Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மழைநீர் புகுந்த பகுதிகள்மேயர், கமிஷனர் பார்வை

Print PDF

தினமலர்            30.11.2010

மழைநீர் புகுந்த பகுதிகள்மேயர், கமிஷனர் பார்வை

திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதியில் மழைநீர் புகுந்த குடியிருப்புகளை மாநகராட்சி மேயர், கமிஷனர் நேரில் சென்று பார்வையிட்டனர்.திருச்சி மாநகரில் பெய்த தொடர் மழையால் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கோரையாறு, அரியாறு,உய்யக்கொண்டான் வாய்க்காலில் வரும் மழைநீர் புத்தூர் கலிங்கு ஆறுகண் வழியாக உய்யக்கொண்டான் வடிகால் வாய்க்கால் மூலமாக காவிரி ஆற்றுக்குச் செல்கிறது.உய்யக்கொண்டான் வடிகால் வாய்க்காலில் மழைநீர் தடையின்றி செல்ல வயலூர் ரோடு பாலம் மற்றும் சோழகன்பாறை பகுதியில் உள்ள நடைபாலத்தில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரையை மாநகராட்சி பணியாளர் கொண்டு அகற்றப்படுகிறது.

இப்பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பின், 60வது வார்டு தியாகராஜநகர் இளங்கோ தெரு அருகே வாய்க்காலின் கரை பலவீனமாக உள்ள இடத்தில் மணல் மூட்டை அடுக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். கூடுதலாக 200 மணல் மூட்டைகள் கொண்டு கரையை தற்காலிகமாக பலப்படுத்துமாறு ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட பொறியாளரிடம் தெரிவித்தனர்..யு.டி.,காலனி, குடமுருட்டி ஆறு, வயலூர் ரோடு, அம்மையப்ப நகர், புத்தூர் கலிங்கி ஆறுகண் ஆகிய இடங்களில் மழைநீர் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டனர். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள், சாலையோரங்கள், தெருக்கள் ஆகிய இடங்களில் தேங்கி கிடக்கும் குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றை அகற்றும்படி தெரிவித்தனர்.

 

செப்டிக் டேங்க் கழிவு அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்                30.11.2010

செப்டிக் டேங்க் கழிவு அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

நாகை, நவ. 30: நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூர் மற்றும் நாகை பகுதிகளில் கட்டிட உரிமையாளர்கள் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் நாகூர் மற்றும் நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை கட்டிடங்கள், திரையரங்குகள், வீடுகள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், திரு மண மண்டபங்கள் ஆகியவற்றில் உள்ள செப்டிக் டேங்குகளில் கழிவுநீர் நிரம்பி விட்டால் அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படு த்துவது தடை செய்யப்பட்டு உள்ளது.

முறையாக நகராட்சிக்கு விண்ணப்பித்து உரிய கட்ட ணம் செலுத்தி நகரா ட்சி கழிவுநீர் மோட்டார் வாக னம் மூலமாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். யாரே னும் கழீவுநீர் தொட்டிகளு க்குள் மனிதர்களை இறக்கி கழிவுநீரை அகற்று வது கண்டறியப்பட்டால் கட் டிட உரிமையாளர் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மனிதர்களை கொண்டு கழிவுநீரை அகற்றுவதை யாராவது பார்த்தால், உடனடியாக நகராட்சிக்கு 04365 248061 என்ற தொ லைபேசி எண்ணை தொட ர்பு கொண்டு தெரிவிக்கலாம். இத்தகவலை நாகை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

 

புகார்களுக்கு அதிகாரிகள் செவிசாய்ப்பதில்லை மேயரிடம் வாக்கி டாக்கியை மண்டல தலைவர் ஒப்படைத்தார்

Print PDF

தினகரன்            30.11.2010

புகார்களுக்கு அதிகாரிகள் செவிசாய்ப்பதில்லை மேயரிடம் வாக்கி டாக்கியை மண்டல தலைவர் ஒப்படைத்தார்

