Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அமைச்சர் பயன்படுத்தி வரும் காருக்கு அபராதம் செலுத்திய மாநகராட்சி

Print PDF

தினமலர்                    08.11.2010

அமைச்சர் பயன்படுத்தி வரும் காருக்கு அபராதம் செலுத்திய மாநகராட்சி

சேலம் : அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பயன்படுத்தி வரும், மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான காரை முறைப்படி பதிவு செய்யாமல் இயக்கியதால், நேற்று காலதாமத அபராத கட்டணமாக, 68 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. மேலும், காருக்கான பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஆட்சியில், சேலம் மாநகர மேயராக அ.தி.மு..,வைச் சேர்ந்த சுரேஷ்குமார் இருந்தார். அப்போது, மேயருக்கு புதிய கார் வழங்குவதற்கான தீர்மானம் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு..,வைச் சேர்ந்த ரேகா பிரியதர்ஷினி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, 2007ல் புதிய இன்னோவா கார் சேலம் மாநகராட்சிக்கு வந்தது. மேயருக்காக வழங்கப்பட்ட கார், வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டது. அவர், சேலத்தில் அந்த காரைத் தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். மூன்று ஆண்டுகளாக, அந்த காரில் தான் தேசியக்கொடியை பறக்கவிட்டபடி, அமைச்சர் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான காரை அமைச்சர் பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமைச்சருக்கென கலெக்டர் அலுவலகத்தில் வி..பி., கார் உள்ளது. அதை விடுத்து, அமைச்சர் பயன்படுத்தும், மேயருக்காக ஒதுக்கப்பட்ட டி.என்.30 ஏஏ 9559 என்ற பதிவு எண்ணுடன் உள்ள கார், முறைப்படி பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இந்த கார் சேலம்(மேற்கு) ஆர்.டி.., அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் முன்தொகை செலுத்தி, நம்பரை மட்டுமே வாங்கி வைத்திருக்கிறது என தெரியவந்துள்ளது.இப்பிரச்னை குறித்து, .தி.மு.., பொதுச் செயலர் ஜெயலலிதாவும் குற்றம்சாட்டினார். அரசு தரப்பில் இதற்கு எந்த விளக்கமும் தரவில்லை.

இந்நிலையில், சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று, அமைச்சர் பயன்படுத்தி வரும் காரை முறைப்படி பதிவு செய்தனர். சேலம் மேற்கு ஆர்.டி.., அலுவலகத்தில் அதற்கு பதிவு மற்றும் அபராத கட்டணமாக ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 788 ரூபாய் செலுத்தியுள்ளனர். அதில், காலதாமதமாக பதிவு செய்வதற்கான அபதார கட்டணம் மட்டும் 68 ஆயிரம் ரூபாய். இத்தொகை, "செக்'காக மாநகராட்சி நிதியிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது.

 

அய்யனார் குளத்தை சீரமைக்க நகர்மன்றத் தலைவர் உத்தரவு

Print PDF

தினமணி               08.11.2010

அய்யனார் குளத்தை சீரமைக்க நகர்மன்றத் தலைவர் உத்தரவு

விழுப்புரம், நவ. 7: விழுப்புரம் நகரில் இருக்கும் அய்யனார் குளத்தை சீரமைக்க நகராட்சி அலுவலர்களுக்கு நகர்மன்றத் தலைவர் இரா.ஜனகராஜ் உத்தரவிட்டார்.

நகரில் உள்ள மிக முக்கியமான இந்த குளத்தில் புதர்கள் மண்டியும், குப்பைகள் கொட்டப்பட்டும் புதையுண்டு வரும் நிலையில் உள்ள இந்த குளத்தில் தண்ணீர் தேங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே அந்த குளத்தை நகர்மன்றத் தலைவர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். குளத்தில் உள்ள புதர்களை அகற்றினால்தான் தண்ணீர் தேங்கும் என்பதால் அவற்றை உடனே அகற்ற உத்தரவிட்டார். மழைக் காலத்திலேயே இந்த பணியைச் செய்தால்தான் தண்ணீர் நிரம்பும் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது நகராட்சி ஓவர்சீயர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

 

காரைக்குடி நகராட்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி                 08.11.2010

காரைக்குடி நகராட்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காரைக்குடி, நவ. 7: காரைக்குடி நகராட்சிப் பணிகள் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டு பணிகளைப் பார்வையிட்டார்.

காரைக்குடி நகராட்சியின் அலுவலக விரிவாக்கப் பணிகள், நகராட்சி அருகிலேயே நவீனப் பூங்கா அமைக்கப்பட்டுவருவது, நூறடிச்சாலையில் போக்குவரத்து

குறைபாடுகள் குறித்தும் ஆட்சியர் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.

ஆட்சியருடன் நகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன், நகராட்சிப் பொறியாளர் எஸ். மணி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

ஆட்சியர் வருகை குறித்து நகர்மன்றத் தலைவர் எஸ். முத்துத்துரைக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அவர் ஆட்சியர் வருகை குறித்து தெரிவித்திருந்தால் நகரில் பல்வேறு பகுதிகளை குறிப்பாக மயானம் போன்ற சுகாதாரமின்றி இருக்கும் பகுதிகளை அவரிடம் காட்டியிருக்கலாம் என்று நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பின்னர் நவீனப் பூங்காவை ஆட்சியர் பார்க்க வரும்போதாவது எனக்குத் தகவல் சொல்லுங்கள் நான் அலுவலகத்தில் காத்திருக்கிறேன் என்று கூறினார்.

இதையடுத்து ஆட்சியர் பல்வேறு ஆய்வுகளை முடித்துக்கொண்டு நவீனப் பூங்காவுக்கு வந்தபோது நகராட்சி அதிகாரிகள் நகர்மன்றத் தலைவருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அவர் புதிததாக அமைக்கபட்டு வரும் பூங்காவை ஆட்சியர் பார்வையிட்டபோது நகர்மன்றத்தலைவர் முத்துத்துரையும் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து நகராட்சிக் கட்டடத்தையும் ஆட்சியர் பார்வையிட்டார். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

 


Page 328 of 506