Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ரூ3,000 லஞ்சம் வாங்கினார் மாநகராட்சி அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

Print PDF

தினகரன்                 08.11.2010

ரூ3,000 லஞ்சம் வாங்கினார் மாநகராட்சி அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

புதுடெல்லி,நவ.8: பணியை நிரந்தரமாக்க ரூ3,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிக்கு சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

டெல்லியைச் சேர்ந்தவர் ஜெய்பால். மாநகராட்சி சுகாதார துறையில் துப்புரவு பணியாளராக அவரது மனைவி வேலை பார்த்து வந்தார். அவரது பணியை நிரந்தரம் ஆக்குவதற்காக உயர் அதிகாரிகளை சந்தித்து ஜெய்பால் கோரிக்கை விடுத்தார்.

பணியை நிரந்தரம் செய்ய வேண்டுமானால் 5,000 ரூபாய் தரவேண்டும் என்று சுகாதாரத்துறையின் உயர் அதிகாரியான குப்தா கேட்டார். இதுபற்றி சிபிஐயிடம் ஜெய்பால் புகார் செய்தார்.

அவர்களின் ஆலோசனையின்படி திரிலோக்புரியில் உள்ள குப்தாவின் அலுவலகத்துக்கு ஜெய்பால் சென்றார். சிபிஐ போலீசார் கொடுத்தனுப்பிய 3,000 ரூபாயை குப்தாவிடம் கொடுத்தார்.அதை அவர் பிரிஜ்பால் என்பவரிடம் கொடுக்கச் சொன்னார். அதன்படி ஜெய்பால் கொடுத்ததும் அதை வாங்கிய பிரிஜ்பால் உடனடியாக அந்தப் பணத்தை குப்தாவிடம் கொண்டு சென்று கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த சிபிஐ போலீசார் விரைந்து சென்று பிரிஜ் பாலையும் குப்தாவையும் கைது செய்தனர். குப்தாவிடம் இருந்த லஞ்சப்பணத்தையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இதுபற்றி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.கே. மகேஸ்வரி விசாரித்து குப்தாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ15,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ்பால் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, அவரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளி

 

ரோட்டில் சுற்றித்திரியும் கால்நடைகளை அடைக்க நிரந்தர தொண்டுப்பட்டி

Print PDF

தினகரன்               08.11.2010

ரோட்டில் சுற்றித்திரியும் கால்நடைகளை அடைக்க நிரந்தர தொண்டுப்பட்டி

குன்னூர்,நவ.8: குன்னூர் பஸ் நிலையம், கேஸ் பஜார், டி.டி.கே.ரோடு, மவுண்ட் ரோடு, பெட்போர்டு, சிம்ஸ்பார்க் உள்ளிட்ட பகுதிகளில் ஆடு மற்றும் மாடுகள் சாலைகளில் நடமாடி வருவதால் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. ஏற்கனவே வாகனங்களை நிறுத்த இடமின்றி சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இந்த வளர்ப்பு கால் நடைகளால் மேலும் இடையூறுகள் ஏற்படுவதாக எழு ந்த புகாரின் பேரில் நகராட்சி சார்பில் உழவர் சந்தையை யொட்டி உள்ள பகுதியில் தொண்டுபட்டி தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தது. அந்த இட த்தில் நிரந்தர கட்டிடம் கட் டப்பட்டுவருகிறது. விரைவில் இப்பணியை நிறைவு செய்து சாலைகளில் நட மாடி வரும் கால்நடை களை பிடித்து இதில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

 

குடியேற்றம் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை திரும்ப தர வேண்டும்

Print PDF

தினகரன்                     04.11.2010

குடியேற்றம் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை திரும்ப தர வேண்டும்

மும்பை, நவ. 4: ஆதர்ஷ் சொசைட்டி ஊழலை தொடர்ந்து, மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையத்துக்கு(எம்.எம்.ஆர்.டி..) வழங்கப்பட்ட குடியேற்றம் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை திரும்ப பெற மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

எம்எம்ஆர்டிஏவுக்கு முதலில், ஒரு கட்டிடத்தின் கட்டுமான பணி தொடங்கு வதற்கு சான்றிதழ் வழங்கும் அதிகாரம் மட்டுமே இருந்தது. கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தில் குடும்பங்கள் குடியேற சான்றிதழ் வழங்கும் அதிகாரம் தரப்பட்டவில்லை.

இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு எம்எம்ஆர்டிஏ கமிஷனர் ரத்னாகர் கெய்க்வாட், அப்போதைய மாநகராட்சி கமிஷனர் ஜெய்ராஜ் பதகிற்கு, குடியேற்றம் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் எம்.எம்.ஆர்.டி.ஏவுக்கு தரப்பட வேண்டும் என கோரி ஒரு கடிதம் எழுதினார். இதையடுத்து அந்த அதிகாரத்தை எம்எம்ஆர்டிஏவுக்கு மாநகராட்சி வழங்கியது.

இத்தகைய சூழ்நிலையில் நேற்று முன்தினம் மாநகராட்சி பொதுக்குழு கூடியது. அப்போது ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் குறித்து விவாதிக்கப்பட்டது. அவைத்தலைவர் சுனில் பிரபு கூறுகையில், ‘’விதவைகள் மற்றும் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை, மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் அபகரித்துள்ளார். அந்த வீடுகளை அவர் தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளார்" என குற்றம்சாட்டினார்.

அவைத்தலைவரின் இந்த குற்றச்சாட்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. இறுதியில் அனைத்து கட்டிடங்களில் குடியேறியவர்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என முடிவு செய்த பொதுக்குழு, பிரச்னைக்கு காரணம், குடியேற்றம் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் எம்எம்ஆர்டிஏவுக்கு தரப்பட்டதுதான். எனவே அதை திரும்ப பெற வேண்டும் என யோசனை தெரிவித்தது.

இது குறித்து மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ராகுல் செஷாலே கூறுகையில், ‘’குடியேற்றம் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை, மாநகராட்சிக்கு எம்எம்ஆர்டிஏ திரும்ப தர வேண்டும். இதை பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 


Page 329 of 506