Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குன்னூர் நகராட்சியில் வாடகை செலுத்தாத 10 கடைக்கு சீல்

Print PDF

தினகரன்             07.12.2010

குன்னூர் நகராட்சியில் வாடகை செலுத்தாத 10 கடைக்கு சீல்

குன்னூர், டிச.8: குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான இடம் மற்றும் கட்டடங்களில் மொத்தம் 968 தனியார் கடைஇயங்கி வருகிறது. இதில் மாதம் மற்றும் நாள் வாடகை வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கடை வாடகையை சரியாக செலுத்தாததால் நகராட்சியில் நிதி ஆதாரம் குறைந்து வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, நகராட்சி ஆணையர்(பொறுப்பு) சண்முகம் உத்தரவின் பேரில் வருவாய் அலுவலர்கள் சக்திவேல், பாஸ்கரன், சந்தைகண்காணிப்பாளர்கள் மற்றும் வருவாய் உதவி அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழு நேற்று முன் தினம் குன்னூர் பஸ் நிலையம், மார்க்கெட், மவுண்ட்ரோடு உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிக வாடகை நிலுவை வைத்துள்ள 10 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சீல் வைக்கப்பட்ட 10 கடைகளில் 6 லட்சத்து 7 ஆயிரத்து 860 ரூபாய் வாடகை நிலுவை உள்ளது. இதில் ஒரு கடை மட்டும் 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் நிலுவை வைத்துள்ளது. நாங்கள் பலமுறை வலியுறுத்திய பிறகும் தொடர்ந்து வாடகை செலுத்தாமல் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேபோல் மார்க்கெட் பகுதியில் 10 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கியுள்ளது. இதனை வசூலிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரும் 15ம் தேதிக்குள் நகராட்சியில் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி கட்டணத்தை செலுத்த நுகர்வோர் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதன்படி நாளொன்றுக்கு ரூ.6 முதல் 8 லட்சம் வரை வரி வசூல் செய்யப்பட்டு வந்தாலும், சொத்து வரி மட்டும் 23 லட்சம் ரூபாய் பாக்கியுள்ளது. மேலும் குடிநீர் வரி 3.5 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. இதனை வரும் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இன்றுவரை வரி செலுத்தாத 7 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றனர்.

பாதாளசாக்கடை சுத்தம் செய்ய தொழிலாளர்களை பயன்படுத்தகூடாது மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்               07.12.2010

பாதாளசாக்கடை சுத்தம் செய்ய தொழிலாளர்களை பயன்படுத்தகூடாது மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

திருப்பூர், டிச. 7: பாதாள சாக்கடை மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணிக்கு தொழிலாளர்களை பயன்படுத்தக் கூடாது என திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி விடுத்துள்ள அறிக்கை:

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு படியும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளபடியும் மனித தொழிலாளர்களை பாதாள சாக்கடை சுத்தப்படுத்தும் பணி மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணிக்கு ஈடுபடுத்த அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழி சுத்தம் செய்யும் போது அபாயகரமான நச்சு வாயு வெளியேறும் என்பதால் பொதுமக்கள் இப்பணிக்கு உரிய இயந்திரங்களை ஜெட்ராடிங் மெசின், 1397904493 சில்டிங் மெசின், மொபைல் மெக்கானிக்கல் பம்ப்ஸ் மற்றும் இது சம்பந்தப்பட்ட மெஷின்களை பயன்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை குழாய் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் திருமண மண்டபங்கள் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், மாட்டுத் தொழுவங்கள் ஆகியவற்றிலிருந்து திடப்பொருள்களை பாதாள சாக்கடைக்குள் கலக்கக் கூடாது.

அதன்படி வரும் திடப்பொருள்களை சேம்பர் அமைத்து பாதாள சாக்கடை குழாயில் கலக்கவிடாமல் தடுக்கப்பட வேண்டும். மேலும் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், மழை நீர் வடிகால்களுடன் இணைக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பேரூராட்சி மீது ஊழல் புகார் விசாரிக்க உத்தரவு

Print PDF

தினகரன்            07.12.2010

பேரூராட்சி மீது ஊழல் புகார் விசாரிக்க உத்தரவு

கோவை, டிச 7: கோவை வடவள்ளி பேரூராட்சியில் பைப் லைன் பழுது பார்த்ததில் முறைகேடு நடந்திருப்பதாக மனுநீதி முகாமில் கொடுத்த புகார் மீது விசா ரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. வடவள்ளி பொம்மணம்பாளையத்தை சேர்ந்த வெங்கிடகிரி என் பவர் பேரூராட்சி நிர்வாகம் மீது ஒரு புகார் மனு கொடுத் தார். அதில் வடவள்ளி பேரூராட்சியில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் பல்வேறு பணிகள் செய்ததில் ரூ.1.31 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக குடிநீர் குழாய் சரி பார்த்ததில் பெரிய அளவில் முறை கேடு நடந்துள்ளது. குப்பை வண்டி பழுது பார்த்ததில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் ரூ.2.52 லட்சம் செலவு செய் ததாக கூறப்பட்டுள்ளது. இதிலும் முறைகேடு நடந்துள்ளது. மறு தணிக்கை செய்து முறைகேடு கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண் டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.புகார் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உமாநாத், இது தொடர்பாக பேரூராட்சி உதவி இயக்குநரை விசாரிக்க உத்தரவிட்டார்.

Page 306 of 506