Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பஹர்கஞ்சில் கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற விடுதிகளுக்கு நோட்டீஸ் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

Print PDF

தினகரன்           24.11.2010

பஹர்கஞ்சில் கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற விடுதிகளுக்கு நோட்டீஸ் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

புதுடெல்லி, நவ. 24: டெல்லியில் சுற்றுலா தலங்களில் ஒன்றான பஹர்கஞ்சில் அனுமதி பெறாமல் ஏராளமான விருந்தினர்கள் விடுதிகள் முளைத்துள்ளன. இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பஹர்கஞ்சில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. டெல்லிக்கு வருபவர்கள் பஹர்கஞ்ச் பகுதிக்குதான் அதிகளவில் செல்வார்கள். இதனால் அனுமதி பெறாமல் இங்கு ஏகப்பட்ட விருந்தினர்கள் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு மட்டும் சுமார் 400 விருந்தினர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 150 விடுதிகள் மாநகராட்சி லைசென்ஸ் பெறாமல் இயங்கி வருபவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகளிடம் இஷ்டத்துக்கு இவர்கள் வாடகை வசூலிப்பது, அடாவடி செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இதை கருத்தில் கொண்டு இந்த விருந்தினர் விடுதிகளுக்கு கடிவாளம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி, பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட விருந்தினர் இல்லங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. அதில், உடனடியாக விருந்தினர்களை இல்லங்களை மாநகராட்சியில் பதிவு செய்து கொள்ளவில்லை என்றால், அவை பூட்டி சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து சதர் பஹர்கஞ்ச் மண்டல துணை கமிஷனர் ரேணு ஜெகதேவ் கூறுகையில், "விருந்தினர் இல்லங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். சதர் பஹர்கஞ்ச் மண்டல கட்டிடத்துறை இன்ஜினியர் சார்பில் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. உடனடியாக அவர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு பதில் மனு அனுப்ப வேண்டும். அவ ர்களின் பதில் மனுவுக்காக காத்திருக்கிறோம். அதன்பின் நடவடிக்கையில் இறங்குவோம்" என்றார்.

ஆனால், அனுமதி பெறாமல் இயங்கி வரும் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் இடம்பெற்றுள்ள ஓட்டல் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "நாங்கள் டெல்லி மாஸ்டர் பிளான் & 2021ல் குறிப்பிட்டுள்ள சிறப்பு பகுதியில் உள்ளோம். இதனால் டெல்லி மாநகராட்சியிடம் நாங்கள் பதிவு செய்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. மாஸ்டர் பிளானுக்கு அனுமதி அளிக்கும் வகையில் இப்போதுள்ள நிலை அப்படியே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது" என்றார்.

 

விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் பட்டியல் ஒரு வாரத்தில் தாக்கல்: சி.எம்.டி.ஏ.வுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Print PDF

மாலை மலர்          23.11.2010

விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் பட்டியல் ஒரு வாரத்தில் தாக்கல்: சி.எம்.டி..வுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் பட்டியல் ஒரு வாரத்தில் தாக்கல்: 
 
 சி.எம்.டி.ஏ.வுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, நவ.23- சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவர் சென்னை மாநகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் விவரங்களை தாக்கல் செய்யும்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு (சி.எம்.டி. .வுக்கும்), மாநகராட்சிக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டியல் தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் ஒருவாரம் காலஅவகாசம் கொடுத்தனர்.

அத்துடன் விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளின் பெயர் பட்டியலையும் சேர்த்து தாக்கல் செய்யும்படி சி.எம். டி..வுக்கு உத்தரவிட்டனர்.

 

பாதாள சாக்கடைபணி: கலெக்டர் ஆய்வு

Print PDF

தினமலர்              23.11.2010

பாதாள சாக்கடைபணி: கலெக்டர் ஆய்வு

தர்மபுரி: தர்மபுரியில் நடந்த வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.தர்மபுரி நகராட்சி பகுதியில் 24 கோடியே 55 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. நெசவாளர் காலனி, குமாரசாமிபேட்டை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் பணிகளை கலெக்டர் ஆனந்தகுமார் ஆய்வு செய்து, பணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.நகராட்சி முதன்மை பொறியாளர் ஜெகதீஸ்வரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் காமராஜ், ராஜ்மோகன் ஆகியோர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.* ரேஷன் கடைகளில் ஆய்வு: தர்மபுரி குமாரசாமி பேட்டை ரேஷன் கடை எண் 4ல் கலெக்டர் ஆனந்தகுமார் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, "பொருட்கள் வாங்கிய நுகர்வோர்களிடம் மாதந்தோறும் பொருட்கள் வழங்கும் முறை குறித்தும், மலிவு விலை பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறதா?' என கேட்டறிந்தார். ஆய்வின் போது தாசில்தார் மணி உடன் இருந்தார்.

 


Page 319 of 506