Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் நகராட்சி தலைவர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்                    23.11.2010

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் நகராட்சி தலைவர் எச்சரிக்கை

பெரம்பலூர், நவ. 23: பெரம்பலூர் நகராட்சியில் தீவிர வரிவசூல் முகாம் மற்றும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் டிசம்பர் 21ம் தேதி வரை அனைத்து வார்டுகளிலும் நடக்கிறது.

வரி மற்றும் வரியில்லாயினங்கள் வசூல் மற்றும் மக்களின் குறைகளை நிவர் த்தி செய்யும் நேர்காணல் சிறப்பு முகாம் 4வது, 6வது வார்டுக்கு உழவர்சந்தை அருகே நேற்று நடந்தது. முகாமை கலெக்டர் விஜயக்குமார் துவக்கி வைத் தார். ஆணையர் சுரேந்திர ஷா, துணைத்தலைவர் முகுந்தன் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் இளையராஜா தெரிவித்ததாவது: 21 வார்டுகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தீவிரமாக வரிவசூல் நடைபெறவுள்ளன. சொத்து வரி, குடிநீர்வரி உள்ளிட்ட பல்வேறு வரி வாயிலாக பெரம்பலூர் நகராட்சிக்கு ரூ2 கோடிக்கு மேல் வரவேண்டியுள்ளது. குடிநீர் மட்டுமே ரூ45 லட்சம் வசூலாக வேண்டியுள்ளது. இந்த தொகைகளை வசூலிப்பதற்காகவே சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வரி செலுத்தாத பயனாளிகள் குடிநீர் இணைப்பு பாரபட்சமின்றி துண்டிக்கப்படும்.

8வது வார்டுக்கு ஆதிபராசக்தி கோயில் பகுதியில் 24ம் தேதி, 11வது வார்டுக்கு கிறிஸ்டியன் நர்சிங் கல்லூரி பகுதியில் 25ம் தேதி, 1வது வார்டுக்கு மதனகோபால சாமி கல்யாண மண்டபத் தில் 26ம் தேதி, 16வது வார் டுக்கு பாத்திமா பள்ளி அரு கே பனிமாதா கோயிலில் 29ம்தேதி சிறப்பு முகாம் நடக்கிறது என்றார்.

 

25ம் தேதி கையெழுத்தாகிறது கோலாலம்பூர் மேயருடன் சென்னை மேயர் ஒப்பந்தம்

Print PDF

தினகரன்                23.11.2010

25ம் தேதி கையெழுத்தாகிறது கோலாலம்பூர் மேயருடன் சென்னை மேயர் ஒப்பந்தம்

சென்னை, நவ. 23: மலேசிய தலைநகரான கோலாலம்பூர், சென்னை மாநகர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் துணை முதல்வர் மு..ஸ்டாலின் முன்னிலையில் அந்நாட்டு அமைச்சர்களுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. அப்போது தமிழர்களின் பணி பாதுகாப்பு, கலாசாரம், கல்வி போன்றவற்றில் சென்னை மாநகரும், கோலாலம்பூர் மாநகரமும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வரும் 25ம் தேதி அங்கு நடக்கும் கூட்டத்தில் மேயர் மா.சுப்பிரமணியனும் கோலாலம்பூர் மேயரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர். இதற்காக அவரும், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி ஆகியோர் அங்கு செல்கிறார்கள்.

 

விக்ரோலி லெவல் கிராசிங்கில் உடனடியாக நடைமேம்பாலம் கட்ட அரசு உத்தரவு

Print PDF

தினகரன்              23.11.2010

விக்ரோலி லெவல் கிராசிங்கில் உடனடியாக நடைமேம்பாலம் கட்ட அரசு உத்தரவு

மும்பை, நவ. 23: விக்ரோலி ரயில்வே லெவல் கிராசிங்கில் உடனடியாக நடைமேம்பாலம் கட்டுமாறு ரயில்வே மற்றும் மாநகராட்சிக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

விக்ரோலி லெவல் கிராசிங்கில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து நடந்த மூன்று விபத்துகளில் 3 பேர் புறநகர் ரயிலில் அடிபட்டு இறந்தனர். இந்த விபத்துகளை தொடர்ந்து சுமார் 4 ஆயிரம் பயணிகள் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் 2 மணி நேரம் மத்திய ரயில்வேயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விக்ரோலி ரயில் நிலையத்தையொட்டி இருக்கும் லெவல் கிராசிங்கை பொதுமக்கள் கிழக்கில் இருந்து மேற்கு பகுதிக்கு செல்ல பயன்படுத்து கின்றனர்.

ஏற்கனவே இருக்கும் ரயில்வே நடைபாலத்தை பயணிகளை தவிர பொதுமக்கள் பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுக்க மறுத்துவந்ததால் பொதுமக்கள் லெவல் கிராசிங்கை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த லெவல் கிராசிங்கில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரு கிறது. இவ்விபத்துகளில் பலர் பலியான போதும், மேம்பாலம் கட்ட இதுவரை ரயில்வே நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆத்திரத்தில்தான் நேற்று முன்தினம் பயணிகள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், நேற்று மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சகன் புஜ்பால் மற்றும் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோர், ரயில்வே மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினர். அப் போது விக்ரோலி லெவல் கிராசிங்கில் உடனடியாக நடைமேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே மற்றும் மாநக ராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.

"விக்ரோலி லெவல் கிராசிங்கில் நடைமேம்பாலம் கட்டும் பணி ஜனவரி 15ம் தேதி துவங்கும். பாலம் கட்ட உடனடியாக அனுமதி அளிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று அமைச்சர்கள் சகன் புஜ்பால், ஆர்.ஆர்.பாட்டீல் கூறினர். இது குறித்து மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி முட்கரிகர் கூறுகையில், "விக்ரோலியில் லெவல் கிராசிங் இருக்கும் இடத்தில் புதிய நடைமேம்பாலம் ஒன்று பொதுமக்கள் தேவைக்காக உடனே கட்டப்படும். இதற்கு இரண்டு வாரத்தில் ரயில்வே ஒப்புதல் வழங்கும். அடுத்த வாரம் நடைமேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் கோரப்படும். கட்டுமானப்பணிகள் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும்" என்றார்.

புதிய பாலம் கட்டும் வரை தற்போது இருக்கும் ரயில்வே நடைமேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விக்ரோலி லெவல் கிராசிங் அருகில் ரயில்களின் வேகத்தை சற்று குறைக்கும் படி ரயில்வே பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இந்த லெவல் கிராசிங்கை கடந்து சென்று 325 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Page 320 of 506