Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சாலையில் குழி தோண்டுபவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Print PDF

தினமணி              09.12.2010

சாலையில் குழி தோண்டுபவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

பெங்களூர், டிச. 8: சாலையில் தோண்டிய குழியை, மூடாமல் இருந்தால் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சித்தையா எச்சரித்தார்.

சாலைகளில் குழி தோண்டி குடிநீர் குழாய், கேபிள் போன்றவைகளை பதித்துவிட்டு சரியான முறையில் மூடாமல் விட்டு விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

எனவே, சாலைகளில் குழி தோண்டி சரியான முறையில் அடைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

÷செவ்வாய்க்கிழமை நகர மேற்கு மண்டலத்தில் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்ட அவர், குடிநீர் வடிகால் வாரியத்தினர் குழாய்களை புதைத்து பிறகு அதை சரியாக அடைக்காமல் இருந்ததை பார்த்தார்.

பொதுமக்களிடம் இருந்து இதுபோன்ற புகார்கள் அதிக அளவில் வருவதாக தெரிவித்த அவர், இது போன்று சாலைகளில் குழிதோண்டி சரியாக அடைக்காதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

 

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 638 வீடுகளுக்கு நோட்டீஸ்

Print PDF

தினகரன்              09.12.2010

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 638 வீடுகளுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி, டிச.9: அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 638 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மாநகராட்சி நிலைக் குழு தலைவர் தெரிவித்தார்.

இதுபற்றி நிலைக் குழுத்தலைவர் யோகேந்தர் சந்தாலியா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

லட்சுமி நகர் லலிதா பார்க் அருகில் இருந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 70 பேர் பலியானா ர்கள். இந்த சம்பவம் கடந்த மாதம் 15ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டுவதை கட்டுப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது.

தெற்கு டெல்லியில் உள்ள ஷாஷ்தாரா பகுதியில் அனுமதியில்லாமல் கட்டப்படும் 638 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அந்த கட்டிடங்கள் பாதுகாப்பு முறை களை பின்பற்றி கட்டப்படுகின்றனவா? என்று மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்வார்கள்.

அதன் பிறகு வீடுகளின் சொந்தக்காரர்கள் உடனடியாக மாநகராட்சிக்கு முறை ப்படி மனு செய்து கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும். மாநகராட்சி கொடுக்கும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதேபோல பலவீனமாகவும், ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் இருக்கும் கட்டிடங்கள் பற்றியும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆபத்தான கட்டிடங்களை மாநகராட்சி இடித்து தள்ளும். அல்லது கட்டிட உரிமையாளர்களே இடித்து விட வேண்டும்.

ஏற்கனவே தெற்கு டெல்லியில் சிவில் லைன் காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆபத்தான நிலையில் இருந்த 30 கட்டிடங்களை மாநகராட்சி இடித்து தள்ளி விட்டது. இவ்வாறு யோகேந்தர் சந்தாலியா கூறினார்.

 

கழிவுநீர் அகற்றும் பணி: தனியார் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அறிவுரை

Print PDF

தினமணி                 08.12.2010

கழிவுநீர் அகற்றும் பணி: தனியார் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அறிவுரை

கோவை, டிச. 7: கழிவுநீர் அகற்றும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்து கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா அறிவுறுத்தியுள்ளார்.

செப்டிக் டேங்க் கழிவுநீர் அகற்றும் ஊர்தி ஓட்டுநர்கள், பணியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை ஆணையர் எஸ்.பிரபாகரன், நகர்நல அலுவலர் எஸ்.ஹரிகிருஷ்ணன், உதவி நகர்நல அலுவலர் பி.அருணா, சுகாதார ஆய்வாளர்கள், கழிவுநீர் அகற்றும் தனியார் லாரி நிறுவன பணியாளர்கள் பங்கேற்றனர்.

செப்டிக் டேங்குகளைச் சுத்தம் செய்யும் பணியை துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு செய்யக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, இப்பணியை மேற்கொள்ளும்போது சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கழிவுநீர் அடைப்புகள், செப்டிக் டேங்க் கழிவுகள் அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து வகையான பணிகளிலும் இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாத சூழலில் மட்டுமே துப்புரவுப் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். லாரிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை பொதுசுகாதாரத்துக்கு கேடு விளைவிக்காத வகையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

 


Page 305 of 506