆய்வு நடத்த சென்ற போது மாணவர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த கிச்சடியில் புழுக்கள் இருப்பதை கண்டார்.

பள்ளிமாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் இந்த பள்ளியில் படிக்கும் சுமார் 1250 குழந்தைகளுக்கு பூஜா மகிளா மண்டல் என்ற அமைப்பு கிச்சடி சப்ளை செய்து வருகிறது. மாணவர்கள் இந்த கிச்சடியை சாப்பிட்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் கிச்சடியில் புழுக்கள் கிடந்தது பற்றி விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி துறை அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இன்னும் 2 நாட்களுக்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

பணிகள் தரம் ஆய்வு: கோவை மாநகராட்சி புதிய திட்டம்

Print PDF

தினகரன்                     10.12.2010

பணிகள் தரம் ஆய்வு: கோவை மாநகராட்சி புதிய திட்டம்

கோவை, டிச. 10: கோவை மாநகராட்சி சார்பில் பல கோடி ரூபாய்க்கு திட்டப் பணிகள் நடக்கிறது. பணி யின் தரம் தொடர்பாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன. இதை, ஆய்வு செய்ய நேர்மையான, தொழில்நுட்பம் தெரிந்தவர்கள்தேவை என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பணிகளை அரசு பொறி யியல் கல்லூரி பேராசிரியர் கள் குழு அடிக்கடி ஆய்வு செய்து அந்த விவரங்கள் மாநகராட்சி உயரதிகாரிகளி டம் ஒப்படைக்கப்பட்டு வந் தது. ஆய்வறிக்கைக்கு பின் னரே, பில் தொகை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பி.எஸ்.ஜி, குமரகுரு, கற்பகம், ஸ்ரீகிருஷ் ணா, வி.எல்.பி போன்ற தனியார் கல்லூரிகளின் கட்டிடத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய தனிக்குழுவை மாநகராட்சி ஏற்படுத்தியுள் ளது. குழுவுக்கு மாநகராட்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ377.17 கோடி பாதாளச் சாக்கடை திட்டப்பணி, ரூ180 கோடி மழை நீர் வடிகால் பணிகளை குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர். ஆய்வறிக்கை ரகசியமாக வைக்கப்படும். மாநகராட்சி கமிஷனர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்திற்கு ஆய்வு விவரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

ஆய்வில், முறைகேடு நடப்பதும், பணியின் தரம் குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், ஒப்பந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணியின் தரம் குறை வாக இருந்தால், ஒப்பந்த நிறுவனங்களுக்கு பில் வழங்க தடை விதிக்கப்படும். ஒப்பந்த பணிக்காக பெறப்பட்ட முன்வைப்பு தொகை யை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 

வரி செலுத்தாத கடைகளுக்கு "சீல்" குன்னூர் நகராட்சி அதிரடி

Print PDF

மாலை மலர்          09.12.2010

வரி செலுத்தாத கடைகளுக்கு "சீல்" குன்னூர் நகராட்சி அதிரடி

குன்னூர், டிச. 8- குன்னூர் பஸ் நிலையம் மவுண்டு ரோடு ஆகிய இடங்களில் உள்ள 10 கடைகள் நகராட்சிக்கு சுமார் ரூ. 6.05 லட்சம் வரிபாக்கி செலுத்த வேண்டியது இருந்தது. இதில் ஒரு கடை மட்டும் ரூ. 2 1/2 லட்சம் செலுத்த வேண்டிய திருந்தது.

இந்த கடைகளுக்கு நகராட்சி நோட்டீசு அனுப்பி இருந்தது. வரி பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டு அதற்கு காலக்கெடுவும் நிர்ணயித்து இருந்தது.

இருப்பினும் மேற்கண்ட 10 கடைகளின் உரிமையாளர்கள் வரி பாக்கியை செலுத்த வில்லை. இதனால் நேற்று நகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி, வரி பாக்கி செலுத்தாத 10 கடைகளுக்கு "சீல்" வைத்தனர்.

மேலும் குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியிலும் நேற்று அதிகாரிகள் ஈடுபட்டனர்.

நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளிலும் வரி பாக்கியை செலுத்தாத பொது மக்கள் உடனடியாக தங்களது வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்று நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சண்முகம் தெரி வித்துள்ளார்.

 


Page 304 of 506