Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி             01.12.2010

மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

மதுரை, நவ.30: மதுரை மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாநில நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் ப.செந்தில்குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

மதுரை மாநகராட்சிக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த ஆய்வில், ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாநகராட்சி நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், சுற்றுலாத்துறை மூலம் மதுரையில் நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

மேலும், மாநகராட்சி மூலம் நடைபெறும் வரி வசூலிப்பை தீவிரப்படுத்தவும், மாநகராட்சி தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மழைக் காலம் முடிந்துவிட்டதால், மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

கமிஷனர் எஸ்.செபாஸ்டின், மண்டல நிர்வாக அலுவலர் அசோகன், தலைமைப் பொறியாளர் சக்திவேல், துணை கமிஷனர் தர்ப்பகராஜ், கண்காணிப்புப் பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நகராட்சி அலுவலர்கள் கூட்டம்: தென் மாவட்ட அளவிலான நகராட்சி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் ஆலோசனைகளை வழங்கினார்.

 

வரி செலுத்தாத கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன்            01.12.2010

வரி செலுத்தாத கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

நெல்லை, டிச.1: தச்சை மண்டல அலு வலக பகுதிகளில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்ட ணம் செலுத்தாமல், நிலுவை வைத்துள்ள கட்டிடங்கள் மீது மாநகராட்சி அதிகாரி கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தச் சை மண்டல உதவி கமிஷ னர் சாமுவேல் செல்வராஜ் தலைமையில் உதவி வரு வாய் அலுவலர் பரமசிவன், வருவாய் உதவியாளர்கள் முத்துராமலிங்கம், கோபாலகிருஷ்ணன், வேலாயுதம் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் அடங்கிய குழு 54,55 வார்டுகளில் வரி பாக்கி கணக்கெடுத் தது.

இதில் டவுன் நேதாஜி சாலை, பருவதசிங்கராஜா தெரு, திருநீலகண்டர் தெரு ஆகிய இடங்களில் 3 ஆண்டுகளாக வரிபாக்கி வைத்திருந்த 4 கட்டிடங்களில் குடி நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் முடிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள கட்டிடங்கள் மீது ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 

விகாஸ் மார்க்கில் விரிசல் விழுந்த கட்டிடத்துக்கு‘சீல்’

Print PDF

தினகரன்            01.12.2010

விகாஸ் மார்க்கில் விரிசல் விழுந்த கட்டிடத்துக்குசீல்

புதுடெல்லி, டிச. 1: விகாஸ் மார்க்கில் விரிசல் விழுந்த கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கிழக்கு டெல்லியின் லட்சுமி நகரில் உள்ள லலிதா பார்க்கில் கடந்த 15ம்தேதியன்று 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 70 பேர் பலியானார்கள். அதில், 2 மாடி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதனால் அனுமதியற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடத்துக்கு அருகில் உள்ள விகாஸ் மார்க் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் விரிசல் விழுந்துள்ளதாக மாநகராட்சிக்கு நேற்று முன்தினம் தொடர்ந்து புகார்கள் வந்தன. மாநகரா ட்சி அதிகாரிகள் விரைந்து சென்று, கட்டிடத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி சீல் வைத்தனர். பிறகு, விரிசலை ஆய்வு செய்தபோது, அது பல மாதங்களுக்கு முன்பே விழுந்த விரிசல் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கட்டிடம் முழுவதையும் மாநகராட்சியின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கட்டிடத்துக்கு உடனடியாக ஆபத்து எதுவும் இல்லை என்பது தெரிந்தது. ஆனாலும், மாநகராட்சி தொழில்நுட்ப பிரிவின் கட்டுப்பாட்டில் கட்டிடம் கொண்டு வரப்பட்டுள்ளது.

விரிசலின் அகலம் நாளுக்குநாள் அதிகரிக்கிறதா? என்பதை கண்காணிப்பதற்காக, விரிசல் விழுந்த இடத்தில் கண்ணாடிகளும், பேப்பர் அட்டைகளும் பொருத்தப்பட்டுள்ளன. விரிசல் அதிகரித்தால் கண்ணாடிகள் உடைந்து விடும். பேப்பர் கிழிந்து விடும். அதனால் இன்னும் சில தினங்களில் இந்தக் கட்டிடத்தின் உறுதித்தன்மை தெரிந்துவிடும். அதன்பிறகு, தொழில்நுட்ப பிரிவினர் தரும் இறுதி அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி எடுக்கும். இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

 


Page 310 of 506