Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை சொத்துவரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன்           08.01.2014

மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை சொத்துவரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

அனுப்பர்பாளையம், : திருப்பூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட          தொகைகளை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையை திருப்பூர்    மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலப்பகுதியில் கடந்த 2012-2013ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய ரூ.29 லட்சத்து 7ஆயிரத்து 624 வரி நிலுவையில் உள்ளது. நடப்பாண்டில் செலுத்த வேண்டிய ரூ.4 கோடியே 91 லட்சத்து 26ஆயிரத்து 562 வரி நிலுவையில் உள்ளது. மொத்தம் ரூ.5   கோடியே 70 லட்சத்து 34 ஆயிரத்து 126  வரி நிலுவையில் உள்ளது. சென்ற நிதியாண்டில் 72 சதவீதம் வசூலானது. நடப்பாண்டில் இது வரை 41.60 சதவீதம் மட்டும் வசூலாகியுள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக வரி வசூல் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தினர் பலமுறை குடிநீர் துண்டிப்பு அறிவிப்பு செய்திருந்தனர். இதையடுத்து, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் உத்தரவின்பேரில், முதலாவது மண்டல உதவி ஆணையாளர் முகமதுஷபியுல்லா முன்னிலையில், வருவாய் ஆய்வாளர் சக்திவேல், குழாய் ஆய்வாளர் மசாருதீன், வருவாய் உதவியாளர் பிரபாகரன், மாநகராட்சிப் பணியாளர்கள், சொத்துவரி, குடிநீர் கட்டணம், உள்ளிட்டக் கட்டணத் தொகைகளை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையில் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர்.

இதில், சாமுண்டிபுரம் முதலாவது வீதியை சேர்ந்த கனகராஜ், 11-ஆவது வார்டு பாரதி நகர் பிரேமலதா, ஈ.பி.காலனியைச் சேர்ந்த ரகு ஆகியோரது சொந்த கட்டிடத்தின் முன்புறம் இருந்த குடிநீர் இணைப்பை நேற்று அதிகாரிகள் துண்டிப்பு செய்தனர்.

மீண்டும் குடிநீர் இணைப்பை பெற, அபராதம் செலுத்த வேண்டும் என்பதால் பொதுமக்கள் உடனடியாக வரியினங்களின் பாக்கிகளை செலுத்த உடனடியாக முன்வர வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

 

புதிய மீன் மார்க்கெட்டில் 38 கடைகள் ஏலம்

Print PDF

தினமணி               07.01.2014

புதிய மீன் மார்க்கெட்டில் 38 கடைகள் ஏலம்

வேலூர் பெங்களூரு சாலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டில் உள்ள ஷட்டர் போடப்பட்ட 38 கடைகளுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் தற்போது ஆபிஸர்ஸ் லைனில் இயங்கும் மீன்மார்க்கெட்டில் உள்ள கடைக்காரர்கள் பங்கேற்று 38 கடைகளையும் ஏலத்தில் எடுத்தனர். இக்கடைகளில் குறைந்தபட்ச மாத வாடகை ரூ.5,200 முதல் அதிகபட்ச வாடகை ரூ.6,500 வரை ஏலம் போனது.

ஏலத்தை மாநகராட்சி வருவாய் அலுவலர் (பொறுப்பு) ஆர்.கே.கனகசுந்தரி, சந்தை கண்காணிப்பாளர் தனசேகரன் ஆகியோர் நடத்தினர்.

புதிய மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளை மீன் மார்க்கெட் வியாபாரிகளே எடுத்துள்ளதால், தற்போது இயங்கி வரும் மீன் மார்கெட்டை மூடப்படுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி எடுப்பதில் நீடித்து வந்த சிக்கல் நீங்கியுள்ளது.

 

ஆத்தூரில் இன்று எரிவாயு தகன மேடையை பராமரிக்க கலந்தாய்வு கூட்டம்

Print PDF

தினகரன்             06.01.2014

ஆத்தூரில் இன்று எரிவாயு தகன மேடையை பராமரிக்க கலந்தாய்வு கூட்டம்

ஆத்தூர்,: ஆத்தூரில் ரூ90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை பராமரிக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. நகராட்சி ஆணையளர்(பொ) ஜெகதீஸ்வரி விடுத்துள்ள அறிக்கை:

ஆத்தூர் நகராட்சியின் மூலம் வீரகனுர் சாலையில் பராமரிக்கப்பட்டு வரும் இடுகாட்டில் ரூ90 லட்சம் செலவில் புதியதாக நவீனப்படுத்தப்பட்ட எரிவாயு தகன மேடை கட்டப்பட்டுள்ளது. இந்த எரிவாயு தகன மேடையின் ஆண்டு பராமரிப்பு பணியை மேற்கொள்ள ஏதுவாக ஆத்தூரில் உள்ள சேவை சங்கங்களான அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், ரெட்கிராஸ் சங்கம், இன்னர்வீல் மற்றும் பொது நல அமைப்புகளான வணிகர் சங்கம், முத்தாயம்மாள் அறக்கட்டளை, ராசி சீட்ஸ் உள்ளிட்ட அமைப்புகளுடனான கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் சேவை சங்கத்தினரும், பொதுநல அமைப்பினரும் தவறாமல் கலந்து கெள்ள வேண்டும். இவ்வாறு நகராட்சி ஆணையாளர்(பொ) ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

 


Page 33 of 506