Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பொது இடத்தில் புகைப்பிடித்தால் அபராதம்

Print PDF

தினகரன்           24.11.2010

பொது இடத்தில் புகைப்பிடித்தால் அபராதம்

வால்பாறை, நவ.24: வால்பாறை நகராட்சி செயல் அலுவலர் ராஜ்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:வால்பாறை நகரில் பொது இடங்கள் மற்றும் டீ கடைகளில் சிகரெட் மற்றும் பீடி குடித்தால் அபராதம் விதிக்கப்படும். மேலும் நகரில் சுற்றிதிரியும் மாடுகளுக்கு ரூ.250 அபராதமும், தடைவிதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வாங்கி செல்வோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். இதற்கான கண்காணிப்பில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

பிளாஸ்டிக் பை விநியோகித்த கடைக்காரர்களுக்கு அபராதம் தேனி நகராட்சி அதிரடி

Print PDF

தினகரன்            24.11.2010

பிளாஸ்டிக் பை விநியோகித்த கடைக்காரர்களுக்கு அபராதம் தேனி நகராட்சி அதிரடி

தேனி, நவ.24: தேனி நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்த கடை வியாபாரிகள் 90 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் டீ கப் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால் சில கடைக்காரர்கள் மறைமுகமாக பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, கடந்த இரு நாளாக தேனி அல்லிநகரம் நகராட்சி உணவு ஆய்வாளர்கள் அறிவுச் செல்வம், முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சுருளிநாதன் உள்ளிட்டோர் தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள டீக்கடை, பேக்கரி, ஹோட்டல்கள், காய்கறிக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். பல கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு அப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சிறு கடைகளுக்கு ரூ.100ம், நடுத்தர கடைகளுக்கு ரூ.200ம், மொத்த வியாபாரக் கடைகளுக்கு ரூ.500மாக மொத்தம் 90 பேருக்கு ரூ.9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த சோதனை தொடரும். இதில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்என்றனர்.

 

ஏழைகள் வீடு ஒதுக்கீடு கொள்கை ஆராய உயர்நிலை குழு அமைப்பு

Print PDF

தினகரன்              24.11.2010

ஏழைகள் வீடு ஒதுக்கீடு கொள்கை ஆராய உயர்நிலை குழு அமைப்பு

புதுடெல்லி,நவ.24: ஏழைகளுக்காக கட்டப்பட்டுள்ள சுமார் 9,000 வீடுகளை குடிசைவாசிகளுக்கு ஒதுக்குவது தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்காக 3 அமைச்சர்கள் கொண்ட உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு டெல்லியின் லட்சுமி நகரில் உள்ள 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70 பேர் பலியாயினர். இதில் இருந்தவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள். இதன் மூலம், கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் குடியிருக்க இடம் இன்றி படும் கஷ்டங்கள் அம்பலத்துக்கு வந்தன.

நரேலா, துவாரகா, போர்கர், பாவனா ஆகிய பகுதிகளில் மாநில அரசின் சார்பில் சுமார் 9,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. குறைந்த விலையில் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகளை ஒதுக்கும் பணியை விரைவுபடுத்துவது தொடர்பாக முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஏழைகள் வீடு ஒதுக்கீடு கொள்கை வகுப்பதற்காக உயர்நிலை குழுவை அமைப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, நிதியமைச்சர் ஏ.கே.வாலியா, பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜ்குமார் சவுகான், சமூக நலத்துறை அமைச்சர் மங்கத்ராம் சிங்கால் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா தயாரித்துள்ள வரைவு கொள்கையை ஆராய்ந்து இக்குழுவினர் இறுதி செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மங்கத்ராம் சிங்கால் கூறுகையில், ‘’இப்போது சுமார் 9,000 வீடுகள் தயார் நிலையில் உள்ளன. இது தவிர இன்னும் 6 மாத காலத்துக்குள் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மூலம் மேலும் 7,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிடும். இதன் மூலம் ஏழைகளுக்கான மொத்த வீடுகளின் எண்ணிக்கை 15,000 ஆக உயரும்" என்றார்.

 

 


Page 318 of 506