நெல்லை, நவ. 30: அதிகாரிகள் புகார்களுக்கு செவிசாய்க்க மறுப்பதாக கூறி தனக்கு வழங்கிய வாக்கி டாக்கியை நெல்லை மாநகராட்சிக் கூட்டத்தில் மண் டல தலைவர் விஸ்வநாதபாண்டியன் மேயரிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் ஏ.எல். சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையாளர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். அதன் விவரம்:

கவுன்சிலர் தியாகராஜன்: மாநகரப் பகுதிகளில் உள்ள சாலைகளும், பொது கழிப்பிடங்களும் மிகவும் மோசமான நிலை யில் உள்ளன. நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேயர்: பொது கழிப்பிடங்களை சீரமைக்க குழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சாலைகள் சரி செய்யப்படும்.

டி.எஸ். முருகன்: புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க கூடாது என மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். புதிய இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். காலி மனை தீர்வை ஆறரை வருடங்களுக்கு கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. புதிதாக நிலம் வாங்கியவர் கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை நீக்க வேண் டும்.

மேயர்: இதுகுறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

மண்டல தலைவர் விஸ்வநாதபாண்டியன்: மாநகராட்சிக்கு சொந்த மான இடங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர். அத னை உடனடியாக மீட்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை பேசுவதற்காக மண்டல தலைவர்கள் மற் றும் அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டது. அதே போல் கவுன்சிலர்கள் உட்பட அனைவருக்கும் சிம்கார்டுகளும் வழங்கப்பட்டன. ஆனால் இவற்றின் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் பேசுவதில்லை. எந்த அதிகாரியும் பேச்சை கேட்பதில்லை. இதை வைத்துக்கொண்டு என்ன செய் வது? இது பயனில்லாத கருவி. எனவே இந்த வாக்கி டாக்கியை ஒப்படைக்கி றேன். (அதை மேயரிடம் ஒப்படைத்தார்).

சுப. சீதாராமன்: இது தெரிந்துதான் 6 மாதங்களுக்கு முன்பே இவற்றை (சிம்கார்டு, வாக்கி டாக்கி) பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன்.

மேயர்: மண்டல தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு அதிகாரிகள் உரிய மரி யாதை அளிக்க வேண்டும். அவர்கள் அழைத்தால் உட னே பேச வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுதாபரமசிவம்: ஜூனி யர் இன்ஜினியர், எக்சிகியூடிவ் இன்ஜினியர் ஆகியோர்களை குறிப்பிட்ட இடைவெளியில் மாநகராட்சி விட்டு மாநகராட்சிக்கு இடம் மாற்ற வேண் டும். அப்போது தான் பணி கள் செம்மையாக நடக் கும்.

மேயர்: இதுகுறித்து முதல்வர் நடத்திய கூட்டத் தில் தெரிவித்துள்ளேன். அடுத்து திமுக ஆட்சி தான் வரும். இதே மாமன்றம் தான் அமையும். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொப்பரை சுப்பிரமணி யம்: எனது வார்டுக்கு குடி நீர் சரிவர வருவதில்லை. பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

மேயர்: தண்ணீர் பிரச் னை தீர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் மண்டல தலைவர் விஸ்வநாதபாண்டியன் பேசினார். அடுத்தபடம்: மேயர் ஏ.எல். சுப்பிரமணியன் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நாய் தொல்லையை தீர்க்க வழக்கு

பாளை மண்டல தலைவர் சுப.சீதாராமன்: மாநகரப் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடிக்க ப்ளூ கிராஸ் அமைப்பு தடை விதிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் இதற்கேற்ப சட்டம் போடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாவதில்லை. நீங்களே சுப்ரீம் கோர்ட் வக்கீல் தானே? இதை எதிர்த்து வழக்கு போடக் கூடாதா? நான் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளேன். நீங்கள் நாய்த் தொல்லையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?

மேயர்: உங்கள் கடிகளில் இருந்து தப்பிப்பதே பெரிய காரியமாக உள்ளது. முதற்கட்டமாக நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்ததாக வழக்கு போடுவது பற்றி பரிசீலிக்கப்படும்.

 


Page 311 of 506