Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பசுமை கட்டடங்களை ஊக்குவிக்க சலுகை: டிடிஏ திட்டம்

Print PDF

  தினமணி      31.10.2014

பசுமை கட்டடங்களை ஊக்குவிக்க சலுகை: டிடிஏ திட்டம்

பசுமைக் கட்டடங்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு சலுகைகள் வழங்க தில்லி மேம்பாட்டு நிறுவனம் (டிடிஏ) திட்டமிட்டு வருகிறது. இதற்கான வரைவு திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.

இது தொடர்பாக தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கில் தில்லி அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைச் செயலர் சஞ்சீவ் குமார் பங்கேற்று பேசியதாவது: "பசுமைக் கட்டடங்களில் குடியிருப்பவர்களுக்கு நிதி மற்றும் நிதி அல்லாத சலுகைகள் வழங்க டிடிஏ திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த வரைவு திட்டம் மத்திய அரசு உருவாக்கி வரும் நவீன நகரங்களுக்கு ஒரு மைல்கல்லாக அமையும்' என்று கூறினார்.

இந்தியா கிரீன் பிஸ்னஸ் கவுன்சிலின் தலைவர் பிரேம் சி ஜெயின் பேசுகையில், "பசுமைக் கட்டடங்களை கட்டுவோருக்கு கூடுதல் தளங்கள் அமைக்க அனுமதி அளிக்கலாம். இது நிதி அல்லாத சலுகைகளாகும்.

அதே நேரத்தில் இந்த வகையான கட்டடங்களுக்கு சொத்து வரி போன்ற வரிச் சலுகைகள் வழங்கலாம். இது நிதிச் சலுகைகளாகும் என்று கூறினார்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்ற புது தில்லி தொகுதி எம்.பி. மீனாட்சி லேகி பேசுகையில், "பசுமைக் கட்டடங்கள் அமைக்க மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். இந்த விவகாரத்தில் டிடிஏவை தவிர பிற அரசுத் துறைகளும் உதவி செய்யும்.

அதேபோல் பெரிய கட்டடங்களில் சேரும் கழிவுகளை மறுசுழற்சி செய்து அதன் மூலம் கிடைக்கும் எரிவாயுவை பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட வேண்டும்' என்று கூறினார்.

 

மின் செலவினத்தை குறைக்கும் திட்டம்; வரும் 1ல் மாநகராட்சியில் அமல்

Print PDF

  தினமலர்          30.10.2014

மின் செலவினத்தை குறைக்கும் திட்டம்; வரும் 1ல் மாநகராட்சியில் அமல்

திருப்பூர் : தமிழகத்தில், முதன்முறையாக, தெருவிளக்கு மின்சாரம், பராமரிப்பு செலவினத்தை மிச்சப்படுத்தும் புதிய திட்டம், தனியார் நிறுவன பங்களிப்புடன் திருப்பூர் மாநகராட்சியில் அமல்படுத்தப் பட உள்ளது. இதன் மூலம் மூன்று கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில், அதிக மின் செலவு ஏற்படும் 40 வாட்ஸ் டியூப் லைட்கள் 15,448 உள்ளன. 250 வாட்ஸ் சோடியம் ஆவிவிளக்குகள் 666; 150 வாட்ஸ் சோடியம் ஆவிவிளக்குகள் 57; 250 வாட்ஸ் மெட்டல் அலாய் விளக்குகள் 1,794 மற்றும் மெர்குரி விளக்குகள் உட்பட 24,575 தெருவிளக்குகள் உள்ளன. மேலும், 280 இடங்களில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.மாநகராட்சி தெருவிளக்குகளுக்கு மின் கட்டணமாக மாதம் 35 லட்சம் ரூபாய் வீதம், 12 மாதங்களுக்கு 4.20 கோடி; தெருவிளக்கு பராமரிப்புக்கு 1.80 கோடி என ஆண்டுக்கு ஆறு கோடி ரூபாய் வரை செலவாகிறது. தெரு விளக்கு பராமரிப்பு பணி, மின்சாரம் சேமிப்பு, புதிய மின் விளக்குகள் அமைத்தல் ஆகியவற்றுக்கு, ஒருங்கிணைந்த நகர்ப்புறவளர்ச்சி திட்டத்தின் கீழ் 28.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 40 வாட்ஸ் டியூப் லைட்களுக்கு பதிலாக 15 வாட்ஸ் எல்.இ.டி., பல்பு பொருத்தப்படும்; விடுபட்ட பகுதிகளில் புதிதாக 5,800 தெருவிளக்குகள் அமைக்கப்படுகின்றன.

எல்.இ.டி., பல்ப் பொருத்துவதன் மூலம், தெருவிளக்குகளுக்கு செலவாகும் மின்சாரத்தில், 35 சதவீதம் சேமிக்கப்படும்; பராமரிப்பு கட்டணத்தில் 15 சதவீதம் குறையும். இத்திட்டத்தை செயல்படுத்த, தனியார் நிறுவனத்துடன் 10 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் ஜி.ஐ.எஸ்., தொழில் நுட்பம் மூலம் கண்காணிக்கப்படும். இதனால், எரியாத மின் விளக்குகள் கண்டறியப்பட்டு, 100 சதவீத தெருவிளக்குகள் எரிவது உறுதி செய்யப்படும்.தமிழகத்தில் முதன்முறையாக, திருப்பூர் மாநகராட்சியில் வரும் நவ., 1ல் இத்திட்டம் துவங்கப்பட உள்ளது. இதன் மூலம், தெருவிளக்கு மின் கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவினத்தில் 50 சதவீதம் வரை குறையும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி கமிஷனர் அசோகனிடம் கேட்டபோது, ""மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சியிலும், மின் சேமிப்பு மற்றும் பராமரிப்பை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, தற்போதைய அடிப்படை மின்சார செலவினம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மூன்றாம் நிலை தனி வல்லுனர் குழு ஆய்வு செய்து, அனைத்து பணிகளும் முடிந்துள்ளன; வரும் 1ம் தேதி முதல், திட்ட பணிகள் துவங்கும்,'' என்றார்.

 

தில்லி மார்க்கெட்டுகளை மேம்படுத்த பெருநிறுவனங்களை நாடும் மாநகராட்சிகள்

Print PDF

 தினமணி

தில்லி மார்க்கெட்டுகளை மேம்படுத்த பெருநிறுவனங்களை நாடும் மாநகராட்சிகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க சாந்தினி செüக் உள்பட பிரபல மார்க்கெட் பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பெருநிறுவனங்களிடம் தில்லி மாநகராட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழைய தில்லி, கரோல் பக், கம்லா மார்க்கெட், பஹர்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பொதுச் சேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களிடம் மாநகராட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன.

தங்களின் கீழ் வரும் பள்ளிகள், மருத்துவமனைகள், சமுதாய மையங்கள் ஆகியவற்றை பராமரிப்பதிலும் பெருநிறுவனங்களை பங்குகொள்ளச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் போன்ற சமூகப் பணிகளில் பெருநிறுவனங்கள் தங்களின் லாபத்தின் ஒரு பகுதியை பங்களிப்பு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

 


Page 40 of 3988