Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை: மேயர் விளக்கம்

Print PDF

தினமணி       13.11.2014

மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை: மேயர் விளக்கம்

மதுரை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் விதிமீறல் கட்டடங்களுக்கு அபராதம் மற்றும் வரிவிதிப்பில் மாற்றம் செய்வது குறித்து வரிவிதிப்புக் குழுவில் முடிவு செய்யலாம், என மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா விளக்கமளித்தார்.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், மண்டலத்தலைவர் பெ.சாலைமுத்து மற்றும் சில மாமன்ற உறுப்பினர்கள் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளில் விதிமீறல் கட்டடங்களுக்கு அபராதம் மற்றும் வரிவிதிப்பு செய்யப்படுவதில் மாற்றம் செய்ய வேண்டும். அபராதம் அல்லது வரிவிதிப்பு ஏதாவது ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பேசினர்.

இதற்கு பதிலளித்து மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறுகையில், விரிவாக்கப் பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வரைபடத்தை மீறி, விதிகளுக்கு புறம்பாக கட்டடங்களை விரிவுபடுத்திக் கட்டியவர்களுக்கு சதுர அடிக்கு 50 காசு வீதம் அபராதம் மற்றும் அந்த கட்டடத்துக்கான உரிய வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், மாற்றம் செய்ய வேண்டுமானால், வரிவிதிப்புக் குழுவில் மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை தெரிவித்து, உரிய திருத்தம் செய்வது குறித்து தீர்மானங்களை நிறைவேற்றி மன்றத்துக்கு தெரிவித்தால், பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகளுக்கான நடவடிக்கையில் பரிசீலனை செய்யுமாறு, சில மாமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த ஆணையர் சி.கதிரவன் கூறுகையில், இந்த விசயத்தில் மாநகராட்சி வருவாய் இழப்பு மற்றும் ஆடிட் பிரச்னை இருப்பதால், சலுகை காட்ட இயலாது என, தெரிவித்தார்.

 

தெருவிளக்குகள் எரியவில்லையா? புகார் தெரிவிக்கலாம்

Print PDF

தினமணி       13.11.2014

தெருவிளக்குகள் எரியவில்லையா? புகார் தெரிவிக்கலாம்

மதுரை மாநகராட்சிப் பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை என்றால், குறிப்பிட்ட மொபைல் எண்களில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையாளர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வார்டு பகுதிகளில் எரியாத தெருவிளக்குகள் பற்றிய புகார்கள், மைய அலுவலகத்திலுள்ள தகவல் மையத்திற்கு அதிக அளவில் வருகின்றன. இந்த புகார்களை சம்மந்தப்பட்ட மண்டல அலுவலர்களுக்கு தெரிவித்து, சரிசெய்வதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டு வந்தது.இதை தவிர்க்கவும், எரியாத தெருவிளக்குகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை எரிய வைப்பதற்கும் மண்டல வாரியாக புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மண்டலம்-1 (மேற்கு) பகுதியிலுள்ள 1-வது வார்டு முதல் 23-வது வார்டு வரையிலான பகுதிக்கு 91504 82691 என்ற எண்ணிலும், மண்டலம்-2 (வடக்கு) பகுதியிலுள்ள 24-வது வார்டு முதல் 49-வது வார்டு வரையிலான பகுதிக்கு 91504 82692 என்ற எண்ணிலும், மண்டலம்-3 (கிழக்கு) 50வது வார்டு முதல் 74-வது வார்டு வரையிலான பகுதிக்கு 91504 82693, மண்டலம்-4 (தெற்கு) பகுதியிலுள்ள 75-வது வார்டு முதல் 100-வது வார்டு வரையிலான பகுதிக்கு 91504 82694 ஆகிய கைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

இந்த கைபேசி எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு பழுதுகள் சரிசெய்யப்படும், எரியாத தெருவிளக்குகள் உடனடியாக எரியவைக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

 

பாதாளச் சாக்கடைப் பணி:அமைச்சர் நேரில் ஆய்வு

Print PDF
தினமணி      11.11.2014

பாதாளச் சாக்கடைப் பணி:அமைச்சர் நேரில் ஆய்வு

அம்பத்தூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

 இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி:

சென்னை குடிநீர் வாரியம் மூலம் ரூ. 74.32 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்பத்தூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் கீழ் ரெட்டிபாளையம் சாலை, ஜஷ்வய நகரில் நடைபெறும் குழாய்கள் பதிக்கும் பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

 மேலும், ஆவடியில் ரூ. 18 கோடியில் நடைபெற்று வரும் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணியையும் அவர் ஆய்வு செய்தார். இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 இந்த ஆய்வில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் பி.சந்திர மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 


Page 36 of 3988