Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பாதாள சாக்கடை விவகாரம் நகராட்சி நிர்வாக செயலாளர் 6ம் தேதி ஆஜராக வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

Print PDF

தினகரன்              25.11.2010

பாதாள சாக்கடை விவகாரம் நகராட்சி நிர்வாக செயலாளர் 6ம் தேதி ஆஜராக வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ.25: பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் விவகாரம் தொடர்பாக, வரும் 6ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருகம்பாக்கத்தை சேர்ந்த ஏ.நாராயணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் பாதாள சாக்கடை உள்ளது. இதில் சேரும் கழிவுகளை அள்ளவும், அடைப்பை நீக்கவும் மனிதர்கள் இறங்கக் கூடாது என்று 2008ம் ஆண்டில் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

மேலும், பாதாள சாக்கடையில் இறங்கும் மனிதர்களுக்கு, கவசம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை உள்ளாட்சி துறை பின்பற்றவில்லை. சென்னை குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியமும் பின்பற்றுவது இல்லை.

நீதிமன்ற உத்தரவை மீறி சென்னை, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்கின்றனர். அவ்வாறு இறங்கியவர்களில் இந்த ஆண்டு இதுவரை 15 பேர் உயிர் இழந்துள்ளனர். எனவே, நீதிமன்ற உத்தரவை மீறிய அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். இதுகுறித்து ஆராய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் கமிட்டி அமைக்க வேண்டும்.

இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர், "தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர், டிசம்பர் 6ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்" என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Last Updated on Thursday, 25 November 2010 05:35
 

வெங்காய மார்க்கெட்டையும் மாற்றவேண்டும்

Print PDF

தினமணி             24.11.2010

வெங்காய  மார்க்கெட்டையும் மாற்றவேண்டும்

மதுரை, நவ.23: மதுரை கீழமாரட் வீதியில் செயல்பட்டுவரும் வெங்காய மார்க்கெட்டையும் நகருக்கு வெளியே மாற்ற வேண்டும் என, மாநகராட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ஐ. சிலுவை வலியுறுத்தினார்.

திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மழைக் காலத்தில் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான "பேட்ஜ் வொர்க்'கை மாநகராட்சி விரைவில் மேற்கொள்ள வேண்டும். நகரில் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. தற்போது மழைக் காலமாகவும் உள்ளது. எனவே, கொசுவை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சென்ட்ரல் மார்க்கெட் மாட்டுத்தாவணி பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டதால் நகரில் போக்குவரத்து ஓரளவு சீராக உள்ளது. அதேபோல் கீழமாரட் வீதியில் நெரிசலை ஏற்படுத்தும் வெங்காய மார்க்கெட்டையும் நகரின் வெளிப்பகுதிக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, மேயர் கோ. தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், துணைமேயர் மன்னன் ஆகியோர் தெரிவித்தனர்.

கவுன்சிலர் சிலுவை மேலும் பேசுகையில், மாநகராட்சி விரிவாக்கத்துக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்பின் மாநகராட்சியில் எத்தனை வார்டுகள், மண்டலங்கள் ஏற்படுத்தத் திட்டம் உள்ளது எனக் கேட்டார்.

கமிஷனர் பதில் அளிக்கையில், இதுதொடர்பாக தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். மக்கள் தொகைக்கு ஏற்ப எத்தனை வார்டுகள், மண்டலங்கள் என சர்வே எடுக்கப்பட்ட பின்னர்தான், இதுகுறித்து தெளிவாகத் தெரிவிக்க முடியும் என்றார்.

மண்டலத் தலைவர் இசக்கிமுத்து: நகருக்குள் அதிகளவு பன்றிகள் திரிகின்றன. இவற்றை ஒழிக்க அதன் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை செய்து பன்றிகளை வெளியேற்ற வேண்டும் என்றார்.

மண்டலத் தலைவர் குருசாமி: கிழக்கு மண்டலப் பகுதியில் 8 மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் போதிய ஊழியர்கள் இல்லை. பாதுகாவலர் இல்லை. இதனால் இரவு நேரத்தில் பள்ளிக்கூடங்களில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. இப்பகுதியில் உள்ள நூலகத்தில் நூலகர் நியமிக்கப்படவேண்டும்.

கீரைத்துறை, காமராஜர்புரம் போன்ற பகுதிகளில் பன்றிகள் தொல்லை உள்ளன. இவற்றைப் பிடித்து காட்டுப் பகுதியில்விட மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

Last Updated on Wednesday, 24 November 2010 11:31
 

காலிமனை தீர்வை ரூ.1.25 லட்சம் கட்ட சொல்வதா : தவறு செய்ய மக்களை தூண்டுவது மாநகராட்சி

Print PDF

தினமலர்           24.11.2010

காலிமனை தீர்வை ரூ.1.25 லட்சம் கட்ட சொல்வதா : தவறு செய்ய மக்களை தூண்டுவது மாநகராட்சி

திருநெல்வேலி : புதிதாக கட்டும் வீடுகளுக்கு காலிமனை தீர்வை 13 அரையாண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை கட்ட வற்புறுத்துவதால் மாநகராட்சி அனுமதியில்லாமல் வீடு கட்டி விட்டு ரூ.5 ஆயிரத்தை அபராதமாக செலுத்திவிடுகின்றனர் என பாளை., மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். பாளை., மண்டல மாநகராட்சி ஆலோசனை கூட்டம் மண்டல தலைவர் சுப.சீத்தாராமன் தலைமையில் நடந்தது. உதவிக்கமிஷனர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு: ரேவதிஅசோக்: தயாபரன் தெருவில் ஓடை கட்டுவதற்கு எஸ்டிமேட் போட்டு 4 ஆண்டுகள் ஆச்சு. பணிகள் நடைபெறவில்லை. ரோடுகளும் மோசமான நிலையில் உள்ளது.

 


Page 316 of 506