Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நெல்லை மாநகராட்சிக்கு குத்தகை செலுத்தாத கடைக்கு சீல்

Print PDF

தினகரன்               26.11.2010

நெல்லை மாநகராட்சிக்கு குத்தகை செலுத்தாத கடைக்கு சீல்

நெல்லை, நவ. 26: நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்திற்கு உட்பட்ட மாநகராட்சி கடைகளில் நிலுவை குத்தகை தொகைகளை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த சில வருடங்களாக குத்தகை தொகை செலுத் தாதை மகாராஜநகர் கால னியில் உள்ள ஒரு கடையை பாளை மண்டல உதவி ஆணையர் பாஸ்கர் அறிவுரையின்படி உதவி வருவாய் அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் கருணாகரன், அனந்தகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் அடங்கிய குழு வினர், அப்பகுதி விஏஒ மற் றும் தலையாரி முன்னிலை யில் கடையை பூட்டி சீல் வைத்து கையகப்படுத்தினர்.

குத்தகை நிபந்தனைகளின்படி நடப்பு மாதம் வரை குத்தகை தொகை செலுத்தாத கடைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாநகராட்சியால் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவ லை பாளை மண்டல உதவி ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

பூமார்க்கெட் ஏலம் ஒத்திவைப்பு

Print PDF

தினகரன்              26.11.2010

பூமார்க்கெட் ஏலம் ஒத்திவைப்பு

கோவை, நவ. 26: பூமார்க்கெட் ஏலம் விடுவது 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கோவை மேட்டுப்பாளை யம் ரோட்டில் நவீன வசதிக ளுடன் புதிதாக பூ மார்க்கெட் கட்டப்பட்டது. ஆனால், புதிய மார்க்கெட் கடைக ளுக்கு செல்ல பூ வியாபாரி கள் மறுத்து விட்டனர். கடை கள் ஒதுக்கீடு சரியாக இருக் காது. முன்னால் உள்ள கடை களுக்கு அதிக வியாபாரம் நடக்கும்.

பழைய கடைகள் இருக் கும் இடமே சரியாக இருக்கும் என வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர். பின்னர், அதிகாரிகள் பல முறை நடத்திய பேச்சு வார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டது. இருப்பி னும் கடைகளை மொத்தமாக ஒப்பந்த முறையில் விட்டால் பிரச்னை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

புதிய பூ மார்க்கெட்டில் 45 கடைகள் இருக்கிறது. கடை வாரியாக தனித்தனியாக நேற்று மின் ஏலம் நடத்தி ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் மின் ஏலத்தை திடீரென ஒத்தி வைத்தது. மாநகராட்சி உதவி கமிஷனர் ஜெயச்சந்திரன் கூறுகையில், " நிர்வாக வசதிக்காக டிசம்பர் 1ம் தேதி கடை ஏலம் விடப்படும் என அறிவித்திருக்கி றோம். இந்த தகவல் அறிவிப்பு பலகை செய்தி மூலமாக வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது," என்றார்.

 

புத்தூர் ஆறுகண் பாலம்: மேயர், ஆணையர் ஆய்வு

Print PDF

தினமணி            25.11.2010

புத்தூர் ஆறுகண் பாலம்: மேயர், ஆணையர் ஆய்வு

திருச்சி, நவ. 24: தொடர்ந்து பெய்துவரும் மழையை அடுத்து, புத்தூர் ஆறுகண் பாலப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைப் பணிகளை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

புறநகர்ப் பகுதிகளில் இருந்து கோரையாறு, அரியாறு மற்றும் உய்யகொண்டான் வாய்க்கால் வழியாக மழைநீர் புத்தூர் ஆறுகண்ணை வந்தடைந்து பிறகு குடமுருட்டி, உய்யகொண்டான் வழியாக காவிரியில் கலக்கிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழை நீரின் அளவு உயர்ந்துள்ளது. இதை மேயர் மற்றும் ஆணையர் நேரில் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் ஆர். சந்திரன், உதவி ஆணையர் வி. நடராஜன், உதவிச் செயற்பொறியாளர் எஸ். நாகேஷ், இளநிலைப் பொறியாளர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 314 of 506