Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மெரினா கடற்கரையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

Print PDF

தினத்தந்தி               18.01.2014

மெரினா கடற்கரையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

புத்தாண்டு, பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் தினமும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதையடுத்து, மெரினாவில் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் புதிது, புதிதாக உருவானது.

இதனால் மெரினா கடற்கரை முழுவதும் கடைகளாக காட்சியளித்தது. சுற்றுலா பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கிடையில் மெரினா கடற்கரையை சுற்றி பார்த்தனர்.

 புதிய கடைகள் அதிகளவில் திறக்கப்பட்டதால், மாநகராட்சி அனுமதியோடு கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த வியாபாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசாரின் உதவியோடு மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று அதிரடியாக அகற்றினார்கள்.
 

இறைச்சி விற்பனைக்கு தடை

Print PDF

தினமணி            14.01.2014

இறைச்சி விற்பனைக்கு தடை

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் திருவள்ளுவர் தினமான ஜனவரி 15-ம் தேதி அன்று இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஆடு, மாடு வதை செய்வதும் அன்றைய தினம் தடை செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

15-இல் இறைச்சிக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை

Print PDF

தினமணி           10.01.2014

15-இல் இறைச்சிக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை

திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் ஜன.15-இல் மாநகராட்சிப் பகுதிகளில் இறைச்சிக் கடைகளைத் திறப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி ஆணையாளர் க.லதா எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

 வரும் 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும் இறைச்சி விற்பனை செய்வதும்  தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.  எனவே, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 15-ஆம் தேதி ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகளை மூட வேண்டும். கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் உக்கடம், சிங்காநல்லூர், துடியலூர் ஆடு அறுவை மனைகள், கணபதியில் உள்ள மாடு அறுவை மனை மற்றும் 10 இறைச்சிக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.  இந்த உத்தரவை மீறிச் செயல்படும் இறைச்சிக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 


Page 32 of 506