Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மின் தகன கூடத்தில் ஆய்வு

Print PDF

தினகரன்                     04.11.2010

மின் தகன கூடத்தில் ஆய்வு

போடி, நவ.4 போடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார தகன கூடத்தில், முதல் கட்ட சோதனை நிகழ்ச்சி நடந்தது. போடியில் நகராட்சி சார்பில் ரூ.42 லட்சம் செலவில் சுடுகாட்டில், மின் தகன மேடை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான இயந்திரங்கள் நிறுவப்பட்டு நேற்று முதற்கட்டமாக சோதனை நடத்தப்பட்டது. உடலை எரிக்க தேவையான 900 டிகிரி செல்சியஸ் வெப்பம் உள்ளதா என நகராட்சி ஆணையாளர் சரவணகுமார், பொறியாளர் குருசாமி ஆய்வு செய்தனர்.

மதுரை மண்டல அளவில் முதல் எரியூட்டும் நிலையமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த மின்சார தகன கூடம், மாசுகட்டுப்பாட்டு வாரிய சோதனைக்கு பின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

 

குடியிருப்பு பகுதிகளில் பன்றி வளர்த்தால் வழக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

Print PDF

தினகரன்               04.11.2010

குடியிருப்பு பகுதிகளில் பன்றி வளர்த்தால் வழக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

பொள்ளாச்சி, நவ 4: பொள் ளாச்சி நகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் பன்றி வளர்ப்போர் மீது சுகாதாரச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று நகராட்சி ஆணை யாளர் மற்றும் நகர்நல அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.

பொள்ளாச்சி நகரில் மரப்பேட்டை, பொட்டு மேடு, கண்ணப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலர் அதிகளவிலான பன்றிகளை வளர்த்து வருகின்றனர். பன்றிகள் இரவு நேரங்களில் மட்டுமே அடைத்து வைக்கப்படுகின்றன.

பகல் நேரங்கள் முழுவதிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அசுத்தத்தை ஏற்படுத்தி வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும் சுகாதாரக் கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவத் துவங்கியதால் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதனையடுத்து நகரில் பன்றி வளர்ப்போருக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் பன்றிகளை வளர்ப்போருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சில மாதங்கள் குடியிருப்பு பகுதிகளில் பன்றி வளர்ப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் நகரின் பல இடங்களில் குறிப்பாக குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் அதிகளவிலான பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று கவுன்சிலர்களும், பொதுமக்களும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.

ஆகவே நகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் பன்றி வளர்ப்போர் மீது வழக்கு தொடுக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அறிக்கை விடுத்துள்ளது.

நகராட்சி ஆணை யாளர் பூங்கொடி அருமைக்கண், நகர்நல அலுவலர் குணசேகரன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், நகராட்சிக்குட்பட்ட நல்லிகவுண்டர் லே அவுட், குமரன் நகர், கண்ணப்பன் நகர், மரப்பேட்டை, பொட்டு மேடு, கோட்டாம்பட்டி உள்ளிட்ட பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.குடியிருப்புகள் நிறைந்த எந்த ஒரு பகுதிகளிலும் பன்றிகள் வளர்க்கக் கூடாது என்று பலமுறை எச்சரிக்கப்பட்டுவிட்டது.

ஆனாலும் இதனை சிலர் கண்டுகொள்ளாமல் அதிகளவிலான பன்றி களை வளர்த்து வருகின்றனர்.

ஆகவே எந்தெந்த பகுதிகளில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன, அவற்றை வளர்ப்பவர்கள் யார் என்பது குறித்த விபரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வரு கிறது.

இனிமேலும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதத்தில் பன்றிகள் வளர்ப்பது கண்டு பிடிக்கப்பட்டால் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தப்படுவதுடன், பன்றி வளர்ப் போர் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்படும் என் றும் எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மாநகராட்சி அலுவலகத்தில் காலை நேரத்தில் அனுமதி மறுப்பு கமிஷனர் உத்தரவுக்கு கண்டனம்

Print PDF

தினகரன்                        04.11.2010

மாநகராட்சி அலுவலகத்தில் காலை நேரத்தில் அனுமதி மறுப்பு கமிஷனர் உத்தரவுக்கு கண்டனம்

பெங்களூர், நவ. 4: பெங்களூர் மாநகராட்சியின் தலைமையகத்தில் அதிகாரிகளையும், கவுன்சிலர்களையும் பார்த்து தங்களது குறைகளை தெரிவிக்க பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் சித்தய்யா கடந்த மாதம் 28ம்தேதி உத்தரவு வெளியிட்டுள்ளார். அதில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை அதிகாரிகளை தவிர பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் உள்பட யாரும் மாநகராட்சி அலுவலகத்திற்குள் வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாநகராட்சி எதிர்க்கட்சிகளான காங்கிரசும், மஜதவும் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மஜத தலைவர் பத்மநாபா நேற்று கூறுகையில் "போகிற போக்கை பார்த்தால் வேலியை அமைத்துக்கொண்டு அதற்குள் அமர்ந்து மாநகராட்சி தனது வேலையை பார்க்கும் போல உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களை தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து தங்களது குறைகளை தெரிவித்துச் செல்கின்றனர்.

பத்திரிக்கையாளர்களையும் மாநகராட்சி வளாகத்திற்குள் வரக்கூடாது என்றால் மாநகராட்சியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படுகிறது. மாநகராட்சியின் வரலாற்றிலேயே இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில்லை. இந்த உத்தரவை கமிஷனர் வாபஸ் பெறவேண்டும் என்றார்.

இதுகுறித்து சித்தய்யா நேற்று கூறியதாவது: காலை முதல் மக்களை சந்தித்துக் கொண்டிருந்தால் மாநகராட்சி பணிகளை பார்க்க முடியாமல¢ அதிகாரிகள் சிரமப்படுகின்றனர். எனவேதான் பிற்பகல் 3 மணி முதல் மாலைவரை மட்டும் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தேன்.

கவுன்சிலர்கள் பலரும் இக்கோரிக்கையை என்னிடம் வைத்திருந்தனர். அதையேற்றுதான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பத்திரிக்கையாளர்களை அலுவலகத்திற்குள் விடாமல் தடுக்க நான் உத்தரவு பிறப்பிக்கவில்லை. அவர்கள் எப்போதும் போல வந்து செல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 


Page 330 of 506