Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கழிவுநீர் இணைப்பை நேரடியாக பாதாள சாக்கடையில் இணைக்க தடை

Print PDF

தினமலர்                06.12.2010

கழிவுநீர் இணைப்பை நேரடியாக பாதாள சாக்கடையில் இணைக்க தடை

திருச்சி: திருச்சி மாநகராட்சி கமிஷனர் பால்சாமி வெளியிட்ட அறிக்கை: பாதாள சாக்கடை, தனியார் நிறுவனங்களில் உள்ள செப்டிக் டேங்க் போன்றவற்றில் ஆட்களை வைத்து அடைப்புகளை நீக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனடிப்படையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழியை சுத்தம் செய்யவோ, அடைப்புகளை நீக்குவதுக்கோ மனிதர்களை இறக்கி பணிக் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகளில் உள்ள செப்டிக் டேங்குகளில் ஆட்களை இறக்கி சுத்தம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவகம், தங்கும் விடுதி, மருந்தகம், திருமண மண்டபம், கல்வி நிறுவனம், தொழிற்சாலை, மாடு வளர்க்கும் உரிமையாளர்கள் ஆகியோரது கட்டிடங்களிலிருந்து சாக்கடை இணைப்புகளை நேரடியாக பாதாள சாக்கடை மெயின் இணைப்பில் கொடுக்கக் கூடாது. உரிமையாளர்கள் அனைவரும் தங்களது சொந்த செலவில், "டையாபிரம் சேம்பர்' எனும் பிரத்யேக தொட்டி அமைக்க வேண்டும். அதன் மூலம் தான் பாதாள சாக்கடை மெயின் இø ணப்பு கொடுக்க வேண்டும்.

மேலும் 15 நாட்களுக்குள் இந்த பிரத்யேக தொட்டி மூலம் இணைப்புக் கொடுக்கத் தவறினால் இணைப்புத் துண்டிக்கப்படும். கட்டிட உரிமையாளர்கள், கழிவு நீரை நேரடியாக மழைநீர் வாய்க்கால், பெரிய வாய்க்கல்களில் விடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்களுக்குள் பாதாள சாக்கடை இணைப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். பாதாள சாக்கடை புதிய இø ணப்பு கொடுக்கும் போது, மூடி உடைந்து உள்ளே விழுந்து அø டப்பு ஏற்பட்டால், செப்டிக் டேங்க் சுத்தம் செய்வது போன்ற சமயங்களில் கழிவு நீரை முழுமையாக வெளியேற்றி விட்டுத்தான் ஆள் தக்க கவச உடையுடன் முழு பாதுகாப்புடன் இறங்க வேண்டும். இல்லையெனில், அந்தக் கட்டிட உரிமையாளர் மற்றும் உள் ளே இறங்குபவர்கள் மீது காவல் துறை மற்றும் மாநகராட்சி மூலமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி பகுதியில் ஏற்படும் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்ய இரண்டு பெரிய ஜெட் ராடர் வாகனங்களும், நான்கு மினி ஜெட் ராடர் வகைகளும் உள்ளன. சில்ட் அப்புறப்படத்த நான்கு சிறிய வாகனங்களும் உள்ளன. இதை உபயோகப்படுத்தி பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் பிரத்யேக தொட்டி அமைக்க வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டுள்ளதால், ஹோட்டல், மருந்தகம், கல்வி நிறுவன உரிமøயாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

கடைகளில் அதிரடி சோதனை பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்                 06.12.2010

கடைகளில் அதிரடி சோதனை பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

உத்தமபாளையம், டிச. 6: உத்தமபாளையத்தில் உள்ள ஓட்டல், டீக்கடைகளில் சுகாதாரத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். தடையை மீறி பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், இயற்கையான மண்வளம், நீர்வளம் கெட்டு விடுகிறது என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உத்தமபாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடையை மீறுவோர் மீது ரூ.500 முதல் ரூ.5ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன், சுகாதார அதிகாரி முருகானந்தம் மற்றும் சுகாதாரத்துறையினர் நேற்று உத்தமபாளையத்தில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். தடையை மீறி பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன் கூறும்போது, உத்தமபாளையத்தில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீக்கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மீறி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற சோதனைகள் தொடரும், என்றார்.

 

அனுமதியின்றி கட்டிடம் 7 பேர் மீது நடவடிக்கை மாநகராட்சி அதிரடி

Print PDF

தினகரன்               06.12.2010

அனுமதியின்றி கட்டிடம் 7 பேர் மீது நடவடிக்கை மாநகராட்சி அதிரடி

புதுடெல்லி, டிச.6: லட்சுமி நகர் லலிதாபார்க் அருகே இருந்த 4 மாடிக் கட்டிடத்தில் மாநகராட்சி அனுமதி இல்லாமல் 5வது மாடி கட்டப்பட்டது. சமீபத்தில் பெய்த பலத்த மழையால் அந்த கட்டிடத்தின் அருகே மழை நீர் தேங்கியது.

இதனால் அதன் அஸ்திவாரம் பலவீனம் அடைந்து கட்டிடம் இடிந்தது. இந்த விபத்தில் சிக்கி 70 பேர் உயிரிழந்தனர்.அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள ஆபத்தான கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி கிங்ஸ்வே கேம்ப், சிவில் லைன்ஸ், மகேந்திரு என்கிளேவ், ஆதர்ஸ் நகர் மற்றும் ராணாபிரதாப் பாக் ஆகிய பகுதிகளில் அனுமதி இல்லாமல் கட்டபட்டு இருந்த 24 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. நஜாப்கர் மண்டலத்தில் உள்ள மகிபால்பூர், மகிபால்பூர் விரிவாக்கம், சாத் நகர், சாவ்லா மற்றும் விடாஸ்டா ஆகிய இடங்களில் இருந்த 7 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த கட்டிடங்களை கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தீர்மானித்துள்ளது. அதன்படி கட்டிடத்தை கட்டிய 7 பேருக்கு சார்பில் விளக்கம் கேட்டு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 


Page 307 of 506