Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மழைநீர் தேங்குவது குறித்து ஆய்வு

Print PDF

தினமலர்          10.11.2010

மழைநீர் தேங்குவது குறித்து ஆய்வு

மதுரை : மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சிறுமழை பெய்தால்கூட குளம் போல் தேங்குவது வழக்கமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகனங்களும் பழுதாகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்வதால், இப்பகுதி தவிக்கிறது. இதுகுறித்து நேற்று மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், போக்குவரத்து துணை கமிஷனர் ராஜேந்திரன், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆர்.எம்.எஸ். ரோடு முதல் மேலவாசல் குடியிருப்பு வரை தண்ணீர் தேங்காமல் இருக்க, கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டனர்.

 

டிஜிட்டல் பேனர் விவகாரம் 23க்குள் அறிக்கை அளிக்க மாநகராட்சிக்கு உத்தரவு

Print PDF

தினகரன்                       10.09.2010

டிஜிட்டல் பேனர் விவகாரம் 23க்குள் அறிக்கை அளிக்க மாநகராட்சிக்கு உத்தரவு

சென்னை, நவ.10: டிஜிட்டல் பேனர் விவகாரம் தொடர்பாக, 23ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நடைபாதை மற்றும் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தால், அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாததால், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிராபிக் ராமசாமி தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் முருகேசன், வினோத்குமார் சர்மா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் பி.வில்சன், ‘‘டிஜிட்டல் பேனர்களை கட்டுப்படுத்த மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் திருத்த சட்டத்தை தாக்கல் செய்ய போதிய அவகாசம் இல்லை. திருத்த சட்டம் இன்னும் தயாரிக்கப்படவில்லை. எனவே, அடுத்த கூட்டத்தொடரில் இது தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "சென்னை நகரில் இதுவரை விதிமுறையை மீறி எத்தனை டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன? அவை அப்புறப்படுத்தப்பட்டதா? டிஜிட்டல் பேனர் வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்த அறிக்கையை, வரும் 23ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

 

மேயர் எச்சரிக்கை மெரினாவில் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தினால் ரூ100 அபராதம்

Print PDF

தினகரன்                 10.09.2010

மேயர் எச்சரிக்கை மெரினாவில் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தினால் ரூ100 அபராதம்

சென்னை, நவ.10: மெரினா கடற்கரை நவீன இயந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

மெரினா கடற்கரை ரூ26 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை பராமரிக்கவும், தூய்மைப்படுத்தவும் தினமும் 149 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஒருவர் இதை கண்காணித்து வருகிறார்.

இங்கு 3 நவீன கழிப்பறைகள், நீச்சல் குள அலுவலக கட்டிடம், உடை மாற்றும் அறை, சிமென்ட் கற்கள் பதிப்பு ஆகிய பணிகள் ரூ1.65 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்படும். 1500 இடங்களில் எலி வலைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். மீறி பயன்படுத்தினால் ரூ100 அபராதம் வசூலிக்கப்படும்.

 


Page 326 of 506